அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3696

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا عَبَّادُ بْنُ عَبَّادٍ، عَنْ أَبِي جَمْرَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، ح وَحَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَبِي جَمْرَةَ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ :‏

قَدِمَ وَفْدُ عَبْدِ الْقَيْسِ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ “‏ أَنْهَاكُمْ عَنِ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ وَالنَّقِيرِ وَالْمُقَيَّرِ ‏”‏ ‏.‏ وَفِي حَدِيثِ حَمَّادٍ جَعَلَ – مَكَانَ الْمُقَيَّرِ – الْمُزَفَّتِ ‏

நபி (ஸல்) அவர்களிடம் அப்துல் கைஸ் தூதுக் குழுவினர் வந்தபோது, “சுரைக்குடுவை, மண் சாடி, பேரீச்சை மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம், தார் பூசப்பட்ட (முகய்யர்) பாத்திரம் ஆகியவற்றை(க் குடிபானங்களுக்கு)ப் பயன்படுத்த வேண்டாமென உங்களுக்குத் தடை செய்கின்றேன்” என்று நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) வழி அறிவிப்பில், தார் பூசப்பட்ட பாத்திரம் என்பதைக் குறிக்க ‘முகய்யர்’ என்பதற்குப் பதிலாக ‘முஸஃப்பத்’ எனும் வேறொரு சொல் இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment