அத்தியாயம்: 36, பாடம்: 12, ஹதீஸ் எண்: 3755

وَحَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أُسَامَةَ بْنِ الْهَادِ اللَّيْثِيُّ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ جَعْفَرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْحَكَمِ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ :‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ غَطُّوا الإِنَاءَ وَأَوْكُوا السِّقَاءَ فَإِنَّ فِي السَّنَةِ لَيْلَةً يَنْزِلُ فِيهَا وَبَاءٌ لاَ يَمُرُّ بِإِنَاءٍ لَيْسَ عَلَيْهِ غِطَاءٌ أَوْ سِقَاءٍ لَيْسَ عَلَيْهِ وِكَاءٌ إِلاَّ نَزَلَ فِيهِ مِنْ ذَلِكَ الْوَبَاءِ ‏”‏


وَحَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ قَالَ ‏ “‏ فَإِنَّ فِي السَّنَةِ يَوْمًا يَنْزِلُ فِيهِ وَبَاءٌ ‏”‏ ‏.‏ وَزَادَ فِي آخِرِ الْحَدِيثِ قَالَ اللَّيْثُ فَالأَعَاجِمُ عِنْدَنَا يَتَّقُونَ ذَلِكَ فِي كَانُونَ الأَوَّلِ

“பாத்திரங்களை (உறங்குமுன்) மூடிவையுங்கள்; தோல் பையின் வாய்ப் பகுதியைச் சுருக்கிட்டுக் கட்டிவையுங்கள். ஏனெனில், ஆண்டின் ஓர் இரவில் கொள்ளை நோய் இறங்குகிறது. கடந்து செல்லும் அந்த நோயில் சிறிதளவாவது மூடியில்லாத பாத்திரத்திலும் சுருக்கிட்டுக் கட்டிவைக்காத தண்ணீர் பையிலும் இறங்காமல் இருப்பதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)


குறிப்பு :

அலீ அல்ஜஹ்ழமீ (ரஹ்) வழி அறிவிப்பில், “ஆண்டில் ஒரு நாள் உண்டு. அந்நாளில் கொள்ளை நோய் இறங்குகிறது” என்று இடம்பெற்றுள்ளது. ஹதீஸின் இறுதியில் “நமக்கு அருகிலுள்ள அரபியர் அல்லாதோர் அந்த நாள், கானூலுல் அவ்வல் (டிஸம்பர்) மாதத்தில் வருவதாகக் கருதி அஞ்சுகின்றனர்” என்று லைஸ் பின் ஸஅத் (ரஹ்) கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment