அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3723

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ أَبِي عُمَرَ، – وَاللَّفْظُ لاِبْنِ أَبِي عُمَرَ – قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سُلَيْمَانَ الأَحْوَلِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي عِيَاضٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ :‏

لَمَّا نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ النَّبِيذِ فِي الأَوْعِيَةِ قَالُوا لَيْسَ كُلُّ النَّاسِ يَجِدُ فَأَرْخَصَ لَهُمْ فِي الْجَرِّ غَيْرِ الْمُزَفَّتِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தோல் பாத்திரங்களைத் தவிர  (பானங்களைப்) பிற பாத்திரங்களில் ஊற்றிவைப்பதற்குத் தடை விதித்தபோது, “மக்கள் அனைவருமே தோல் பாத்திரங்களைப் பெற்றிருப்பதில்லையே?” என்று மக்கள் கேட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தார் பூசப்படாத சுட்ட களிமண் பாத்திரத்தைப் பயன்படுத்திக்கொள்ள மக்களுக்கு அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3722

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مُعَرِّفِ بْنِ وَاصِلٍ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ كُنْتُ نَهَيْتُكُمْ عَنِ الأَشْرِبَةِ فِي ظُرُوفِ الأَدَمِ فَاشْرَبُوا فِي كُلِّ وِعَاءٍ غَيْرَ أَنْ لاَ تَشْرَبُوا مُسْكِرًا ‏”‏ ‏

“தோல் பாத்திரங்களில் ஊற்றிவைக்கப்பட்ட பானங்களைத் தவிர (வேறெந்த பானத்தையும்) அருந்த வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். இனி எல்லாப் பாத்திரங்களிலும் அருந்திக்கொள்ளுங்கள். எனினும், போதை தரக்கூடியதை அருந்தாதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : புரைதா (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3721

وَحَدَّثَنَا حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا ضَحَّاكُ بْنُ مَخْلَدٍ، عَنْ سُفْيَانَ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ نَهَيْتُكُمْ عَنِ الظُّرُوفِ وَإِنَّ الظُّرُوفَ – أَوْ ظَرْفًا – لاَ يُحِلُّ شَيْئًا وَلاَ يُحَرِّمُهُ وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ ‏”‏

“பாத்திரங்கள் சிலவற்றை(க் குடிபானங்களுக்கு)ப் பயன்படுத்த வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன்.  பாத்திரங்கள் அல்லது (சிலவகைப்) பாத்திரம் எந்த ஒரு பானத்தையும் அனுமதிக்கப்பட்டதாகவோ தடை செய்யப்பட்டதாக ஆக்குவதில்லை. போதை தரும் எல்லாமே தடை செய்யப்பட்டதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : புரைதா (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3720

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، قَالَ أَبُو بَكْرٍ عَنْ أَبِي سِنَانٍ، وَقَالَ ابْنُ الْمُثَنَّى، عَنْ ضِرَارِ بْنِ مُرَّةَ، عَنْ مُحَارِبٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا ضِرَارُ بْنُ مُرَّةَ، أَبُو سِنَانٍ عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ قَالَ :‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ نَهَيْتُكُمْ عَنِ النَّبِيذِ إِلاَّ فِي سِقَاءٍ فَاشْرَبُوا فِي الأَسْقِيَةِ كُلِّهَا وَلاَ تَشْرَبُوا مُسْكِرًا ‏”‏

“தோல் பாத்திரம் தவிர வேறெதிலும் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். இனி, எல்லாப் பாத்திரங்களிலும் (ஊற்றி வைத்து) அருந்திக்கொள்ளுங்கள். போதை தரக்கூடியதை அருந்தாதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : புரைதா (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3719

وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ :‏

كَانَ يُنْتَبَذُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي سِقَاءٍ فَإِذَا لَمْ يَجِدُوا سِقَاءً نُبِذَ لَهُ فِي تَوْرٍ مِنْ حِجَارَةٍ فَقَالَ بَعْضُ الْقَوْمِ وَأَنَا أَسْمَعُ لأَبِي الزُّبَيْرِ مِنْ بِرَامٍ قَالَ مِنْ بِرَامٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகத் தோல் பாத்திரத்தில் பானங்கள் ஊற்றிவைக்கப்பட்டுவந்தன. தோல் பாத்திரம் எதுவும் கிடைக்காவிட்டால், கல் தொட்டியொன்றில் அவர்களுக்காகப் பானங்கள் ஊற்றிவைக்கப்பட்டன.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான அபுஸ் ஸுபைர் (ரஹ்) அவர்களிடம் மக்களில் சிலர், “கல் தொட்டியிலா (ஊற்றிவைத்தனர்)?” என்று கேட்டார்கள். அதற்கு அபுஸ்ஸுபைர் (ரஹ்) “கல் தொட்டியில்தான்” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3718

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ :‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُنْبَذُ لَهُ فِي تَوْرٍ مِنْ حِجَارَةٍ ‏

நபி (ஸல்) அவர்களுக்காகக் கல் தொட்டி ஒன்றில் பானங்கள் ஊற்றிவைக்கப்பட்டுவந்தது.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3717

قَالَ أَبُو الزُّبَيْرِ وَسَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ :‏

نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْجَرِّ وَالْمُزَفَّتِ وَالنَّقِيرِ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا لَمْ يَجِدْ شَيْئًا يُنْتَبَذُ لَهُ فِيهِ نُبِذَ لَهُ فِي تَوْرٍ مِنْ حِجَارَةٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), சுட்ட களிமண் பாத்திரம், தார் பூசப்பட்ட பாத்திரம் மற்றும் பேரீச்சை மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை(க் குடிபானங்களுக்கு)ப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பானங்கள் ஊற்றிவைப்பதற்கு (பாத்திரம்) எதுவும் கிடைக்காவிட்டால், கல் தொட்டியில் அவர்களுக்காகப் பானங்கள் ஊற்றிவைக்கப்பட்டது.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3716

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ يَقُولُ :‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَى عَنِ الْجَرِّ وَالدُّبَّاءِ وَالْمُزَفَّتِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), சுட்ட களிமண் பாத்திரம், சுரைக்குடுவை மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை(க் குடிபானங்களுக்கு)ப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்ததை நான் செவியுற்றுள்ளேன்.

அறிவிப்பளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3715

وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، وَابْنِ عُمَرَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ النَّقِيرِ وَالْمُزَفَّتِ وَالدُّبَّاءِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பேரீச்சை மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம், தார் பூசப்பட்ட பாத்திரம் மற்றும் சுரைக்குடுவை ஆகியவற்றை(க் குடிபானங்களுக்கு)ப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர்கள் : ஜாபிர் (ரலி) & இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3714

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا عَبْدُ الْخَالِقِ بْنُ سَلَمَةَ قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، يَقُولُ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَقُولُ :‏

عِنْدَ هَذَا الْمِنْبَرِ – وَأَشَارَ إِلَى مِنْبَرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم – قَدِمَ وَفْدُ عَبْدِ الْقَيْسِ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلُوهُ عَنِ الأَشْرِبَةِ فَنَهَاهُمْ عَنِ الدُّبَّاءِ وَالنَّقِيرِ وَالْحَنْتَمِ ‏.‏ فَقُلْتُ لَهُ يَا أَبَا مُحَمَّدٍ وَالْمُزَفَّتِ وَظَنَنَّا أَنَّهُ نَسِيَهُ فَقَالَ لَمْ أَسْمَعْهُ يَوْمَئِذٍ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَقَدْ كَانَ يَكْرَهُ

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மிம்பரை நோக்கி சைகை செய்து, “இந்தச் சொற்பொழிவு மேடை அருகில், அப்துல் கைஸ் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து குடிபானங்கள் பற்றிக் கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுரைக்குடுவை, பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் மற்றும் மண் சாடி ஆகியவற்றை (க் குடிபானங்களுக்கு)ப் பயன்படுத்த வேண்டாமென அவர்களுக்குத் தடை விதித்தார்கள்” என்று கூறியதை நான் கேட்டேன்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக ஸயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்)


குறிப்பு :

நான் ஸயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்களிடம்,  “அபூமுஹம்மதே! தார் பூசப்பட்ட பாத்திரத்தையுமா (பயன்படுத்த வேண்டாம் எனத் தடை செய்தார்கள்)?” என்று கேட்டேன். அதை அவர்கள் மறந்துவிட்டார்களோ என்று நாங்கள் கருதினோம்.

அதற்கு ஸயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்), “அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அன்று அவ்வாறு கூறியதை நான் கேட்கவில்லை. (எனினும்,) அவர்கள் (தார் பூசப்பட்ட பாத்திரத்தை) வெறுத்துவந்தார்கள்” என்று பதிலளித்தார்கள் என்பதாக இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான அப்துல் காலிக் பின் ஸலமா (ரஹ்) கூறுகின்றார்.