அத்தியாயம்: 36, பாடம்: 32, ஹதீஸ் எண்: 3825

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ فُضَيْلِ بْنِ غَزْوَانَ، عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ رَجُلاً مِنَ الأَنْصَارِ بَاتَ بِهِ ضَيْفٌ فَلَمْ يَكُنْ عِنْدَهُ إِلاَّ قُوتُهُ وَقُوتُ صِبْيَانِهِ فَقَالَ لاِمْرَأَتِهِ نَوِّمِي الصِّبْيَةَ وَأَطْفِئِي السِّرَاجَ وَقَرِّبِي لِلضَّيْفِ مَا عِنْدَكِ – قَالَ – فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ ‏{ وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ ‏…}  


وَحَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لِيُضِيفَهُ فَلَمْ يَكُنْ عِنْدَهُ مَا يُضِيفُهُ فَقَالَ ‏ “‏ أَلاَ رَجُلٌ يُضِيفُ هَذَا رَحِمَهُ اللَّهُ ‏”‏ ‏.‏ فَقَامَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ يُقَالُ لَهُ أَبُو طَلْحَةَ فَانْطَلَقَ بِهِ إِلَى رَحْلِهِ ‏.‏ وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ جَرِيرٍ وَذَكَرَ فِيهِ نُزُولَ الآيَةِ كَمَا ذَكَرَهُ وَكِيعٌ ‏.‏

ஓர் அன்ஸாரித் தோழரிடம் இரவில் விருந்தாளி ஒருவர் வந்தார். அத்தோழரிடம் அவருக்கும் அவருடைய குழந்தைகளுக்கும் தேவையான உணவைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. எனவே, அவர் தம் மனைவியிடம், “குழந்தைகளை (எப்படியாவது சமாதானப்படுத்தி) தூங்க வைத்துவிடு; விளக்கை (ஏற்றிவிடுவதைப் போன்று பாவனை செய்து) அணைத்துவிடு. உன்னிடம் உள்ள உணவை விருந்தாளிக்கு அருகில் வைத்துவிடு” என்று கூறினார். இது தொடர்பாகவே, “தமக்கே தேவையிருந்தும்கூட தம்மைவிடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குவார்கள்” எனும் (59:9) இறை வசனம் அருளப்பெற்றது.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

அபூகுரைப் (ரஹ்) வழி அறிவிப்பு, “ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விருந்தாளியாக வந்தார். அவருக்கு விருந்தளிப்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எதுவும் இருக்கவில்லை. எனவே, (தம் தோழர்களை நோக்கி), “இவருக்கு விருந்தளிக்கும் யாரேனும் உண்டா? அவருக்கு அல்லாஹ் அருள்புரிவான்’ என்று கேட்டார்கள். அப்போது அன்ஸாரிகளில் அபூதல்ஹா (ரலி) என்பவர் எழுந்து, அந்த விருந்தாளியைத் தம் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்…” என்று ஆரம்பமாகிறது. அதில் (59:9 ஆவது) இறைவசனம் இறங்கியது தொடர்பான குறிப்பும் காணப்படுகிறது.

மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

Share this Hadith:

Leave a Comment