அத்தியாயம்: 4, பாடம்: 19, ஹதீஸ் எண்: 624

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ : ‏ ‏

‏اشْتَكَى ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَصَلَّيْنَا وَرَاءَهُ وَهُوَ قَاعِدٌ ‏ ‏وَأَبُو بَكْرٍ ‏ ‏يُسْمِعُ النَّاسَ تَكْبِيرَهُ فَالْتَفَتَ إِلَيْنَا فَرَآنَا قِيَامًا فَأَشَارَ إِلَيْنَا فَقَعَدْنَا فَصَلَّيْنَا بِصَلَاتِهِ قُعُودًا فَلَمَّا سَلَّمَ قَالَ ‏ ‏إِنْ كِدْتُمْ ‏ ‏آنِفًا ‏ ‏لَتَفْعَلُونَ فِعْلَ ‏ ‏فَارِسَ ‏ ‏وَالرُّومِ ‏ ‏يَقُومُونَ عَلَى مُلُوكِهِمْ وَهُمْ قُعُودٌ فَلَا تَفْعَلُوا ائْتَمُّوا بِأَئِمَّتِكُمْ إِنْ صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا وَإِنْ صَلَّى قَاعِدًا فَصَلُّوا قُعُودًا ‏


حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الرُّؤَاسِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ ‏ ‏صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَبُو بَكْرٍ ‏ ‏خَلْفَهُ فَإِذَا كَبَّرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَبَّرَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏لِيُسْمِعَنَا ثُمَّ ‏ ‏ذَكَرَ نَحْوَ حَدِيثِ ‏ ‏اللَّيْثِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவர்கள் அமர்ந்தவாறு எங்களுக்குத் தொழுவித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் நாங்கள் (நின்றவாறு) தொழுதோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தக்பீர் கூற, அதை அபூபக்ரு (ரலி) மக்களுக்குக் கேட்கும் விதமாக (உரத்த குரலில்) கூறிக்கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்கள் பக்கம் திரும்பினார்கள். நாங்கள் நின்றவாறு தொழுதுகொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு, எங்களையும் உட்கார்ந்து தொழுமாறு சைகை செய்தார்கள். உடனே நாங்கள் உட்கார்ந்தவாறே அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். அவர்கள் ஸலாம் கொடுத்(துத் தொழுகையை முடித்த)ததும், “நீங்கள் சற்று முன்னர் பாரசீகர்களது, ரோமர்களது செயலுக்கொப்ப நடந்து கொண்டீர்கள். அவர்கள்தாம் தங்கள் மன்னர்கள் அமர்ந்திருக்கும்போது நின்றுகொண்டு இருப்பார்கள். நீங்கள் அவ்வாறு செய்யாதீர்கள். உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பவர்களை நீங்கள் பின்பற்றுங்கள். அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள். அவர் அமர்ந்து தொழுதால் நீங்களும் அமர்ந்தே தொழுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸ், தம் தந்தை கூறியதாக ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் அர்ருஆஸி (ரஹ்), வழியாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. அதில், “… மக்களுக்குக் கேட்கும் விதமாக …” என்பதற்குப் பதிலாக “… எங்களுக்குக் கேட்கும் விதமாக …” என்று இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment