அத்தியாயம்: 32, பாடம்: 40, ஹதீஸ் எண்: 3355

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، – وَاللَّفْظُ لاِبْنِ رَافِعٍ – قَالَ ابْنُ رَافِعٍ حَدَّثَنَا وَقَالَ الآخَرَانِ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، أَنَّ أُسَامَةَ بْنَ زَيْدٍ، أَخْبَرَهُ :‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَكِبَ حِمَارًا عَلَيْهِ إِكَافٌ تَحْتَهُ قَطِيفَةٌ فَدَكِيَّةٌ وَأَرْدَفَ وَرَاءَهُ أُسَامَةَ وَهُوَ يَعُودُ سَعْدَ بْنَ عُبَادَةَ فِي بَنِي الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ وَذَاكَ قَبْلَ وَقْعَةِ بَدْرٍ حَتَّى مَرَّ بِمَجْلِسٍ فِيهِ أَخْلاَطٌ مِنَ الْمُسْلِمِينَ وَالْمُشْرِكِينَ عَبَدَةِ الأَوْثَانِ وَالْيَهُودِ فِيهِمْ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ وَفِي الْمَجْلِسِ عَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ فَلَمَّا غَشِيَتِ الْمَجْلِسَ عَجَاجَةُ الدَّابَّةِ خَمَّرَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ أَنْفَهُ بِرِدَائِهِ ثُمَّ قَالَ لاَ تُغَبِّرُوا عَلَيْنَا ‏.‏ فَسَلَّمَ عَلَيْهِمُ النَّبِيُّ صلى الله عليه وسلم ثُمَّ وَقَفَ فَنَزَلَ فَدَعَاهُمْ إِلَى اللَّهِ وَقَرَأَ عَلَيْهِمُ الْقُرْآنَ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ أَيُّهَا الْمَرْءُ لاَ أَحْسَنَ مِنْ هَذَا إِنْ كَانَ مَا تَقُولُ حَقًّا فَلاَ تُؤْذِنَا فِي مَجَالِسِنَا وَارْجِعْ إِلَى رَحْلِكَ فَمَنْ جَاءَكَ مِنَّا فَاقْصُصْ عَلَيْهِ ‏.‏ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ اغْشَنَا فِي مَجَالِسِنَا فَإِنَّا نُحِبُّ ذَلِكَ ‏.‏ قَالَ فَاسْتَبَّ الْمُسْلِمُونَ وَالْمُشْرِكُونَ وَالْيَهُودُ حَتَّى هَمُّوا أَنْ يَتَوَاثَبُوا فَلَمْ يَزَلِ النَّبِيُّ صلى الله عليه وسلم يُخَفِّضُهُمْ ثُمَّ رَكِبَ دَابَّتَهُ حَتَّى دَخَلَ عَلَى سَعْدِ بْنِ عُبَادَةَ فَقَالَ ‏ “‏ أَىْ سَعْدُ أَلَمْ تَسْمَعْ إِلَى مَا قَالَ أَبُو حُبَابٍ – يُرِيدُ عَبْدَ اللَّهِ بْنَ أُبَىٍّ – قَالَ كَذَا وَكَذَا ‏”‏ ‏.‏ قَالَ اعْفُ عَنْهُ يَا رَسُولَ اللَّهِ وَاصْفَحْ فَوَاللَّهِ لَقَدْ أَعْطَاكَ اللَّهُ الَّذِي أَعْطَاكَ وَلَقَدِ اصْطَلَحَ أَهْلُ هَذِهِ الْبُحَيْرَةِ أَنْ يُتَوِّجُوهُ فَيُعَصِّبُوهُ بِالْعِصَابَةِ فَلَمَّا رَدَّ اللَّهُ ذَلِكَ بِالْحَقِّ الَّذِي أَعْطَاكَهُ شَرِقَ بِذَلِكَ فَذَلِكَ فَعَلَ بِهِ مَا رَأَيْتَ ‏.‏ فَعَفَا عَنْهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏.‏


حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا حُجَيْنٌ، – يَعْنِي ابْنَ الْمُثَنَّى – حَدَّثَنَا لَيْثٌ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، فِي هَذَا الإِسْنَادِ بِمِثْلِهِ وَزَادَ وَذَلِكَ قَبْلَ أَنْ يُسْلِمَ عَبْدُ اللَّهِ ‏

நபி (ஸல்) கழுதையொன்றில் சேணம் விரித்து, அதில் ‘ஃபதக்’ நகர் குஞ்சம் வைத்த முரட்டுத் துணி விரித்து, அதில் அமர்ந்தவாறு பயணம் செய்தார்கள். என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக்கொண்டார்கள். ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாரிடையே (உடல் நலமில்லாமல்) இருந்த ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்களை உடல்நலம் விசாரிக்கச் சென்றார்கள்.

இது பத்ருப் போர் நிகழ்ச்சிக்கு முன்னால் நடந்தது. (வழியில்) நபியவர்கள் ஓர் அவையைக் கடந்துசென்றார்கள். அந்த அவையில் முஸ்லிம்களும் சிலை வழிபாட்டாளர்களான இணைவைப்போரும் யூதர்களும் கலந்து இருந்தார்கள்.

அவர்களிடையே (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் ஸலூலும் இருந்தார். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களும் இருந்தார்கள். (எங்கள் வாகனப்) பிராணியின் (காலடிப்) புழுதி அந்த அவையைச் சூழ்ந்தபோது, அப்துல்லாஹ் பின் உபை, தனது மேல்துண்டால் தனது முகத்தைப் பொத்திக்கொண்டு, “எங்கள்மீது புழுதியைக் கிளப்பாதீர்கள்” என்று சொன்னார்.

நபி (ஸல்) அந்த அவையோருக்கு முகமன் (ஸலாம்) கூறினார்கள். பிறகு, தமது வாகனத்தை நிறுத்தி இறங்கி, அவர்களை அல்லாஹ்வின்(மார்க்கத்தின்)பால் அழைத்தார்கள். அவர்களுக்குக் குர்ஆன் வசனங்களை ஓதிக்காட்டினார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் உபை, “மனிதரே! நீர் கூறுகின்ற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிட அழகியது வேறொன்றுமில்லை. ஆனாலும், அதை எங்களுடைய (இத்தகைய) அவைகளில் கூறி எங்களுக்குத் தொல்லை கொடுக்காதீர். உமது இருப்பிடத்திற்குச் சென்றுவிடும். எங்களில் உம்மிடம் வருகின்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும்” என்றார்.

(இதைக் கேட்ட) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி), “(ஆம்; அல்லாஹ்வின் தூதரே! இதை) எங்கள் அவைகளில் வெளிப்படுத்துங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகின்றோம்” என்று சொன்னார்கள்.

இதற்கிடையே முஸ்லிம்களும் இணைவைப்போரும் யூதர்களும் ஒருவரையொருவர் ஏசிக் கொண்டே ஒருவர் மீதொருவர் பாய்ந்து(தாக்கிக்)கொள்ள முற்பட்டனர். அப்போது நபி (ஸல்) மக்களை சமாதானப்படுத்திக்கொண்டே இருந்தார்கள்.

பின்னர் தமது வாகனத்தில் ஏறி (உடல்நலமில்லாமல் இருந்த) ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் சென்று, “ஸஅதே! (உங்கள் குலத்தாரான) அபூஹுபாப் (அப்துல்லாஹ் பின் உபை)  சொன்னதை நீங்கள் கேள்விப்பட்டீர்களா?” என்று கேட்டு, “அப்துல்லாஹ் பின் உபை இப்படி இப்படிக் கூறினார்” என்று விளக்கினார்கள்.

அதற்கு ஸஅத் பின் உபாதா (ரலி), “அவரை மன்னித்து விட்டுவிடுங்கள் அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (மதீனா) நகரத்தார் அவருக்குக் கிரீடம் அணிவித்து அவருக்கு முடி சூட்ட முடிவு செய்திருந்த நிலையில்தான், அல்லாஹ் உங்களுக்கு இ(ந்த நபித்துவம் மற்றும் தலைமைத்துவத்)தை வழங்கினான். அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய சத்திய(மார்க்க)த்தின் மூலம் அவர்களின் எதிர்பார்ப்பை நிராகரித்தபோது, அதனால் அவர் பொருமினார். அதுதான் நீங்கள் பார்த்தபடி அவர் நடந்துகொண்டதற்குக் காரணம்” என்று கூறினார்கள். ஆகவே, நபி (ஸல்) அப்துல்லாஹ்வை மன்னித்துவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)


குறிப்பு :

லைஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “இது அப்துல்லாஹ் பின் உபை, தம்மை ஒரு முஸ்லிம் என்று கூறிக்கொள்வதற்கு முன்னர் (இறைமறுப்பாளராக இருந்தபோது) நடந்ததாகும்” என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment