அத்தியாயம்: 38, பாடம்: 7, ஹதீஸ் எண்: 4000

حَدَّثَنَا حُسَيْنُ بْنُ حُرَيْثٍ أَبُو عَمَّارٍ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا طَلْحَةُ بْنُ يَحْيَى عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ قَالَ :‏

جَاءَ أَبُو مُوسَى إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ هَذَا عَبْدُ اللَّهِ بْنُ قَيْسٍ ‏.‏ فَلَمْ يَأْذَنْ لَهُ فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ هَذَا أَبُو مُوسَى السَّلاَمُ عَلَيْكُمْ هَذَا الأَشْعَرِيُّ ‏.‏ ثُمَّ انْصَرَفَ فَقَالَ رُدُّوا عَلَىَّ رُدُّوا عَلَىَّ ‏.‏ فَجَاءَ فَقَالَ يَا أَبَا مُوسَى مَا رَدَّكَ كُنَّا فِي شُغْلٍ ‏.‏ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ الاِسْتِئْذَانُ ثَلاَثٌ فَإِنْ أُذِنَ لَكَ وَإِلاَّ فَارْجِعْ ‏”‏ ‏.‏ قَالَ لَتَأْتِيَنِّي عَلَى هَذَا بِبَيِّنَةٍ وَإِلاَّ فَعَلْتُ وَفَعَلْتُ ‏.‏ فَذَهَبَ أَبُو مُوسَى قَالَ عُمَرُ إِنْ وَجَدَ بَيِّنَةً تَجِدُوهُ عِنْدَ الْمِنْبَرِ عَشِيَّةً وَإِنْ لَمْ يَجِدْ بَيِّنَةً فَلَمْ تَجِدُوهُ ‏.‏ فَلَمَّا أَنْ جَاءَ بِالْعَشِيِّ وَجَدُوهُ قَالَ يَا أَبَا مُوسَى مَا تَقُولُ أَقَدْ وَجَدْتَ قَالَ نَعَمْ أُبَىَّ بْنَ كَعْبٍ ‏.‏ قَالَ عَدْلٌ ‏.‏ قَالَ يَا أَبَا الطُّفَيْلِ مَا يَقُولُ هَذَا قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ذَلِكَ يَا ابْنَ الْخَطَّابِ فَلاَ تَكُونَنَّ عَذَابًا عَلَى أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ قَالَ سُبْحَانَ اللَّهِ إِنَّمَا سَمِعْتُ شَيْئًا فَأَحْبَبْتُ أَنْ أَتَثَبَّتَ ‏


وَحَدَّثَنَاهُ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مُحَمَّدِ بْنِ أَبَانٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ هَاشِمٍ، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ فَقَالَ يَا أَبَا الْمُنْذِرِ آنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ نَعَمْ فَلاَ تَكُنْ يَا ابْنَ الْخَطَّابِ عَذَابًا عَلَى أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ وَلَمْ يَذْكُرْ مِنْ قَوْلِ عُمَرَ سُبْحَانَ اللَّهِ ‏.‏ وَمَا بَعْدَهُ ‏.‏

நான் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் சென்று, “அஸ்ஸலாமு அலைக்கும்! அப்துல்லாஹ் பின் கைஸ் வந்துள்ளேன்” என்று கூறி(அனுமதி கோரி)னேன். அவர்கள் எனக்கு அனுமதி வழங்கவில்லை. பிறகு (மீண்டும்) நான், “அஸ்ஸலாமு அலைக்கும்! அபூமூஸா (வந்துள்ளேன்). அஸ்ஸலாமு அலைக்கும்! அஷ்அரீ (வந்துள்ளேன்)” என்று (இன்னும் இரண்டு முறை) அனுமதி கோரினேன். (அனுமதி கிடைக்காததால்) பிறகு நான் திரும்பி வந்துவிட்டேன்.

அப்போது உமர் (ரலி), “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள். அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று கூறினார்கள். நான் (மீண்டும்) வந்தபோது, “அபூமூஸா! ஏன் திரும்பிச் சென்றீர்? நாம் ஓர் அலுவலில் ஈடுபட்டிருந்தோம்” என்று கூறினார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘அனுமதி கோருதல் மூன்று முறையாகும். (மூன்று முறைக்குள்) உமக்கு அனுமதி வழங்கப்பட்டால் சரி. இல்லாவிட்டால் நீர் திரும்பிவிடும்!’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றேன்.

உமர் (ரலி), “இ(வ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என்ப)தற்கு நீங்கள் சாட்சி கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் இப்படி இப்படிச் செய்து விடுவேன்” என்று எச்சரித்தார்கள். ஆகவே, நான் (அன்ஸாரிகளின் அவைக்குச்) சென்றேன்.

உமர் (ரலி), “அவருக்குச் சாட்சி கிடைத்தால் மாலையில் அவரைச் சொற்பொழிவு மேடைக்கு அருகில் நீங்கள் காண்பீர்கள். சாட்சி கிடைக்காவிட்டால் அவரை நீங்கள் காணமாட்டீர்கள்” என்று கூறினார்கள்.

மாலை நேரமானபோது என்னைக் கண்ட மக்கள், “அபூமூஸா! நீர் என்ன சொல்கின்றீர்? சாட்சி கிடைத்துவிட்டாரா?” என்று உமர் (ரலி) கேட்டார்கள். நான் “ஆம், (சாட்சி) உபை பின் கஅப் (ரலி)” என்றேன். உமர் (ரலி), “அவர் நேர்மையானவர்தாம்” என்று கூறி விட்டு, “அபுத்துஃபைல்! இவர் என்ன சொல்கின்றார்?” என்று கேட்டார்கள்.

அதற்கு உபை பின் கஅப் (ரலி), “கத்தாபின் மகனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இவ்வாறு கூறியதை நான் கேட்டுள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்குத் துன்பம் தருபவராக நீர் ஆகிவிடாதீர்!” என்று கூறினார்கள்.

அதற்கு உமர் (ரலி), “ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)! கேள்விப்பட்ட ஒன்றை உறுதி செய்துகொள்ளவே விரும்பினேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)


குறிப்பு :

அலீ பின் ஹாஷிம் (ரஹ்) வழி அறிவிப்பில், “அபுல்முன்திர்! நீங்கள் இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?” என்று உமர் (ரலி) கேட்டார்கள். அதற்கு உபை பின் கஅப் (ரலி), “ஆம், கத்தாபின் மகனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்குத் துன்பம் தருபவராக நீர் ஆகிவிடாதீர்” என்று கூறினார்கள் என்பது வரை இடம்பெற்றுள்ளது.

உமர் (ரலி) “ஸுப்ஹானல்லாஹ்“ என்று கூறியதும் அதற்குப் பின் உள்ளவையும் இடம்பெறவில்லை.

Share this Hadith:

Leave a Comment