அத்தியாயம்: 43, பாடம்: 22, ஹதீஸ் எண்: 4289

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ عَنْ أُمِّ سُلَيْمٍ :‏ ‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَأْتِيهَا فَيَقِيلُ عِنْدَهَا فَتَبْسُطُ لَهُ نَطْعًا فَيَقِيلُ عَلَيْهِ وَكَانَ كَثِيرَ الْعَرَقِ فَكَانَتْ تَجْمَعُ عَرَقَهُ فَتَجْعَلُهُ فِي الطِّيبِ وَالْقَوَارِيرِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ “‏ يَا أُمَّ سُلَيْمٍ مَا هَذَا ‏”‏ ‏‏ قَالَتْ عَرَقُكَ أَدُوفُ بِهِ طِيبِي ‏

நபி (ஸல்) எங்கள் வீட்டுக்கு மதிய ஓய்வெடுப்பதற்காக வருவார்கள். அப்போது அவர்களுக்காக நான் தோல் விரிப்பு ஒன்றை விரிப்பேன். அந்த விரிப்பில் நபி (ஸல்) மதிய ஓய்வெடுப்பார்கள். நபி (ஸல்) அவர்களது உடலில் அதிகமாக வியர்வை ஏற்படும். அப்போது நான் அவர்களது வியர்வைத் துளிகளை எடுத்து வாசனைப் பொருட்களிலும் கண்ணாடிக் குடுவைகளிலும் சேகரிப்பது வழக்கம். அப்படியான ஒருபோது நபி (ஸல்), “உம்முஸுலைமே! என்ன இது?” என்று கேட்டார்கள். அதற்கு நான் “உங்களது வியர்வைத் துளிகளை எனது நறுமணப் பொருளில் சேர்க்கின்றேன்” என்று கூறினேன்.

அறிவிப்பாளர் : உம்முஸுலைம் (ரலி)

அத்தியாயம்: 43, பாடம்: 22, ஹதீஸ் எண்: 4288

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا حُجَيْنُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، – وَهُوَ ابْنُ أَبِي سَلَمَةَ – عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :‏ ‏

كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدْخُلُ بَيْتَ أُمِّ سُلَيْمٍ فَيَنَامُ عَلَى فِرَاشِهَا وَلَيْسَتْ فِيهِ – قَالَ – فَجَاءَ ذَاتَ يَوْمٍ فَنَامَ عَلَى فِرَاشِهَا فَأُتِيَتْ فَقِيلَ لَهَا هَذَا النَّبِيُّ صلى الله عليه وسلم نَامَ فِي بَيْتِكِ عَلَى فِرَاشِكِ – قَالَ – فَجَاءَتْ وَقَدْ عَرِقَ وَاسْتَنْقَعَ عَرَقُهُ عَلَى قِطْعَةِ أَدِيمٍ عَلَى الْفِرَاشِ فَفَتَحَتْ عَتِيدَتَهَا فَجَعَلَتْ تُنَشِّفُ ذَلِكَ الْعَرَقَ فَتَعْصِرُهُ فِي قَوَارِيرِهَا فَفَزِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ ‏”‏ مَا تَصْنَعِينَ يَا أُمَّ سُلَيْمٍ ‏”‏ ‏.‏ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ نَرْجُو بَرَكَتَهُ لِصِبْيَانِنَا قَالَ ‏”‏ أَصَبْتِ ‏”‏

நபி (ஸல்), (என் தாயார்) உம்முஸுலைம் (ரலி) அவர்களின் இல்லத்துக்கு வந்து, அங்கு உம்முஸுலைம் இல்லாவிட்டால் அவர்களது விரிப்பில் படுத்து உறங்குவார்கள். ஒரு நாள் நபி (ஸல்) வந்து உம்முஸுலைமின் விரிப்பில் படுத்துறங்கினார்கள். அப்போது அங்கு வந்த உம்முஸுலைம் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) உங்கள் வீட்டில், உங்கள் விரிப்பில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்று சொல்லப்பட்டது.

உடனே உம்முஸுலைம் (ரலி) வந்(து பார்த்)தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வியர்த்திருந்தது. அவர்களது வியர்வை, படுக்கையில் ஒரு துண்டுத் தோலில் திரண்டிருந்தது. உடனே உம்முஸுலைம், தமது நறுமணப் பெட்டியைத் திறந்து, அந்த வியர்வைத் துளிகளைத் துடைத்து தமது கண்ணாடிக் குடுவையொன்றில் அதைப் பிழிந்து சேகரிக்கலானார்கள். நபி (ஸல்) திடுக்கிட்டு விழித்து, “உம்முஸுலைமே! என்ன செய்கின்றாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! அதிலுள்ள அருள்வளத்தை எங்கள் குழந்தைகளுக்காகச் சேர்த்து வைக்கின்றோம்” என்று கூறினார்கள். நபி (ஸல்) “நீ செய்தது சரிதான்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 43, பாடம்: 22, ஹதீஸ் எண்: 4287

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا هَاشِمٌ، – يَعْنِي ابْنَ الْقَاسِمِ – عَنْ سُلَيْمَانَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :‏ ‏

دَخَلَ عَلَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ عِنْدَنَا فَعَرِقَ وَجَاءَتْ أُمِّي بِقَارُورَةٍ فَجَعَلَتْ تَسْلُتُ الْعَرَقَ فِيهَا فَاسْتَيْقَظَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ “‏ يَا أُمَّ سُلَيْمٍ مَا هَذَا الَّذِي تَصْنَعِينَ ‏”‏ ‏.‏ قَالَتْ هَذَا عَرَقُكَ نَجْعَلُهُ فِي طِيبِنَا وَهُوَ مِنْ أَطْيَبِ الطِّيبِ

நபி (ஸல்), எங்களது வீட்டுக்கு வந்து மதிய ஓய்வெடுத்தார்கள். அப்போது அவர்களது உடலில் வியர்வை ஏற்பட்டது. என் தாயார் (உம்முஸுலைம்) ஒரு கண்ணாடிக் குடுவையுடன் வந்து வியர்வைத் துளிகளை அந்தக் குடுவையில் சேகரிக்கலானார்கள். நபி (ஸல்) உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து, “உம்முஸுலைமே! என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார்கள். என் தாயார், “இது உங்களது வியர்வை. இதை எங்கள் நறுமணப் பொருளில் சேர்க்கிறோம். இது நல்ல வாசனைத் திரவியங்களில் ஒன்றாகும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)