و حَدَّثَنَاه إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ الْعَلَاءِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ :
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَلَّى صَلَاةً لَمْ يَقْرَأْ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ فَهِيَ خِدَاجٌ ثَلَاثًا غَيْرُ تَمَامٍ فَقِيلَ لِأَبِي هُرَيْرَةَ إِنَّا نَكُونُ وَرَاءَ الْإِمَامِ فَقَالَ اقْرَأْ بِهَا فِي نَفْسِكَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ قَالَ اللَّهُ تَعَالَى قَسَمْتُ الصَّلَاةَ بَيْنِي وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ وَلِعَبْدِي مَا سَأَلَ فَإِذَا قَالَ الْعَبْدُ
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ قَالَ اللَّهُ تَعَالَى حَمِدَنِي عَبْدِي وَإِذَا قَالَ
الرَّحْمَنِ الرَّحِيمِ قَالَ اللَّهُ تَعَالَى أَثْنَى عَلَيَّ عَبْدِي وَإِذَا قَالَ
مَالِكِ يَوْمِ الدِّينِ قَالَ مَجَّدَنِي عَبْدِي وَقَالَ مَرَّةً فَوَّضَ إِلَيَّ عَبْدِي فَإِذَا قَالَ
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ قَالَ هَذَا بَيْنِي وَبَيْنَ عَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ فَإِذَا قَالَ
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ قَالَ هَذَا لِعَبْدِي وَلِعَبْدِي مَا سَأَلَ
قَالَ سُفْيَانُ حَدَّثَنِي بِهِ الْعَلَاءُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ دَخَلْتُ عَلَيْهِ وَهُوَ مَرِيضٌ فِي بَيْتِهِ فَسَأَلْتُهُ أَنَا عَنْهُ حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ عَنْ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ سَمِعَ أَبَا السَّائِبِ مَوْلَى هِشَامِ بْنِ زُهْرَةَ يَقُولُ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ح و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي الْعَلَاءُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ أَنَّ أَبَا السَّائِبِ مَوْلَى بَنِي عَبْدِ اللَّهِ بْنِ هِشَامِ بْنِ زُهْرَةَ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَلَّى صَلَاةً فَلَمْ يَقْرَأْ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ بِمِثْلِ حَدِيثِ سُفْيَانَ وَفِي حَدِيثِهِمَا قَالَ اللَّهُ تَعَالَى قَسَمْتُ الصَّلَاةَ بَيْنِي وَبَيْنَ عَبْدِي نِصْفَيْنِ فَنِصْفُهَا لِي وَنِصْفُهَا لِعَبْدِي حَدَّثَنِي أَحْمَدُ بْنُ جَعْفَرٍ الْمَعْقِرِيُّ حَدَّثَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا أَبُو أُوَيْسٍ أَخْبَرَنِي الْعَلَاءُ قَالَ سَمِعْتُ مِنْ أَبِي وَمِنْ أَبِي السَّائِبِ وَكَانَا جَلِيسَيْ أَبِي هُرَيْرَةَ قَالَا قَالَ أَبُو هُرَيْرَةَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَلَّى صَلَاةً لَمْ يَقْرَأْ فِيهَا بِفَاتِحَةِ الْكِتَابِ فَهِيَ خِدَاجٌ يَقُولُهَا ثَلَاثًا بِمِثْلِ حَدِيثِهِمْ
அபூஹுரைரா (ரலி), “குர்ஆனின் அன்னை (எனும் சிறப்புடைய அல்ஃபாத்திஹா) அத்தியாத்தை ஓதாமல் தொழுதவரது தொழுகை, குறைபாடு உடையதும் நிறைவு பெறாததுமாகும் என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறினார்கள்” என்று அறிவித்தார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், “நாங்கள் இமாமுக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கிறோம் (அப்போதும் ஓத வேண்டுமா?)” என்று கேட்கப்பட்டது. அதற்கு, “அதை உங்களுடைய மனதுக்குள் ஓதிக் கொள்ளுங்கள். ஏனெனில்…”,
“தொழுகை(யில் ஓதப்படும் அல்ஃபாத்திஹா)ப் பிரார்த்தனையை எனக்கும் என் அடியானுக்குமிடையே இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும். அடியான் ‘அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்’ (எல்லாப் புகழும் அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால், மிக்குயர்ந்தோன் அல்லாஹ், ‘என் அடியான் என்னைப் புகழ்ந்து விட்டான்’ என்று கூறுவான். அடியான், ‘அர்ரஹ்மானிர்ரஹீம்’ (அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்) என்று சொன்னால் மிக்குயர்ந்தோன் அல்லாஹ், ‘என் அடியான் என்னைத் துதித்து விட்டான்’ என்று கூறுவான். அடியான், ‘மாலிக்கி யவ்மித்தீன்’ (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால், அல்லாஹ், ‘என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்தி விட்டான் / என்னைச் சார்ந்து விட்டான்’ என்று கூறுவான்.
மேலும், அடியான் ‘இய்யாக்க நஃபுது வ இய்யாக்க நஸ்த்தயீன்’ (உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகின்றோம்) என்று சொன்னால், அல்லாஹ், ‘இது எனக்கும் என் அடியானுக்கும் இடைப்பட்ட சிறப்புத் தொடர்பாகும். என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்’ என்று கூறுவான். அடியான், ‘இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத்தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன்’ (எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக. அவ்வழி, நீ அருள் புரிந்தோரின் வழி. உன்னுடைய கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல; வழி தவறியோரின் வழியுமல்ல) என்று சொன்னால், அல்லாஹ் ‘இது என் அடியானுக்கு உரிய(நேர்வழியான)து; என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்’ என்று கூறுவான்” என்று அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியிருக்கின்றார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அலாஉ பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்)
குறிப்பு :
ஸுஃப்யான் (ரஹ்) வழியாக அறிவிக்கப்படும்போது, “அலாஉ பின் அப்திர் ரஹ்மான் பின் யஃகூப் (ரஹ்) நோயுற்றிருந்தபோது அவர்களைச் சந்திக்க அவர் இல்லத்துக்கு நான் சென்றிருந்தவேளை, இந்த ஹதீஸைப் பற்றி அன்னாரிடம் கேட்டேன். அப்போது, இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அபுஸ்ஸாயிப் (ரஹ்) செவியுற்றுத் தமக்கு அறிவித்ததாகக் அலாஉ (ரஹ்) கூறினார்” என்று ஸுஃப்யான் (ரஹ்) கூறிய தகவல் இடம்பெற்றுள்ளது.
இபுனு ஜுரைஜ் (ரஹ்) வழி அறிவிப்பில், “குர்ஆனின் அன்னை (எனும் சிறப்புடைய அல்ஃபாத்திஹா) அத்தியாத்தை ஓதாமல் தொழுதவரது தொழுகை …” எனத் தொடங்குவதோடு ஸுஃப்யான் (ரஹ்) வழி அறிவிப்பை ஒத்தமைந்துள்ளது. இவ்விரு அறிவிப்புகளிலும் “தொழுகை(யில் ஓதப்படும் அல்ஃபாத்திஹா)ப் பிரார்த்தனையை எனக்கும் என் அடியானுக்குமிடையே இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். அவ்விரண்டில் ஒரு பகுதி எனக்கும் மற்றொரு பகுதி என் அடியானுக்கும் உரியதாகும் என்று அல்லாஹ் கூறினான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக இடம் பெற்றுள்ளது.
“குர்ஆனின் தோற்றுவாய் (எனும் அல்ஃபாத்திஹா) அத்தியாத்தை ஓதாமல் தொழுதவரது தொழுகை குறைபாடு உடையதாகும் என நபி (ஸல்) மும்முறை கூறினார்கள்” எனும் அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பை, அன்னாரின் இரு அணுக்கத் தோழர்களான என் தந்தையும் அபுஸ்ஸாயிப் (ரஹ்) அவர்களும் அறிவிக்க நான் செவியுற்றிருக்கிறேன் என்று அலாஉ பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) தனது அறிவிப்பில் கூறுகின்றார்.