அத்தியாயம்: 40, பாடம்: 2, ஹதீஸ் எண்: 4165

وَحَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكٍ، قَالَ سَمِعْتُ عَلْقَمَةَ بْنَ وَائِلٍ، عَنْ أَبِيهِ :‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لاَ تَقُولُوا الْكَرْمُ ‏.‏ وَلَكِنْ قُولُوا الْعِنَبُ وَالْحَبَلَةُ”‏ ‏

“அல்கர்மு என்று (திராட்சையைக்) கூறாதீர்கள். மாறாக, ‘அல்இனப்’ என்றோ ‘அல்ஹப்லா’ என்றோ சொல்லுங்கள்” என்று  நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : வாயில் பின் ஹுஜ்ரு (ரலி)

அத்தியாயம்: 40, பாடம்: 2, ஹதீஸ் எண்: 4164

حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا عِيسَى، – يَعْنِي ابْنَ يُونُسَ – عَنْ شُعْبَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ :‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لاَ تَقُولُوا الْكَرْمُ ‏.‏ وَلَكِنْ قُولُوا الْحَبَلَةُ ‏”‏ ‏‏ يَعْنِي الْعِنَبَ ‏

“அல்கர்மு என்று (திராட்சையைக்) கூறாதீர்கள். மாறாக ‘அல்ஹப்லா’ என்று சொல்லுங்கள்” என்று  நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : வாயில் பின் ஹுஜ்ரு (ரலி)

அத்தியாயம்: 40, பாடம்: 2, ஹதீஸ் எண்: 4163

وَحَدَّثَنَا ابْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ :‏

عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ لِلْعِنَبِ الْكَرْمَ ‏.‏ إِنَّمَا الْكَرْمُ الرَّجُلُ الْمُسْلِمُ ‏”‏

“உங்களில் எவரும் திராட்சையை ‘அல்கர்மு’ (கண்ணியமானது) என்று கூறாதீர்கள். உண்மையில் கண்ணியம் (எனும் பெயருக்குத் தகுதியானவர்) முஸ்லிமான மனிதராவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்)


குறிப்பு :

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களுள் இதுவும் ஒன்றாகும்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 40, பாடம்: 2, ஹதீஸ் எண்: 4162

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا وَرْقَاءُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لاَ يَقُولَنَّ أَحَدُكُمُ الْكَرْمُ ‏.‏ فَإِنَّمَا الْكَرْمُ قَلْبُ الْمُؤْمِنِ ‏”‏

“உங்களில் எவரும் (திராட்சையை) ‘அல்கர்மு’ (கண்ணியம்) என்று கூற வேண்டாம். உண்மையில் கண்ணியம் (எனும் பெயருக்குத் தகுதியானது) இறைநம்பிக்கையாளரின் இதயமாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 40, பாடம்: 2, ஹதீஸ் எண்: 4161

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ هِشَامٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لاَ تُسَمُّوا الْعِنَبَ الْكَرْمَ فَإِنَّ الْكَرْمَ الرَّجُلُ الْمُسْلِمُ ‏”‏

திராட்சையை ‘அல்கர்மு’ (‘கண்ணியம்’) என்று பெயரிட்டழைக்காதீர்கள். உண்மையில் கண்ணியம் (எனும் பெயருக்குத் தகுதியானவர்) முஸ்லிமான மனிதர் ஆவார்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 40, பாடம்: 2, ஹதீஸ் எண்: 4160

حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، وَابْنُ أَبِي عُمَرَ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لاَ تَقُولُوا كَرْمٌ ‏.‏ فَإِنَّ الْكَرْمَ قَلْبُ الْمُؤْمِنِ ‏”‏

“திராட்சையை ‘கர்மு’ (கண்ணியமானது) என்று கூறாதீர்கள். ஏனெனில், கண்ணியத்திற்குரியது (எனும் பெயருக்குத் தகுதியானது) இறைநம்பிக்கையாளரின் இதயமே ஆகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 40, பாடம்: 2, ஹதீஸ் எண்: 4159

حَدَّثَنَا حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لاَ يَسُبُّ أَحَدُكُمُ الدَّهْرَ فَإِنَّ اللَّهَ هُوَ الدَّهْرُ وَلاَ يَقُولَنَّ أَحَدُكُمْ لِلْعِنَبِ الْكَرْمَ ‏.‏ فَإِنَّ الْكَرْمَ الرَّجُلُ الْمُسْلِمُ ‏”‏

“உங்களில் யாரும் காலத்தை ஏச வேண் டாம். ஏனெனில், அல்லாஹ்வே காலம் (படைத்து இயக்குபவன்); உங்களில் யாரும் திராட்சையை (‘கண்ணியம்’ எனும் பொருள் கொண்ட) “அல்கர்மு“ என்று பெயரிட்டு அழைக்க வேண்டாம். உண்மையில் கண்ணியம் (எனும் பெயருக்குத் தகுதியானவர்) முஸ்லிமான மனிதர் ஆவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)