அத்தியாயம்: 33, பாடம்: 7, ஹதீஸ் எண்: 3412

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَابْنُ أَبِي عُمَرَ،  – وَاللَّفْظُ لأَبِي بَكْرٍ – قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ قَالَ :‏

اسْتَعْمَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلاً مِنَ الأَسْدِ يُقَالُ لَهُ ابْنُ اللُّتْبِيَّةِ – قَالَ عَمْرٌو وَابْنُ أَبِي عُمَرَ عَلَى الصَّدَقَةِ – فَلَمَّا قَدِمَ قَالَ هَذَا لَكُمْ وَهَذَا لِي أُهْدِيَ لِي قَالَ فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ وَقَالَ ‏”‏ مَا بَالُ عَامِلٍ أَبْعَثُهُ فَيَقُولُ هَذَا لَكُمْ وَهَذَا أُهْدِيَ لِي ‏.‏ أَفَلاَ قَعَدَ فِي بَيْتِ أَبِيهِ أَوْ فِي بَيْتِ أُمِّهِ حَتَّى يَنْظُرَ أَيُهْدَى إِلَيْهِ أَمْ لاَ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لاَ يَنَالُ أَحَدٌ مِنْكُمْ مِنْهَا شَيْئًا إِلاَّ جَاءَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ يَحْمِلُهُ عَلَى عُنُقِهِ بَعِيرٌ لَهُ رُغَاءٌ أَوْ بَقَرَةٌ لَهَا خُوَارٌ أَوْ شَاةٌ تَيْعِرُ ‏”‏ ‏.‏ ثُمَّ رَفَعَ يَدَيْهِ حَتَّى رَأَيْنَا عُفْرَتَىْ إِبْطَيْهِ ثُمَّ قَالَ ‏”‏ اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ ‏”‏‏ مَرَّتَيْنِ ‏


حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالاَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ، قَالَ اسْتَعْمَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم ابْنَ اللُّتْبِيَّةِ – رَجُلاً مِنَ الأَزْدِ – عَلَى الصَّدَقَةِ فَجَاءَ بِالْمَالِ فَدَفَعَهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ هَذَا مَالُكُمْ وَهَذِهِ هَدِيَّةٌ أُهْدِيَتْ لِي ‏.‏ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ “‏ أَفَلاَ قَعَدْتَ فِي بَيْتِ أَبِيكَ وَأُمِّكَ فَتَنْظُرَ أَيُهْدَى إِلَيْكَ أَمْ لاَ ‏”‏ ‏.‏ ثُمَّ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَطِيبًا ‏.‏ ثُمَّ ذَكَرَ نَحْوَ حَدِيثِ سُفْيَانَ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘அல்அஸ்து’ குலத்தாரில் ஒருவரை (பனூ ஸுலைம் குலத்தாரிடமிருந்து) ஸகாத்களை வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். அவர், இப்னுல் லுத்பிய்யா என அழைக்கப்பட்டார். அவர் (ஸகாத்களை வசூலித்துவிட்டு) வந்து (கணக்கு ஒப்படைத்தபோது), “இது உங்களுக்குரியது; இது எனக்குரியது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறினார்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எழுந்து, சொற்பொழிவு மேடை மீது நின்று அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, “நாம் அனுப்பும் அதிகாரியின் நிலை என்ன (எனப் பாருங்கள்!) அவர் (பணியை முடித்துத் திரும்பிவந்து) ‘இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது’ என்று கூறுகிறார். அவர், தம் தந்தையின் வீட்டிலோ தாயின் வீட்டிலோ உட்கார்ந்துகொண்டு, தமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! முஹம்மதின் உயிர் கையிலுள்ளவன்மீது ஆணையாக! உங்களில் யாரேனும் அ(ந்தப் பொதுச் சொத்)திலிருந்து (முறைகேடாக) எதையேனும் பெற்றால் மறுமை நாளில் அதைத் தமது கழுத்தில் சுமந்துகொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக்கொண்டிருக்கும். மாடாகவோ ஆடாகவோ இருந்தால் அது கத்திக்கொண்டிருக்கும்” என்று கூறினார்கள்.

பிறகு அவர்களுடைய அக்குள்களின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்திவிட்டு, “இறைவா! (உன் கட்டளையை) எடுத்துரைத்துவிட்டேனா?” என்று இரண்டு முறை கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி)


குறிப்பு :

மஅமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி (ஸல்) அல்அஸ்து குலத்தைச் சேர்ந்த இப்னுல் லுத்பிய்யா என்பவரை ஸகாத் வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். அவர் (ஸகாத் வசூலித்துவிட்டுத் திரும்பி)வந்து, ‘இது உங்களுக்குரிய செல்வம். இது எனக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு’ என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவரிடம், “நீர் உம்முடைய தாய் / தந்தையின் வீட்டில் உட்கார்ந்திரும்! உமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பார்க்கலாம்’ என்று கூறினார்கள். பிறகு எழுந்து நின்று (எங்களுக்கு) உரையாற்றினார்கள் …” என்று ஆரம்பமாகிறது.