அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3694

حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا الْقَاسِمُ، – يَعْنِي ابْنَ الْفَضْلِ – حَدَّثَنَا ثُمَامَةُ بْنُ حَزْنٍ الْقُشَيْرِيُّ قَالَ :‏

لَقِيتُ عَائِشَةَ فَسَأَلْتُهَا عَنِ النَّبِيذِ، فَحَدَّثَتْنِي أَنَّ وَفْدَ عَبْدِ الْقَيْسِ قَدِمُوا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَأَلُوا النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ النَّبِيذِ فَنَهَاهُمْ أَنْ يَنْتَبِذُوا فِي الدُّبَّاءِ وَالنَّقِيرِ وَالْمُزَفَّتِ وَالْحَنْتَمِ

நான் ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்தித்துப் பழச்சாறுகள் பற்றிக் கேட்டேன். அப்போது அவர்கள், “நபி (ஸல்) அவர்களிடம் அப்துல் கைஸ் தூதுக் குழுவினர் வந்து பழச்சாறுகள் பற்றிக் கேட்டனர். சுரைக்குடுவை, பேரீச்சை மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம், தார் பூசப்பட்ட பாத்திரம், மண் சாடி ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமென நபி (ஸல்) தடை விதித்தார்கள் என்று பதிலளித்தார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக ஸுமாமா பின் ஹஸ்னு அல் குஷைரீ (ரஹ்)