அத்தியாயம்: 4, பாடம்: 37, ஹதீஸ் எண்: 717

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ عُثْمَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُوسَى بْنُ طَلْحَةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي الْعَاصِ الثَّقَفِيُّ ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ لَهُ ‏ ‏أُمَّ قَوْمَكَ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَجِدُ فِي نَفْسِي شَيْئًا قَالَ ‏ ‏ادْنُهْ فَجَلَّسَنِي بَيْنَ يَدَيْهِ ثُمَّ وَضَعَ كَفَّهُ فِي صَدْرِي بَيْنَ ثَدْيَيَّ ثُمَّ قَالَ تَحَوَّلْ فَوَضَعَهَا فِي ظَهْرِي بَيْنَ كَتِفَيَّ ثُمَّ قَالَ أُمَّ قَوْمَكَ فَمَنْ أَمَّ قَوْمًا فَلْيُخَفِّفْ فَإِنَّ فِيهِمْ الْكَبِيرَ وَإِنَّ فِيهِمْ الْمَرِيضَ وَإِنَّ فِيهِمْ الضَّعِيفَ وَإِنَّ فِيهِمْ ذَا الْحَاجَةِ وَإِذَا صَلَّى أَحَدُكُمْ وَحْدَهُ فَلْيُصَلِّ كَيْفَ شَاءَ ‏

நபி(ஸல்) அவர்கள் என்னிடம், “நீங்கள் உங்கள் கூட்டத்தாருக்குத் தலைமை தாங்கித் தொழுவியுங்கள்” என்று கூறினார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! என் உள்ளத்தில் (இமாமத்துப் பெருமை) ஏதும் ஏற்பட்டுவிடுவதை நான் அஞ்சுகிறேன்” என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அருகில் வாருங்கள்!” என்று என்னை அழைத்துத் தமக்கு முன்னால் அமரவைத்தார்கள். பிறகு தமது கரத்தை என் நடுநெஞ்சில் வைத்தார்கள். பிறகு, “திரும்புங்கள்” என்றார்கள். (நான் திரும்பியதும்) தமது கரத்தை என் தோள்களுக்கிடையே நடுமுதுகில் வைத்தார்கள். பிறகு, “நீங்கள் உங்கள் கூட்டத்தாருக்குத் தலைமை தாங்கித் தொழுவியுங்கள். எவர் ஒரு கூட்டத்தாருக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கிறாரோ அவர் சுருக்கமாகத் தொழுவிக்கட்டும். ஏனெனில், அவர்களிடையே முதியவர்கள் உள்ளனர்; அவர்களிடையே நோயாளிகளும் பலவீனர்களும் அலுவலுடையோரும் உள்ளனர். உங்களில் ஒருவர் தனியாகத் தொழுதால் அவர், தாம் விரும்பியபடி தொழுதுகொள்ளட்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அபில்ஆஸ் அஸ்ஸகஃபீ (ரலி)