அத்தியாயம்: 38, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3967

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ عُثْمَانُ حَدَّثَنَا وَقَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ :‏

وُلِدَ لِرَجُلٍ مِنَّا غُلاَمٌ فَسَمَّاهُ مُحَمَّدًا فَقَالَ لَهُ قَوْمُهُ لاَ نَدَعُكَ تُسَمِّي بِاسْمِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَانْطَلَقَ بِابْنِهِ حَامِلَهُ عَلَى ظَهْرِهِ فَأَتَى بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ وُلِدَ لِي غُلاَمٌ فَسَمَّيْتُهُ مُحَمَّدًا فَقَالَ لِي قَوْمِي لاَ نَدَعُكَ تُسَمِّي بِاسْمِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ تَسَمَّوْا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي فَإِنَّمَا أَنَا قَاسِمٌ أَقْسِمُ بَيْنَكُمْ ‏”‏

எங்க(ள் அன்ஸாரிக)ளில் ஒருவருக்கு ஆண் குழந்தையொன்று பிறந்தது. அதற்கு அவர், ‘முஹம்மது’ எனப் பெயர் சூட்டினார். அவருடைய குடும்பத்தார், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரை வைக்க உம்மை நாங்கள் விடமாட்டோம்” என்று கூறினர்.

ஆகவே, அவர் தம் மகனை முதுகில் சுமந்துகொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஆண் குழந்தையொன்று பிறந்தது. அவனுக்கு நான் ‘முஹம்மது’ எனப் பெயரிட்டேன். என்னுடைய சமுதாயத்தார், ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரை வைக்க உம்மை நாங்கள் விடமாட்டோம்’ என்று கூறுகின்றனர்” என்றார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “என் (இயற்)பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள். (ஆனால் ‘அபுல்காஸிம்’ எனும்) எனது குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள். ஏனெனில், நான் பங்கீடு செய்பவன் (காஸிம்) ஆவேன். உங்களிடையே நான் பங்கீடு செய்கின்றேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

Share this Hadith:

Leave a Comment