அத்தியாயம்: 4, பாடம்: 27, ஹதீஸ் எண்: 651

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏تَمِيمِ بْنِ طَرَفَةَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ سَمُرَةَ ‏ ‏قَالَ

خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏مَا لِي أَرَاكُمْ رَافِعِي أَيْدِيكُمْ كَأَنَّهَا أَذْنَابُ خَيْلٍ ‏ ‏شُمْسٍ ‏ ‏اسْكُنُوا فِي الصَّلَاةِ قَالَ ثُمَّ خَرَجَ عَلَيْنَا فَرَآنَا حَلَقًا فَقَالَ مَالِي أَرَاكُمْ ‏ ‏عِزِينَ ‏ ‏قَالَ ثُمَّ خَرَجَ عَلَيْنَا فَقَالَ أَلَا تَصُفُّونَ كَمَا تَصُفُّ الْمَلَائِكَةُ عِنْدَ رَبِّهَا فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ تَصُفُّ الْمَلَائِكَةُ عِنْدَ رَبِّهَا قَالَ يُتِمُّونَ الصُّفُوفَ الْأُوَلَ وَيَتَرَاصُّونَ فِي الصَّفِّ

و حَدَّثَنِي ‏ ‏أَبُو سَعِيدٍ الْأَشَجُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏قَالَا ‏ ‏جَمِيعًا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடம் (நாங்கள் தொழுது கொண்டிருந்த) ஒருபோது வந்தார்கள். அப்போது (நாங்கள் ஸலாம் கொடுக்கும்போது கைகளை உயர்த்துபவர்களாக இருந்தோம். இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீங்கள் உங்களது கைகளைச் சண்டிக் குதிரை வாலை (உயர்த்துவதை)ப் போன்று உயர்த்திக் கொண்டிருப்பதைப் பார்கிறேனே, ஏன்? தொழுகையில் அடக்கத்தோடு இருங்கள்” என்று கூறினார்கள். பிறகு (வேறொருபோது) எங்களிடம் வந்தவேளை, நாங்கள் திட்டுத் திட்டாக நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது அவர்கள், “நீங்கள் பிரிந்து நிற்பதைப் பார்க்கிறேனே, ஏன்?” என்று கேட்டார்கள். பிறகு (மற்றொரு முறை) எங்களிடம் வந்தபோது, “அறிந்துகொள்ளுங்கள்! வானவர்கள் தம் இறைவனுக்கு முன்னால் அணிவகுத்து நிற்பதைப்போன்று நீங்கள் அணிவகுத்து நில்லுங்கள்” என்று கூறினார்கள். அப்போது நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! வானவர்கள் தம் இறைவனுக்கு முன்னால் எப்படி அணிவகுத்து நிற்கிறார்கள்?” என்று கேட்டோம். அதற்கு “வானவர்கள் (முதலில்) முதல் வரிசையைப் நிரப்புவர்; வரிசைகளில் ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக நிற்பர்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி)