அத்தியாயம்: 4, பாடம்: 35, ஹதீஸ் எண்: 697

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ

عَنْ ‏ ‏زِيَادِ بْنِ عِلَاقَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمِّهِ ‏ ‏أَنَّهُ صَلَّى مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الصُّبْحَ فَقَرَأَ فِي أَوَّلِ رَكْعَةٍ ‏ ‏وَالنَّخْلَ ‏ ‏بَاسِقَاتٍ ‏ ‏لَهَا ‏ ‏طَلْعٌ ‏ ‏نَضِيدٌ ‏ ‏وَرُبَّمَا قَالَ ‏ ‏ق

என் தந்தையின் சகோதரர் (குத்பா பின் மாலிக்-ரலி) அவர்கள், “நான் நபி (ஸல்) அவர்களுடன் ஸுப்ஹுத் தொழுகை தொழுதேன். முதல் ரக்அத்தில் நபி (ஸல்) அவர்கள் கனிகள் நிறைந்து, குலைகள் அடுக்கடுக்காய்த் தொங்குகின்ற நீண்ட நெடிய பேரீச்ச மரங்களையும் (நாமே முளைக்கச் செய்தோம்) எனும் (50:10ஆவது) வசன(அத்தியாய)த்தை” என்றும் சில வேளைகளில், “காஃப் எனும் (50ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள்” என்றும் கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : குத்பா பின் மாலிக் (ரலி) வழியாக ஸியாத் பின் இலாக்கா (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment