அத்தியாயம்: 33, பாடம்: 41, ஹதீஸ் எண்: 3519

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا ثَابِتٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :‏ ‏

جَاءَ نَاسٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالُوا أَنِ ابْعَثْ مَعَنَا رِجَالاً يُعَلِّمُونَا الْقُرْآنَ وَالسُّنَّةَ ‏.‏ فَبَعَثَ إِلَيْهِمْ سَبْعِينَ رَجُلاً مِنَ الأَنْصَارِ يُقَالُ لَهُمُ الْقُرَّاءُ فِيهِمْ خَالِي حَرَامٌ يَقْرَءُونَ الْقُرْآنَ وَيَتَدَارَسُونَ بِاللَّيْلِ يَتَعَلَّمُونَ وَكَانُوا بِالنَّهَارِ يَجِيئُونَ بِالْمَاءِ فَيَضَعُونَهُ فِي الْمَسْجِدِ وَيَحْتَطِبُونَ فَيَبِيعُونَهُ وَيَشْتَرُونَ بِهِ الطَّعَامَ لأَهْلِ الصُّفَّةِ وَلِلْفُقَرَاءِ فَبَعَثَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَيْهِمْ فَعَرَضُوا لَهُمْ فَقَتَلُوهُمْ قَبْلَ أَنْ يَبْلُغُوا الْمَكَانَ ‏.‏ فَقَالُوا اللَّهُمَّ بَلِّغْ عَنَّا نَبِيَّنَا أَنَّا قَدْ لَقِينَاكَ فَرَضِينَا عَنْكَ وَرَضِيتَ عَنَّا – قَالَ – وَأَتَى رَجُلٌ حَرَامًا خَالَ أَنَسٍ مِنْ خَلْفِهِ فَطَعَنَهُ بِرُمْحٍ حَتَّى أَنْفَذَهُ ‏.‏ فَقَالَ حَرَامٌ فُزْتُ وَرَبِّ الْكَعْبَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأَصْحَابِهِ ‏ “‏ إِنَّ إِخْوَانَكُمْ قَدْ قُتِلُوا وَإِنَّهُمْ قَالُوا اللَّهُمَّ بَلِّغْ عَنَّا نَبِيَّنَا أَنَّا قَدْ لَقِينَاكَ فَرَضِينَا عَنْكَ وَرَضِيتَ عَنَّا ‏”‏

மக்களில் சிலர்  நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எங்களுக்குக் குர்ஆனையும் சுன்னாவையும் கற்பிப்பதற்காக எங்களுடன் சிலரை அனுப்பிவையுங்கள்” என்று வேண்டிக்கொண்டனர். அதற்கிணங்க அன்ஸாரிகளில் எழுபது பேரை அவர்களுடன் நபி (ஸல்) அனுப்பிவைத்தார்கள். குர்ஆன் அறிஞர்கள் (அல்குர்ராஉ) எனப்படுவர். அவர்களில் என் தாய்மாமா ஹராம் பின் மில்ஹான் (ரலி) அவர்களும் ஒருவர் ஆவார்.

அவர்கள் (எழுபது பேரும்) இரவில் குர்ஆனை ஓதுவார்கள்; ஒருவருக்கொருவர் கற்றுக்கொடுப்பார்கள்; கற்றுக்கொள்வார்கள். பகல் நேரங்களில் (தேவையுடையோருக்குத்) தண்ணீர் கொண்டுவந்து (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் வைப்பார்கள். விறகு சேகரித்து வந்து அதை விற்றுக் காசாக்கி அதன் மூலம் திண்ணைவாசிகளுக்கும் ஏழைகளுக்கும் உணவு வாங்கிக் கொடுப்பவர்கள்.

நபி (ஸல்) இவர்களை (அந்த மக்களோடு) அனுப்பியபோது, அவர்கள் (குறிப்பிட்ட) அந்த இடத்திற்குப் போய்ச் சேர்வதற்கு முன்பே அவர்கள் அனைவரையும் (அழைத்துச் சென்ற) அக்கூட்டத்தார் கொன்றுவிட்டனர்.

அவர்கள் (இறக்கும் தறுவாயில்), “இறைவா! நாங்கள் உன்னிடம் வந்து சேர்ந்துவிட்டோம். உன்னை நாங்கள் உவந்துகொண்டோம்; எங்களை நீயும் உவந்துகொண்டாய் என்று எங்களைப் பற்றி எங்கள் நபியிடம் தெரிவித்துவிடுவாயாக!” என்று வேண்டினர்.

என் தாய்மாமா ஹராம் (ரலி) அவர்களுக்குப் பின்னால் ஒருவன் வந்து ஈட்டியால் குத்தி, அது அவர்களை ஊடுருவிச் சென்றது. அப்போது ஹராம் (ரலி), “கஅபாவின் அதிபதிமீது ஆணையாக! நான் வெற்றி பெற்றுவிட்டேன்” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (இறையறிவிப்பின் மூலம் இது குறித்து அறிந்து) தம் தோழர்களிடம், “உங்கள் சகோதரர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அவர்கள் (இறக்கும் தறுவாயில்) ‘இறைவா! நாங்கள் உன்னிடம் வந்து சேர்ந்துவிட்டோம். உன்னை நாங்கள் உவந்து கொண்டோம்; எங்களை நீயும் உவந்துகொண்டாய் என எங்கள் நபியிடம் தெரிவித்துவிடுவாயாக’ என்று வேண்டிக்கொண்டனர்” எனத் தெரிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

Share this Hadith:

Leave a Comment