அத்தியாயம்: 4, பாடம்: 51, ஹதீஸ் எண்: 796

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي النَّضْرِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ :‏

كُنْتُ أَنَامُ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَرِجْلَايَ فِي قِبْلَتِهِ فَإِذَا سَجَدَ غَمَزَنِي فَقَبَضْتُ رِجْلَيَّ وَإِذَا قَامَ بَسَطْتُهُمَا قَالَتْ وَالْبُيُوتُ يَوْمَئِذٍ لَيْسَ فِيهَا مَصَابِيحُ ‏

நான் (இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் (படுத்து) உறங்கிக் கொண்டிருப்பேன். அப்போது என் கால்கள் அவர்களது கிப்லாவில் (ஸஜ்தாச் செய்யுமிடத்தில்) இருக்கும். அவர்கள் ஸஜ்தாவுக்காக வரும்போது என்னைத் தமது விரலால் தொட்டுணர்த்துவார்கள். உடனே நான் என் கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் மீண்டும் நிலைக்குச் சென்றுவிட்டால் நான் (மறுபடியும்) கால்களை நீட்டிக் கொள்வேன். அந்த நாட்களில் (எங்கள்) வீடுகளில் விளக்குகள் இருந்ததில்லை.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

Share this Hadith:

Leave a Comment