அத்தியாயம்: 37, பாடம்: 2, ஹதீஸ் எண்: 3849

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ حَفْصٍ عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ :‏

أَنَّ عُمَرَ، رَأَى عَلَى رَجُلٍ مِنْ آلِ عُطَارِدٍ قَبَاءً مِنْ دِيبَاجٍ أَوْ حَرِيرٍ فَقَالَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَوِ اشْتَرَيْتَهُ ‏.‏ فَقَالَ ‏”‏ إِنَّمَا يَلْبَسُ هَذَا مَنْ لاَ خَلاَقَ لَهُ ‏”‏ ‏.‏ فَأُهْدِيَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حُلَّةٌ سِيَرَاءُ فَأَرْسَلَ بِهَا إِلَىَّ ‏.‏ قَالَ قُلْتُ أَرْسَلْتَ بِهَا إِلَىَّ وَقَدْ سَمِعْتُكَ قُلْتَ فِيهَا مَا قُلْتَ قَالَ ‏”‏ إِنَّمَا بَعَثْتُ بِهَا إِلَيْكَ لِتَسْتَمْتِعَ بِهَا ‏”‏ ‏


وَحَدَّثَنِي ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ حَفْصٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ أَبِيهِ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، رَأَى عَلَى رَجُلٍ مِنْ آلِ عُطَارِدٍ ‏.‏ بِمِثْلِ حَدِيثِ يَحْيَى بْنِ سَعِيدٍ غَيْرَ أَنَّهُ قَالَ ‏ “‏ إِنَّمَا بَعَثْتُ بِهَا إِلَيْكَ لِتَنْتَفِعَ بِهَا وَلَمْ أَبْعَثْ بِهَا إِلَيْكَ لِتَلْبَسَهَا ‏”‏ ‏

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي إِسْحَاقَ، قَالَ قَالَ لِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ فِي الإِسْتَبْرَقِ قَالَ قُلْتُ مَا غَلُظَ مِنَ الدِّيبَاجِ وَخَشُنَ مِنْهُ ‏.‏ فَقَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَقُولُ رَأَى عُمَرُ عَلَى رَجُلٍ حُلَّةً مِنْ إِسْتَبْرَقٍ فَأَتَى بِهَا النَّبِيَّ صلى الله عليه وسلم ‏.‏ فَذَكَرَ نَحْوَ حَدِيثِهِمْ غَيْرَ أَنَّهُ قَالَ فَقَالَ ‏ “‏ إِنَّمَا بَعَثْتُ بِهَا إِلَيْكَ لِتُصِيبَ بِهَا مَالاً ‏”‏

உமர் (ரலி), உத்தாரித் குலத்தவரான ஒருவரிடம் கெட்டியான அல்லது சாதாரணப் பட்டு மேலங்கி ஒன்றைக் கண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), “இதை நீங்கள் வாங்கிக் கொண்டால் நன்றாயிருக்குமே?” என்று கூறினார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர்தாம் இதை (இம்மையில்) அணிவார்” என்று சொன்னார்கள்.

பிறகு (ஒருபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கோடு போட்ட பட்டாடை ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதை உமர் (ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். அதைப் பெற்ற உமர் (ரலி), “இதை எனக்குக் கொடுத்தனுப்பியுள்ளீர்கள். ஆனால், இதைப் பற்றித் நீங்கள் வேறு விதமாகத் கூறியதைக் கேட்டிருக்கின்றேனே?” என்று வினவினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(இதை விற்று) இதன் மூலம் நீங்கள் பயனடைந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை உங்களுக்குக் கொடுத்தனுப்பினேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்புகள் :

ரவ்ஹு (ரஹ்) வழி அறிவிப்பு, “உமர் பின் அல்கத்தாப் (ரலி), உத்தாரித் குலத்தவரான ஒருவரிடம் கெட்டியான அல்லது சாதாரணப் பட்டு மேலங்கி ஒன்றைக் கண்டார்கள் …” என்று ஆரம்பமாகிறது.  மேலும் அதில், “ … (இதை விற்று) இதன் மூலம் நீங்கள் பயனடைந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே உங்களுக்கு இதைக் கொடுத்தனுப்பினேன். இதை நீங்கள் அணிந்துகொள்வதற்காக உங்களுக்கு நான் கொடுத்தனுப்பவில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.

யஹ்யா பின் அபீஇஸ்ஹாக் (ரஹ்) வழி அறிவிப்பில், “என்னிடம் ஸாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்)  ‘அல்இஸ்தப்ரக்’ குறித்துக் கேட்டார்கள். நான் அது‚ ‘கெட்டி யான முரட்டுப் பட்டு’ என்று பதிலளித்தேன்” அப்போது, ஸாலிம் (ரஹ்) கூறியதாவது :

(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (பின்வருமாறு) கூறக் கேட்டுள்ளேன்:

“என் தந்தை உமர் (ரலி), ஒருவர் கெட்டிப் பட்டாடை ஒன்றை அணிந்திருப்பதைக் கண்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்…” என்று தொடங்கி, மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளவாறு குறிப்பிட்டார்கள்.

யஹ்யா (ரஹ்) வழி அறிவிக்கப்படும் இந்த ஹதீஸில், “(இதை விற்று) இதன் மூலம் ஏதேனும் செல்வத்தை நீங்கள் அடைந்துகொள்வதற்காகவே இதை உங்களுக்கு நான் கொடுத்தனுப்பினேன்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என்றும் காணப்படுகிறது.

Share this Hadith:

Leave a Comment