அத்தியாயம்: 33, பாடம்: 3, ஹதீஸ் எண்: 3402

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ، – وَاللَّفْظُ لاِبْنِ حَاتِمٍ – قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ هِلاَلٍ، حَدَّثَنِي أَبُو بُرْدَةَ، قَالَ قَالَ أَبُو مُوسَى :‏

أَقْبَلْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَعِي رَجُلاَنِ مِنَ الأَشْعَرِيِّينَ أَحَدُهُمَا عَنْ يَمِينِي وَالآخَرُ عَنْ يَسَارِي فَكِلاَهُمَا سَأَلَ الْعَمَلَ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَسْتَاكُ فَقَالَ ‏”‏ مَا تَقُولُ يَا أَبَا مُوسَى أَوْ يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ ‏”‏ ‏.‏ قَالَ فَقُلْتُ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا أَطْلَعَانِي عَلَى مَا فِي أَنْفُسِهِمَا وَمَا شَعَرْتُ أَنَّهُمَا يَطْلُبَانِ الْعَمَلَ ‏.‏ قَالَ وَكَأَنِّي أَنْظُرُ إِلَى سِوَاكِهِ تَحْتَ شَفَتِهِ وَقَدْ قَلَصَتْ فَقَالَ ‏”‏ لَنْ أَوْ لاَ نَسْتَعْمِلُ عَلَى عَمَلِنَا مَنْ أَرَادَهُ وَلَكِنِ اذْهَبْ أَنْتَ يَا أَبَا مُوسَى أَوْ يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسِ ‏”‏ ‏.‏ فَبَعَثَهُ عَلَى الْيَمَنِ ثُمَّ أَتْبَعَهُ مُعَاذَ بْنَ جَبَلٍ فَلَمَّا قَدِمَ عَلَيْهِ قَالَ انْزِلْ وَأَلْقَى لَهُ وِسَادَةً وَإِذَا رَجُلٌ عِنْدَهُ مُوثَقٌ قَالَ مَا هَذَا قَالَ هَذَا كَانَ يَهُودِيًّا فَأَسْلَمَ ثُمَّ رَاجَعَ دِينَهُ دِينَ السَّوْءِ فَتَهَوَّدَ قَالَ لاَ أَجْلِسُ حَتَّى يُقْتَلَ قَضَاءُ اللَّهِ وَرَسُولِهِ فَقَالَ اجْلِسْ نَعَمْ ‏.‏ قَالَ لاَ أَجْلِسُ حَتَّى يُقْتَلَ قَضَاءُ اللَّهِ وَرَسُولِهِ ثَلاَثَ مَرَّاتٍ ‏.‏ فَأَمَرَ بِهِ فَقُتِلَ ثُمَّ تَذَاكَرَا الْقِيَامَ مِنَ اللَّيْلِ فَقَالَ أَحَدُهُمَا مُعَاذٌ أَمَّا أَنَا فَأَنَامُ وَأَقُومُ وَأَرْجُو فِي نَوْمَتِي مَا أَرْجُو فِي قَوْمَتِي ‏.‏

நான் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். என்னுடன் (என்) அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த இருவர் இருந்தனர். அவர்களில் ஒருவர் என் வலப் பக்கத்திலும் மற்றொருவர் என் இடப்பக்கத்திலும் இருந்தனர். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களிடம் (அரசுப்) பதவி அளிக்குமாறு கோரினர். அப்போது நபி (ஸல்) பல் துலக்கிக்கொண்டிருந்தார்கள்.

நபியவர்கள், (என்னிடம்) “அபூமூஸா! / அப்துல்லாஹ் பின் கைஸ்! நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “சத்திய(மார்க்க)த்துடன் தங்களை அனுப்பியவன் மீதாணையாக! இவர்கள் இருவரும் தமது மனத்தில் இருந்ததை என்னிடம் வெளிப்படுத்தவில்லை. இவர்கள் பதவி கேட்பார்கள் என்று எனக்குத் தெரியாது” என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் இதழுக்குக் கீழ் துருத்திக்கொண்டிருந்த பல் துலக்கும் குச்சியை (மனக்கண்களால்) இப்போதும்கூட நான் பார்க்கின்றேன்.

நபி (ஸல்), “யார் பதவியை விரும்புகிறாரோ, அவருக்கு நாம் பதவியை ஒருபோதும் கொடுக்கமாட்டோம் / கொடுப்பதில்லை. ஆகவே, அபூமூஸா! / அப்துல்லாஹ் பின் கைஸ்! நீங்கள் (ஆளுநராகச்) செல்லுங்கள்” என்று கூறி, என்னை யமன் நாட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். பிறகு என்னைப் பின்தொடர்ந்து முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டிற்கு அனுப்பிவைத்தார்கள்.

முஆத் (ரலி) என்னிடம் வந்துசேர்ந்தபோது, “வாகனத்திலிருந்து இறங்குங்கள் (இதில் அமருங்கள்)” என்று கூறிவிட்டு, (அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக) அவர்களுக்குத் தலையணை ஒன்றை எடுத்து வைத்தேன்.

அப்போது எனக்கு அருகில் ஒருவர் கட்டப்பட்டிருப்பதைக் கண்ட முஆத் (ரலி), “இவர் யார்?” என்று கேட்டார்கள். நான், “இவர் யூதராயிருந்து இஸ்லாத்தைத் தழுவினார். அதற்குப் பிறகு (இஸ்லாத்தை விட்டு வெளியேறி) தமது பழைய துன்மார்க்கத்திற்கே திரும்பிச் சென்றுவிட்டார்; யூதராகிவிட்டார்” என்று சொன்னேன்.

அதற்கு முஆத் (ரலி), “அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் தீர்ப்புப்படி இவருக்கு மரண தண்டனை அளிக்கப்படாத வரை நான் அமரமாட்டேன்” என்று கூறினார்கள். பிறகு மீண்டும் “சரி, அமருங்கள்” என்றேன். முஆத் (ரலி), “அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் தீர்ப்புப்படி இவருக்கு மரண தண்டனை அளிக்கப்படாத வரை நான் அமரமாட்டேன்” என்று கூறினார்கள்.

இவ்வாறு மூன்று முறை நடந்தது. எனவே, அவருக்கு மரண தண்டனை அளிக்கும்படி நான் உத்தரவிட, அவ்வாறே அவர் கொல்லப்பட்டார்.

பிறகு நாங்கள் இருவரும் இரவுத் தொழுகை குறித்துப் பேசிக்கொண்டோம். அப்போது எங்களில் ஒருவர், (அதாவது) முஆத் (ரலி), “நான் இரவில் சிறிது நேரம் உறங்குகின்றேன். சிறிது நேரம் நின்று வணங்குகின்றேன். நின்று வணங்குவதற்கு (இறைவனிடம்) நான் பிரதிபலனை எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்கும் நான் பிரதிபலனை எதிர்பார்க்கின்றேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

Share this Hadith:

Leave a Comment