அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3714

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا عَبْدُ الْخَالِقِ بْنُ سَلَمَةَ قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، يَقُولُ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَقُولُ :‏

عِنْدَ هَذَا الْمِنْبَرِ – وَأَشَارَ إِلَى مِنْبَرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم – قَدِمَ وَفْدُ عَبْدِ الْقَيْسِ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلُوهُ عَنِ الأَشْرِبَةِ فَنَهَاهُمْ عَنِ الدُّبَّاءِ وَالنَّقِيرِ وَالْحَنْتَمِ ‏.‏ فَقُلْتُ لَهُ يَا أَبَا مُحَمَّدٍ وَالْمُزَفَّتِ وَظَنَنَّا أَنَّهُ نَسِيَهُ فَقَالَ لَمْ أَسْمَعْهُ يَوْمَئِذٍ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَقَدْ كَانَ يَكْرَهُ

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மிம்பரை நோக்கி சைகை செய்து, “இந்தச் சொற்பொழிவு மேடை அருகில், அப்துல் கைஸ் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து குடிபானங்கள் பற்றிக் கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுரைக்குடுவை, பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் மற்றும் மண் சாடி ஆகியவற்றை (க் குடிபானங்களுக்கு)ப் பயன்படுத்த வேண்டாமென அவர்களுக்குத் தடை விதித்தார்கள்” என்று கூறியதை நான் கேட்டேன்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக ஸயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்)


குறிப்பு :

நான் ஸயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்களிடம்,  “அபூமுஹம்மதே! தார் பூசப்பட்ட பாத்திரத்தையுமா (பயன்படுத்த வேண்டாம் எனத் தடை செய்தார்கள்)?” என்று கேட்டேன். அதை அவர்கள் மறந்துவிட்டார்களோ என்று நாங்கள் கருதினோம்.

அதற்கு ஸயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்), “அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அன்று அவ்வாறு கூறியதை நான் கேட்கவில்லை. (எனினும்,) அவர்கள் (தார் பூசப்பட்ட பாத்திரத்தை) வெறுத்துவந்தார்கள்” என்று பதிலளித்தார்கள் என்பதாக இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான அப்துல் காலிக் பின் ஸலமா (ரஹ்) கூறுகின்றார்.

Share this Hadith:

Leave a Comment