அத்தியாயம்: 4, பாடம்: 49, ஹதீஸ் எண்: 788

حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَكِّيٌّ ‏ ‏قَالَ ‏ ‏يَزِيدُ ‏ ‏أَخْبَرَنَا قَالَ ‏

كَانَ ‏ ‏سَلَمَةُ ‏ ‏يَتَحَرَّى ‏ ‏الصَّلَاةَ عِنْدَ الْأُسْطُوَانَةِ الَّتِي عِنْدَ الْمُصْحَفِ فَقُلْتُ لَهُ يَا ‏ ‏أَبَا مُسْلِمٍ ‏ ‏أَرَاكَ ‏ ‏تَتَحَرَّى ‏ ‏الصَّلَاةَ عِنْدَ هَذِهِ الْأُسْطُوَانَةِ قَالَ رَأَيْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَتَحَرَّى ‏ ‏الصَّلَاةَ عِنْدَهَا ‏

ஸலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந்நபவீயில்) குர்ஆன் வைக்கப்படும் இடத்திற்குப் பக்கத்திலிருந்த தூணருகில் தொழுவதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். அவர்களிடம் நான், “அபூ முஸ்லிம்! தாங்கள் இந்தத் தூணுக்கு அருகில் தொழுவதையே தேர்ந்தெடுத்துக் கொள்வதை நான் காண்கிறேனே (என்ன காரணம்)?” என்று கேட்டேன். அதற்கு ஸலமா (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் இந்தத் தூணுக்கு அருகில் தொழுவதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன் (ஆகவேதான் நானும் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸலமா இப்னுக் அக்வஃ (ரலி) வழியாக யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 49, ஹதீஸ் எண்: 787

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ الْمُثَنَّى ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا وَقَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ مَسْعَدَةَ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ يَعْنِي ابْنَ أَبِي عُبَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏سَلَمَةَ وَهُوَ ابْنُ الْأَكْوَعِ ‏

أَنَّهُ كَانَ ‏ ‏يَتَحَرَّى ‏ ‏مَوْضِعَ مَكَانِ الْمُصْحَفِ يُسَبِّحُ فِيهِ وَذَكَرَ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَتَحَرَّى ‏ ‏ذَلِكَ الْمَكَانَ ‏ ‏وَكَانَ بَيْنَ الْمِنْبَرِ وَالْقِبْلَةِ قَدْرُ مَمَرِّ الشَّاةِ ‏

ஸலமா இப்னுல் அக்வஃ (ரலி) அவர்கள், (மஸ்ஜிதுந் நபவீயில்) குர்ஆன் வைக்கப்படும் இடத்தை அடுத்துள்ள (தூண் எதிரே) உள்ள இடத்தில் கூடுதலான (நஃபில்) தொழுகையைத் தொழும் வழக்கமுள்ளவராக இருந்தார்கள். மேலும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து (நஃபில்) தொழுவார்கள். சொற்பொழிவு மேடைக்கும் (மிம்பர்) கிப்லாவுக்கும் இடையே ஓர் ஆடு கடந்து செல்லும் அளவுக்கே இடைவெளி இருந்தது” என்று நினைவு கூர்ந்தார்.

அறிவிப்பாளர் : ஸலமா இப்னுக் அக்வஃ (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 49, ஹதீஸ் எண்: 786

حَدَّثَنِي ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي حَازِمٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ ‏ ‏قَالَ ‏

حَدَّثَنِي ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي حَازِمٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ ‏ ‏قَالَ ‏
‏كَانَ بَيْنَ مُصَلَّى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَبَيْنَ الْجِدَارِ مَمَرُّ الشَّاةِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழ நிற்கும் இடத்திற்கும் (கிப்லாத் திசையில் அமைந்த) சுவருக்கும் இடையே ஓர் ஆடு கடந்து செல்லும் அளவுக்கு இடைவெளி இருந்தது.

அறிவிப்பாளர் : ஸஹ்லிப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ (ரலி)