அத்தியாயம்: 39, பாடம்: 32, ஹதீஸ் எண்: 4102

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ حَبِيبٍ قَالَ :‏

كُنَّا بِالْمَدِينَةِ فَبَلَغَنِي أَنَّ الطَّاعُونَ قَدْ وَقَعَ بِالْكُوفَةِ فَقَالَ لِي عَطَاءُ بْنُ يَسَارٍ وَغَيْرُهُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ إِذَا كُنْتَ بِأَرْضٍ فَوَقَعَ بِهَا فَلاَ تَخْرُجْ مِنْهَا وَإِذَا بَلَغَكَ أَنَّهُ بِأَرْضٍ فَلاَ تَدْخُلْهَا ‏” قَالَ قُلْتُ عَمَّنْ قَالُوا عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ يُحَدِّثُ بِهِ ‏.‏ قَالَ فَأَتَيْتُهُ فَقَالُوا غَائِبٌ – قَالَ – فَلَقِيتُ أَخَاهُ إِبْرَاهِيمَ بْنَ سَعْدٍ فَسَأَلْتُهُ فَقَالَ شَهِدْتُ أُسَامَةَ يُحَدِّثُ سَعْدًا قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏”‏ إِنَّ هَذَا الْوَجَعَ رِجْزٌ أَوْ عَذَابٌ أَوْ بَقِيَّةُ عَذَابٍ عُذِّبَ بِهِ أُنَاسٌ مِنْ قَبْلِكُمْ فَإِذَا كَانَ بِأَرْضٍ وَأَنْتُمْ بِهَا فَلاَ تَخْرُجُوا مِنْهَا وَإِذَا بَلَغَكُمْ أَنَّهُ بِأَرْضٍ فَلاَ تَدْخُلُوهَا ‏” قَالَ حَبِيبٌ فَقُلْتُ لإِبْرَاهِيمَ آنْتَ سَمِعْتَ أُسَامَةَ يُحَدِّثُ سَعْدًا وَهُوَ لاَ يُنْكِرُ قَالَ نَعَمْ


وَحَدَّثَنَاهُ عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ قِصَّةَ عَطَاءِ بْنِ يَسَارٍ فِي أَوَّلِ الْحَدِيثِ

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ حَبِيبٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ عَنْ سَعْدِ بْنِ مَالِكٍ، وَخُزَيْمَةَ بْنِ ثَابِتٍ، وَأُسَامَةَ بْنِ زَيْدٍ، قَالُوا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمَعْنَى حَدِيثِ شُعْبَةَ

وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، كِلاَهُمَا عَنْ جَرِيرٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ حَبِيبٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، قَالَ كَانَ أُسَامَةُ بْنُ زَيْدٍ وَسَعْدٌ جَالِسَيْنِ يَتَحَدَّثَانِ فَقَالاَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِنَحْوِ حَدِيثِهِمْ

وَحَدَّثَنِيهِ وَهْبُ بْنُ بَقِيَّةَ، أَخْبَرَنَا خَالِدٌ، – يَعْنِي الطَّحَّانَ – عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ عَنْ إِبْرَاهِيمَ بْنِ سَعْدِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ بِنَحْوِ حَدِيثِهِمْ

நாங்கள் மதீனாவில் இருந்தபோது கூஃபாவில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக எனக்குச் செய்தி கிடைத்தது. அப்போது அதாஉ பின் யஸார் (ரஹ்) அவர்களும் பிறரும் என்னிடம், “நீ ஓர் ஊரில் இருக்கும்போது அங்குக் கொள்ளைநோய் ஏற்பட்டுவிட்டால் அங்கிருந்து நீ வெளியேறாதே! ஓர் ஊரில் அது ஏற்பட்டிருப்பதாக உனக்குச் செய்தி கிடைத்தால், அங்கு நீ செல்லாதே! என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்” என்று கூறினர்.

நான், “யாரிடமிருந்து (இதை நீங்கள் செவியுற்றீர்கள்)?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆமிர் பின் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) இதை அறிவித்தார்” என்று பதிலளித்தார்கள். உடனே நான் ஆமிர் (ரஹ்) அவர்களிடம் சென்றேன். அவர் வெளியூர் சென்றிருப்பதாகக் கூறினர்.

ஆகவே, நான் ஆமிரின் சகோதரர் இப்ராஹீம் பின் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்களைச் சந்தித்து அது குறித்துக் கேட்டேன். அப்போது இப்ராஹீம் பின் ஸஅத் (ரஹ்) கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இந்த (கொள்ளை)நோய் என்பது ஒரு தண்டனை, (அ) வேதனை, (அ) வேதனையின் மிச்சமாகும். அதன்மூலம் உங்களுக்கு முன்னிருந்த சிலர் வேதனை செய்யப்பட்டனர். நீங்கள் ஓர் ஊரில் இருக்க, அங்குக் கொள்ளைநோய் ஏற்பட்டுவிட்டால், அங்கிருந்து நீங்கள் வெளியேறிச் செல்லாதீர்கள். அது ஓர் ஊரில் ஏற்பட்டிருப்பதாக உங்களுக்குச் செய்தி கிடைத்தால், அங்கு நீங்கள் செல்லாதீர்கள்” என்று  உஸாமா (ரலி) (என் தந்தை) ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களுக்கு அறிவித்தபோது நானுமிருந்தேன் என்று இப்ராஹீம் (ரஹ்) கூறினார்கள்.

நான் இப்ராஹீம் பின் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்களிடம், “உஸாமா (ரலி) (உங்கள் தந்தை) ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் இதை அறிவித்தபோது நீங்கள் கேட்டீர்களா? ஸஅத் (ரலி) அதை மறுக்கவில்லையா?” என்று கேட்டேன்.

அதற்கு இப்ராஹீம் (ரஹ்), “ஆம் மறுக்கவில்லை” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா (ரலி) வழியாக ஹபீப் பின் அபீஸாபித் (ரஹ்)


குறிப்புகள் :

முஆத் (ரஹ்) வழி அறிவிப்பில், ஹதீஸின் ஆரம்பத்தில் உள்ள அதாஉ பின் யஸார் (ரஹ்) பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை.

ஜரீர் (ரஹ்) வழி அறிவிப்பில், “உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களும் ஸஅத் (ரலி) அவர்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என (மேற்கண்ட ஹதீஸில் உள்ளதை) அறிவித்தனர்” என்று இப்ராஹீம் பின் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment