அத்தியாயம்: 4, பாடம்: 22, ஹதீஸ் எண்: 639

حَدَّثَنِي ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَهَبَ إِلَى ‏ ‏بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ ‏ ‏لِيُصْلِحَ بَيْنَهُمْ ‏ ‏فَحَانَتْ ‏ ‏الصَّلَاةُ فَجَاءَ ‏ ‏الْمُؤَذِّنُ ‏ ‏إِلَى ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏فَقَالَ أَتُصَلِّي بِالنَّاسِ فَأُقِيمُ قَالَ نَعَمْ قَالَ فَصَلَّى ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏فَجَاءَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَالنَّاسُ فِي الصَّلَاةِ ‏ ‏فَتَخَلَّصَ ‏ ‏حَتَّى وَقَفَ فِي الصَّفِّ فَصَفَّقَ النَّاسُ وَكَانَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏لَا يَلْتَفِتُ فِي الصَّلَاةِ فَلَمَّا أَكْثَرَ النَّاسُ التَّصْفِيقَ الْتَفَتَ فَرَأَى رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَشَارَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ امْكُثْ مَكَانَكَ فَرَفَعَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏يَدَيْهِ فَحَمِدَ اللَّهَ عَزَّ وَجَلَّ عَلَى مَا أَمَرَهُ بِهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ ذَلِكَ ثُمَّ اسْتَأْخَرَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَتَّى اسْتَوَى فِي الصَّفِّ وَتَقَدَّمَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَصَلَّى ثُمَّ انْصَرَفَ فَقَالَ يَا ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏مَا مَنَعَكَ أَنْ تَثْبُتَ إِذْ أَمَرْتُكَ قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏مَا كَانَ ‏ ‏لِابْنِ أَبِي قُحَافَةَ ‏ ‏أَنْ يُصَلِّيَ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا لِي رَأَيْتُكُمْ أَكْثَرْتُمْ التَّصْفِيقَ مَنْ نَابَهُ شَيْءٌ فِي صَلَاتِهِ فَلْيُسَبِّحْ فَإِنَّهُ إِذَا سَبَّحَ الْتُفِتَ إِلَيْهِ وَإِنَّمَا ‏ ‏التَّصْفِيحُ ‏ ‏لِلنِّسَاءِ

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ أَبِي حَازِمٍ ‏ ‏وَقَالَ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيُّ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏سَهْلِ بْنِ سَعْدٍ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏مَالِكٍ ‏ ‏وَفِي حَدِيثِهِمَا ‏ ‏فَرَفَعَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏يَدَيْهِ فَحَمِدَ اللَّهَ وَرَجَعَ الْقَهْقَرَى وَرَاءَهُ حَتَّى قَامَ فِي الصَّفِّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ ‏ ‏قَالَ ‏ ‏ذَهَبَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصْلِحُ بَيْنَ ‏ ‏بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ ‏ ‏بِمِثْلِ حَدِيثِهِمْ وَزَادَ فَجَاءَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَخَرَقَ الصُّفُوفَ حَتَّى قَامَ عِنْدَ الصَّفِّ الْمُقَدَّمِ وَفِيهِ أَنَّ ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏رَجَعَ الْقَهْقَرَى

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பனூ அம்ரு பின் அவ்ஃப் குலத்தாரிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த அவர்களிடம் சென்றிருந்தார்கள். அப்போது (அஸ்ருத்) தொழுகையின் நேரம் வந்துவிடவே, தொழுகை அழைப்பாளர் (பிலால் (ரலி)), அபூபக்ரு (ரலி) அவர்களிடம் வந்து, “நீங்கள் மக்களுக்குத் தொழுவிக்கிறீர்களா, நான் இகாமத் சொல்லட்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ரு (ரலி) “சரி” என்று கூறிவிட்டு, மக்களுக்குத் தொழுவித்தார்கள்.

மக்கள் தொழுகையில் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (வரிசைகளின்) ஊடாக (முதல்) வரிசையில் வந்து (மக்களோடு) நின்றார்கள். இதைக் கண்ட மக்கள் (அபூபக்ரு (ரலி) அவர்களுக்கு உணர்த்த) கை தட்டினார்கள். மக்கள் கைதட்டலை அதிகரிக்கவே தொழுகையின்போது திரும்பிப் பார்க்கும் வழக்கமில்லாத அபூபக்ரு (ரலி) திரும்பிப் பார்த்தார்கள். அங்கே (முதல் வரிசையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அபூபக்ரு (ரலி) அவர்களை நோக்கி, ‘அங்கேயே இருங்கள்’ என்பதுபோல் சைகை செய்தார்கள். தமக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இட்ட கட்டளைக்காக அபூபக்ரு (ரலி) தம் கைகளை உயர்த்தி மாண்புக்குரிய வல்ல அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பிறகு (பின்வாங்கி, முதல்) வரிசையில் சேர்ந்து கொண்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முன்னே சென்று (இமாமாகத்) தொழுவித்தார்கள். பின்னர் (தொழுது முடித்து) திரும்பியதும், “அபூபக்ரே! நான் உங்களைப் பணித்தும்கூட நீங்கள் அங்கேயே நிற்காமலிருந்ததற்குக் காரணம் என்ன?” என்று கேட்டார்கள்.

அதற்கு அபூக்ரு (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தொழுவிப்பதற்கு (இந்த) அபூகுஹாஃபாவின் மகனுக்குத் தகுதியில்லை” என்று பதிலளித்தார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மக்களைப் பார்த்து), “நீங்கள் ஏன் அதிகமாகக் கை தட்டினீர்கள்? தமது தொழுகையின்போது ஏதேனும் (இமாமுக்கு உணர்த்தத்)தோன்றும் ஒருவர், ‘சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)’ என்று கூறட்டும்! ஏனெனில், அவ்வாறு கூறும்போது அவர்பால் கவனம் செலுத்தப்படும். கை தட்டும் முறை பெண்களுக்குரியதாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் ஸஅத் அஸ்ஸாஇதீ (ரலி)

குறிப்பு :

யஃகூப் பின் அப்திர்ரஹ்மான் அல்காரீ (ரஹ்) வழி அறிவிப்பில், “அபூபக்ரு (ரலி) தம்மிரு கைகளையும் உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பிறகு பின்வாங்கி நகர்ந்து வந்து வரிசையில் நின்றார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

உபைதுல்லாஹ் (ரஹ்) வழி அறிவிப்பு, “நபி (ஸல்) அம்ரு பின் அவ்ஃப் குலத்தாரிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகச் சென்றார்கள் …” என்றே தொடங்குகிறது. கூடுதலாக, “நபி (ஸல்), தொழுகை வரிசைகளின் ஊடாக முன்வரிசைக்கு அருகில் வந்து நின்றார்கள்” என்றும், “அபூபக்ரு (ரலி) (திரும்பாமல் அப்படியே) பின்வாக்கில் நகர்ந்தார்கள்” என்றும் இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment