அத்தியாயம்: 39, பாடம்: 33, ஹதீஸ் எண்: 4110

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ :‏

سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏”‏ لاَ عَدْوَى وَلاَ صَفَرَ وَلاَ غُولَ ‏”


وَسَمِعْتُ أَبَا الزُّبَيْرِ يَذْكُرُ أَنَّ جَابِرًا فَسَّرَ لَهُمْ قَوْلَهُ ‏”‏ وَلاَ صَفَرَ ‏” فَقَالَ أَبُو الزُّبَيْرِ الصَّفَرُ الْبَطْنُ ‏.‏ فَقِيلَ لِجَابِرٍ كَيْفَ قَالَ كَانَ يُقَالُ دَوَابُّ الْبَطْنِ ‏.‏ قَالَ وَلَمْ يُفَسِّرِ الْغُولَ ‏.‏ قَالَ أَبُو الزُّبَيْرِ هَذِهِ الْغُولُ الَّتِي تَغَوَّلُ

“தொற்றுநோய் என்பது கிடையாது; ஸஃபர் (வயிற்றுத் தொற்றுநோய்) என்பதும் கிடையாது; கொள்ளிவாய்ப் பிசாசும் கிடையாது” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுஸ்ஸுபைர் (ரஹ்) கூறுகின்றார்கள்: ஜாபிர் (ரலி), ‘ஸஃபர் கிடையாது’ என்பதற்கு விளக்கமளிக்கையில், “ஸஃபர் என்பது வயிற்று நோயாகும்” என்று கூறினார்கள். ஜாபிர் (ரலி) அவர்களிடம், “(அது) எப்படி?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அது, வயிற்றில் உருவாகும் ஒருவகை புழுவால் ஏற்படும் நோய் என்று சொல்லப்படுவதுண்டு” என்றார்கள்.

ஆனால், ஜாபிர் (ரலி), ஃகூல் என்பதற்கு விளக்கமளிக்கவில்லை. ஆயினும், “பாலைவனப் பயணிகளை பயமுறுத்தும் கொள்ளிவாய்ப் பிசாசு என்று மூடத்தனமாக நம்பப்பட்டதே ஃகூல் என்பதாகும்” என்று அபுஸ்ஸுபைர் (ரஹ்) கூறியதாக இப்னு ஜுரைஜ் (ரஹ்) அறிவிக்கின்றார்.

அத்தியாயம்: 39, பாடம்: 33, ஹதீஸ் எண்: 4109

وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمِ بْنِ حَيَّانَ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا يَزِيدُ، – وَهُوَ التُّسْتَرِيُّ – حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لاَ عَدْوَى وَلاَ غُولَ وَلاَ صَفَرَ ‏”‏

“தொற்றுநோய் என்பது கிடையாது; கொள்ளிவாய்ப் பிசாசும் கிடையாது; ஸஃபர் (வயிற்றுத் தொற்றுநோய்) என்பதும் கிடையாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 39, பாடம்: 33, ஹதீஸ் எண்: 4108

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، ح

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ وَلاَ غُولَ ‏”‏

“தொற்றுநோய் என்பது கிடையாது; பறவை சகுனம் கிடையாது; கொள்ளிவாய்ப் பிசாசு என்று ஒன்றும் கிடையாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 39, பாடம்: 33, ஹதீஸ் எண்: 4107

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، – يَعْنُونَ ابْنَ جَعْفَرٍ – عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لاَ عَدْوَى وَلاَ هَامَةَ وَلاَ نَوْءَ وَلاَ صَفَرَ ‏”‏

“தொற்றுநோய் என்பது கிடையாது; ஆந்தை பற்றிய (மூட)நம்பிக்கையும் (உண்மை) இல்லை; நட்சத்திர இயக்கத்தால்தான் மழை பொழிகிறது என்பதும் (உண்மை) இல்லை; ஸஃபர் (வயிற்றுத் தொற்று நோய்) என்பதும் கிடையாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 39, பாடம்: 33, ஹதீஸ் எண்: 4106

وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ، – وَتَقَارَبَا فِي اللَّفْظِ – قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ أَنَّ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ حَدَّثَهُ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ لاَ عَدْوَى ‏” وَيُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ لاَ يُورِدُ مُمْرِضٌ عَلَى مُصِحٍّ ‏”‏

قَالَ أَبُو سَلَمَةَ كَانَ أَبُو هُرَيْرَةَ يُحَدِّثُهُمَا كِلْتَيْهِمَا عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ صَمَتَ أَبُو هُرَيْرَةَ بَعْدَ ذَلِكَ عَنْ قَوْلِهِ ‏”‏ لاَ عَدْوَى ‏” وَأَقَامَ عَلَى ‏”‏ أَنْ لاَ يُورِدُ مُمْرِضٌ عَلَى مُصِحٍّ ‏” قَالَ فَقَالَ الْحَارِثُ بْنُ أَبِي ذُبَابٍ – وَهُوَ ابْنُ عَمِّ أَبِي هُرَيْرَةَ – قَدْ كُنْتُ أَسْمَعُكَ يَا أَبَا هُرَيْرَةَ تُحَدِّثَنَا مَعَ هَذَا الْحَدِيثِ حَدِيثًا آخَرَ قَدْ سَكَتَّ عَنْهُ كُنْتَ تَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ لاَ عَدْوَى ‏” فَأَبَى أَبُو هُرَيْرَةَ أَنْ يَعْرِفَ ذَلِكَ وَقَالَ ‏”‏ لاَ يُورِدُ مُمْرِضٌ عَلَى مُصِحٍّ ‏” فَمَا رَآهُ الْحَارِثُ فِي ذَلِكَ حَتَّى غَضِبَ أَبُو هُرَيْرَةَ فَرَطَنَ بِالْحَبَشِيَّةِ فَقَالَ لِلْحَارِثِ أَتَدْرِي مَاذَا قُلْتُ قَالَ لاَ ‏.‏ قَالَ أَبُو هُرَيْرَةَ ‏.‏ قُلْتُ أَبَيْتُ ‏.‏ قَالَ أَبُو سَلَمَةَ وَلَعَمْرِي لَقَدْ كَانَ أَبُو هُرَيْرَةَ يُحَدِّثُنَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ لاَ عَدْوَى ‏” فَلاَ أَدْرِي أَنَسِيَ أَبُو هُرَيْرَةَ أَوْ نَسَخَ أَحَدُ الْقَوْلَيْنِ الآخَرَ


حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، وَحَسَنٌ الْحُلْوَانِيُّ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ عَبْدٌ حَدَّثَنِي وَقَالَ الآخَرَانِ حَدَّثَنَا يَعْقُوبُ، – يَعْنُونَ ابْنَ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ – حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ لاَ عَدْوَى ‏” وَيُحَدِّثُ مَعَ ذَلِكَ ‏”‏ لاَ يُورِدُ الْمُمْرِضُ عَلَى الْمُصِحِّ ‏” بِمِثْلِ حَدِيثِ يُونُسَ

حَدَّثَنَاهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا أَبُو الْيَمَانِ، حَدَّثَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ

அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரஹ்), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “தொற்றுநோய் என்பது கிடையாது என்று கூறினார்கள் என்றும், நோய் கண்ட கால்நடையை ஆரோக்கியமான கால்நடையிடம் கொண்டுசெல்லக் கூடாது என்றும் கூறினார்கள்” என்றார்கள்.

இவ்விரு ஹதீஸ்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்கள். பிறகு “தொற்றுநோய் கிடையாது” எனும் ஹதீஸை அறிவிப்பதைக் கைவிட்டு, “நோய் கண்ட கால்நடையை ஆரோக்கியமான கால்நடையிடம் கொண்டுசெல்லக் கூடாது” என்பதை மட்டும் அறிவிக்கலானார்கள்.

அப்போது (அபூஹுரைரா (ரலி) அவர்களின் தந்தையின் சகோதரரின் மகன்) ஹாரிஸ் பின் அபீதுபாப் (ரஹ்), “அபூஹுரைரா! இந்த ஹதீஸுடன் மற்றொரு ஹதீஸையும் நீங்கள் அறிவிப்பதை நான் கேட்டிருக்கின்றேனே! ஆனால், அதை நீங்கள் அறிவிக்காமல் கடந்துவிடுகின்றீர்களே? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொற்றுநோய் என்பது கிடையாது என்று கூறினார்கள் என நீங்கள் அறிவித்துவந்தீர்களே?” என்று கேட்டார்.

அபூஹுரைரா (ரலி) அது பற்றி தமக்குத் தெரியாது என்று மறுத்தார்கள். “நோய் கண்ட கால்நடையை ஆரோக்கியமான கால்நடையிடம் கொண்டுசெல்லக் கூடாது” என்பதை மட்டுமே கூறினார்கள்.

ஹாரிஸ், தாம் கூறுவதை ஏற்காததைக் கண்ட அபூஹுரைரா (ரலி) கோபமுற்று அபிசீனிய மொழியில் ஏதோ சொன்னார்கள். “நான் என்ன சொன்னேன் என்று நீ அறிவாயா?” என்று கேட்டார்கள். அதற்கு ஹாரிஸ் “இல்லை” என்றார். அபூஹுரைரா (ரலி) “நான் (அதை) மறுக்கிறேன்” என்றார்கள்.

அபூஸலமா (ரஹ்) கூறுகின்றார்கள்: என் ஆயுளின் (அதிபதி) மீதாணையாக! (முன்னர்) அபூஹுரைரா (ரலி) எங்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொற்றுநோய் கிடையாது என்று கூறினார்கள்” என அறிவித்துவந்தார்கள். (அதை) அபூஹுரைரா (ரலி) மறந்துவிட்டார்களா? அல்லது நபியவர்களின் ஒரு ஹதீஸ் மற்றொரு ஹதீஸை மாற்றிவிட்டதா? என்பது எனக்குத் தெரியவில்லை.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃபு (ரஹ்)


குறிப்பு :

ஸாலிஹ் (ரஹ்) வழி அறிவிப்பில், “அபூஹுரைரா (ரலி) தொற்றுநோய் என்பது கிடையாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என்று அறிவித்துவிட்டு, நோய் கண்ட கால்நடையை ஆரோக்கியமான கால்நடையிடம் கொண்டுசெல்லக்  கூடாது என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என அறிவித்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 39, பாடம்: 33, ஹதீஸ் எண்: 4105

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى، – وَاللَّفْظُ لأَبِي الطَّاهِرِ – قَالاَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، قَالَ ابْنُ شِهَابٍ فَحَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

حِينَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ لاَ عَدْوَى وَلاَ صَفَرَ وَلاَ هَامَةَ ‏” فَقَالَ أَعْرَابِيٌّ يَا رَسُولَ اللَّهِ فَمَا بَالُ الإِبِلِ تَكُونُ فِي الرَّمْلِ كَأَنَّهَا الظِّبَاءُ فَيَجِيءُ الْبَعِيرُ الأَجْرَبُ فَيَدْخُلُ فِيهَا فَيُجْرِبُهَا كُلَّهَا قَالَ ‏”‏ فَمَنْ أَعْدَى الأَوَّلَ ‏”‏


وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، وَحَسَنٌ الْحُلْوَانِيُّ، قَالاَ حَدَّثَنَا يَعْقُوبُ، – وَهُوَ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ – حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَغَيْرُهُ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ وَلاَ صَفَرَ وَلاَ هَامَةَ ‏” فَقَالَ أَعْرَابِيٌّ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ بِمِثْلِ حَدِيثِ يُونُسَ

وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا أَبُو الْيَمَانِ، عَنْ شُعَيْبٍ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي سِنَانُ بْنُ أَبِي سِنَانٍ الدُّؤَلِيُّ، أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ لاَ عَدْوَى ‏” فَقَامَ أَعْرَابِيٌّ ‏.‏ فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِ يُونُسَ وَصَالِحٍ ‏.‏ وَعَنْ شُعَيْبٍ عَنِ الزُّهْرِيِّ قَالَ حَدَّثَنِي السَّائِبُ بْنُ يَزِيدَ ابْنُ أُخْتِ نَمِرٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ لاَ عَدْوَى وَلاَ صَفَرَ وَلاَ هَامَةَ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “தொற்றுநோய் என்பது கிடையாது; ஸஃபர் (வயிற்று நோய்த் தொற்று) என்பதும் கிடையாது; ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது” என்று சொன்னார்கள். அப்போது கிராமவாசி ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) ஒட்டகங்களிடம், சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து, அவற்றுக்கிடையே கலந்து அவை அனைத்தையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே! அவற்றின் நிலையென்ன (தொற்று நோயில்லையா)?” என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அப்படியென்றால் முதல் (முதலில் சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச்செய்தது யார்?” என்று திருப்பிக் கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்புகள் :

ஸாலிஹ் (ரஹ்) வழி அறிவிப்பு, “தொற்றுநோய் என்பது கிடையாது; பறவை சகுனம் கிடையாது; ஸஃபர் (வயிற்றுத் தொற்றுநோய்) என்பது கிடையாது; ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அப்போது ஒரு கிராமவாசி மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி கேட்டார்” என்று ஆரம்பமாகிறது.

ஷுஐப் (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி (ஸல்), தொற்றுநோய் என்பது கிடையாது என்று சொன்னார்கள். உடனே கிராமவாசி ஒருவர் எழுந்து மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளபடி கேட்டார்” என்று இடம்பெற்றுள்ளது.

ஸாயிப் பின் யஸீத் (ரலி) வழி அறிவிப்பில், “நபி (ஸல்) தொற்று நோய் என்பது கிடையாது; ஸஃபர் (வயிற்றுத் தொற்று நோய்) என்பது கிடையாது; ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது என்று கூறினார்கள்” என இடம்பெற்றுள்ளது.