அத்தியாயம்: 37, பாடம்: 28, ஹதீஸ் எண்: 3942

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ أَنَّ أَبَا بَشِيرٍ الأَنْصَارِيَّ، أَخْبَرَهُ أَنَّهُ :‏

كَانَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَعْضِ أَسْفَارِهِ – قَالَ – فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَسُولاً – قَالَ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ حَسِبْتُ أَنَّهُ قَالَ وَالنَّاسُ فِي مَبِيتِهِمْ – ‏ “‏ لاَ يَبْقَيَنَّ فِي رَقَبَةِ بَعِيرٍ قِلاَدَةٌ مِنْ وَتَرٍ أَوْ قِلاَدَةٌ إِلاَّ قُطِعَتْ ‏”‏ ‏.‏ قَالَ مَالِكٌ أُرَى ذَلِكَ مِنَ الْعَيْنِ ‏

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மேற்கொண்ட பயணமொன்றில் அவர்களுடன் இருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அறிவிப்பாளர் ஒருவரை அனுப்பி, “எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (கண்ணேறு கழிவதற்காகக் கட்டப்படுகின்ற) கயிற்று மாலையோ அல்லது வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. இருந்தால் அவை வெட்டப்பட வேண்டும்” என்று அறிவிக்கச் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூபஷீர் கைஸ் பின் உபைத் அல்அன்ஸாரீ (ரலி)


குறிப்புகள் :

“அப்போது நபித்தோழர்கள் இரவில் ஓய்வெடுக்கும் இடங்களில் இருந்தார்கள் என்று அபூபஷீர் (ரலி) (கூறியதாக அப்பாத் பின் தமீம் (ரஹ்) என்னிடம்) சொன்னார் என்று நினைவு” என்பதாக (இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான) அப்துல்லாஹ் பின் அபீபக்ரு (ரஹ்) கூறியுள்ளார்.

“கண் திருஷ்டிக்காக இவ்வாறு கட்டப்படுவதையே (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை செய்தார்கள் என) நான் கருதுகின்றேன்” என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான மாலிக் பின் அனஸ் (ரஹ்) கூறுகின்றார்.

Share this Hadith:

Leave a Comment