அத்தியாயம்: 32, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3275

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ عَنْ أَبِي النَّضْرِ، عَنْ كِتَابِ، رَجُلٍ مِنْ أَسْلَمَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم يُقَالُ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي أَوْفَى :‏

فَكَتَبَ إِلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ حِينَ سَارَ إِلَى الْحَرُورِيَّةِ يُخْبِرُهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ فِي بَعْضِ أَيَّامِهِ الَّتِي لَقِيَ فِيهَا الْعَدُوَّ يَنْتَظِرُ حَتَّى إِذَا مَالَتِ الشَّمْسُ قَامَ فِيهِمْ فَقَالَ ‏”‏ يَا أَيُّهَا النَّاسُ لاَ تَتَمَنَّوْا لِقَاءَ الْعَدُوِّ وَاسْأَلُوا اللَّهَ الْعَافِيَةَ فَإِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا وَاعْلَمُوا أَنَّ الْجَنَّةَ تَحْتَ ظِلاَلِ السُّيُوفِ ‏”‏ ‏ ثُمَّ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَالَ ‏”‏ اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ وَمُجْرِيَ السَّحَابِ وَهَازِمَ الأَحْزَابِ اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ ‏”‏ ‏

உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்), ஹரூரி(காரிஜி)ய்யாக்களை எதிர்த்துப் போருக்குச் சென்றபோது, அவர்களுக்கு அஸ்லம் குலத்தைச் சேர்ந்த நபித்தோழரான அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) கடிதம் எழுதினார்கள். அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எதிரிகளைச் சந்தித்த ஒரு நாளில், (நண்பகல் நேரம்வரை) காத்திருந்தார்கள். சூரியன் (உச்சியிலிருந்து) சாய்ந்ததும் மக்களிடையே எழுந்து நின்று, “மக்களே! எதிரிகளை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசை கொள்ளாதீர்கள். அல்லாஹ்விடம் (போர் அழிவுகளிலிருந்து) பாதுகாப்புக் கோருங்கள். அவ்வாறு எதிரிகளைச் சந்திக்க நேர்ந்துவிட்டால், (போரில் ஏற்படும் துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாமல்) பொறுமையாக இருங்கள். அறிந்துகொள்ளுங்கள்: (அநீதிக்கெதிராக உயர்த்தப்படும்) வாட்களின் நிழலிலில்தான் சொர்க்கம் உள்ளது” என்று கூறினார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நின்ற வண்ணம், “இறைவா! வேதத்தை அருள்பவனே! மேகத்தை நகர்த்துபவனே! கூட்டுப் படையினரைத் தோற்கடித்தவனே! இவர்களையும் தோற்கடிப்பாயாக! இவர்களுக்கெதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) வழியாக அபுந்நள்ரு ஸாலிம் பின் உமய்யா (ரஹ்)

Share this Hadith: