அத்தியாயம்: 4, பாடம்: 46, ஹதீஸ் எண்: 768

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ يَعْنِي الْأَحْمَرَ ‏ ‏عَنْ ‏ ‏حُسَيْنٍ الْمُعَلِّمِ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنٌ الْمُعَلِّمُ ‏ ‏عَنْ ‏ ‏بُدَيْلِ بْنِ مَيْسَرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْجَوْزَاءِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَسْتَفْتِحُ الصَّلَاةَ بِالتَّكْبِيرِ وَالْقِرَاءَةَ بِ ‏‏الْحَمْد لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ‏

‏وَكَانَ إِذَا رَكَعَ لَمْ ‏ ‏يُشْخِصْ ‏ ‏رَأْسَهُ وَلَمْ ‏ ‏يُصَوِّبْهُ ‏ ‏وَلَكِنْ بَيْنَ ذَلِكَ وَكَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ لَمْ يَسْجُدْ حَتَّى يَسْتَوِيَ قَائِمًا وَكَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ السَّجْدَةِ لَمْ يَسْجُدْ حَتَّى يَسْتَوِيَ جَالِسًا وَكَانَ يَقُولُ فِي كُلِّ رَكْعَتَيْنِ التَّحِيَّةَ وَكَانَ يَفْرِشُ رِجْلَهُ الْيُسْرَى وَيَنْصِبُ رِجْلَهُ الْيُمْنَى وَكَانَ يَنْهَى عَنْ ‏ ‏عُقْبَةِ الشَّيْطَانِ ‏ ‏وَيَنْهَى أَنْ يَفْتَرِشَ الرَّجُلُ ذِرَاعَيْهِ افْتِرَاشَ السَّبُعِ وَكَانَ يَخْتِمُ الصَّلَاةَ بِالتَّسْلِيمِ ‏

‏وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ نُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي خَالِدٍ ‏ ‏وَكَانَ يَنْهَى عَنْ ‏ ‏عَقِبِ الشَّيْطَانِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறித் தொழுகையைத் துவக்குவார்கள். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று (குர்ஆன்) ஓத ஆரம்பிப்பார்கள். ருகூஉச் செய்யும்போது தலையை உயர்த்தாமல், தாழ்த்தாமல் நேராக வைத்திருப்பார்கள். ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தினால் நிமிர்ந்து நிற்காமல் ஸஜ்தாவுக்குச் செல்லமாட்டார்கள். ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தினால் நேராக நிமர்ந்து உட்காராமல் (இரண்டாவது) ஸஜ்தாச் செய்யமாட்டார்கள். ஒவ்வொர் இரண்டு ரக்அத்திலும் அத்திஹிய்யாத் ஓதுவார்கள். (அமர்வின்போது) இடக்காலை விரித்துவைத்து, வலக்காலை நட்டுவைப்பார்கள். மேலும், ஷைத்தான் உட்காருவதைப் போன்று (கால்களை நட்டு, புட்டத்தைத் தரையில் படியவைத்து) உட்கார வேண்டாம் என்றும், மிருகங்கள் உட்காருவதைப் போன்று முழங்கைகளைத் தரையில் பரப்பி வைத்து உட்கார வேண்டாம் என்றும் தடை விதித்துவந்தார்கள். அவர்கள் ஸலாம் கூறித் தொழுகையை முடிப்பார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு :

அபூகாலித் (ரஹ்) வழியில் இப்னு நுமைர் (ரஹ்) அறிவிக்கும் ஹதீஸில் ஷைத்தான் அமர்வதைப் போன்று என்பதைக் குறிக்க மூலத்தில் வந்துள்ள “உக்பத்திஷ் ஷைத்தான்” என்பதற்கு பதிலாக “அகிபிஷ் ஷைத்தான்” என்று காணப்படுகிறது.

Share this Hadith:

Leave a Comment