அத்தியாயம்: 43, பாடம்: 33, ஹதீஸ் எண்: 4325

وَحَدَّثَنِي ابْنُ مِنْهَالٍ الضَّرِيرُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ عُبَيْدٍ، عَنْ عَمَّارٍ، مَوْلَى بَنِي هَاشِمٍ قَالَ :‏

سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ كَمْ أَتَى لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ مَاتَ فَقَالَ مَا كُنْتُ أَحْسِبُ مِثْلَكَ مِنْ قَوْمِهِ يَخْفَى عَلَيْهِ ذَاكَ – قَالَ – قُلْتُ إِنِّي قَدْ سَأَلْتُ النَّاسَ فَاخْتَلَفُوا عَلَىَّ فَأَحْبَبْتُ أَنْ أَعْلَمَ قَوْلَكَ فِيهِ ‏.‏ قَالَ أَتَحْسُبُ قَالَ قُلْتُ نَعَمْ ‏.‏ قَالَ أَمْسِكْ أَرْبَعِينَ بُعِثَ لَهَا خَمْسَ عَشْرَةَ بِمَكَّةَ يَأْمَنُ وَيَخَافُ وَعَشْرَ مِنْ مُهَاجَرِهِ إِلَى الْمَدِينَةِ‏


وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا شَبَابَةُ بْنُ سَوَّارٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يُونُسَ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ نَحْوَ حَدِيثِ يَزِيدَ بْنِ زُرَيْعٍ ‏

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறக்கும்போது அவர்களுக்கு எத்தனை வயது?” என்று கேட்டேன். “ஒரே சமுதாயத்தில் வாழும் உம்மைப் போன்ற ஒருவருக்கு இந்த விவரம்கூட தெரியாமலிருக்கும் என்று நான் கருதவில்லை” என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள். நான், “இதைப் பற்றி மக்களிடம் நான் கேட்டுவிட்டேன். ஆனால், அவர்கள் மாறுபட்ட கருத்தை என்னிடம் தெரிவித்தார்கள். ஆகவே, அதில் உங்களது கருத்தை அறிய விரும்பினேன்” என்று சொன்னேன்.

உடனே இப்னு அப்பாஸ் (ரலி), “நீ எண்ணிக் கணக்கிடுவாயா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். “நாற்பது வயதிலிருந்து தொடங்குவாயாக. நாற்பதாவது வயதில் அவர்கள் நபியாக அனுப்பப்பட்டார்கள். பதினைந்து ஆண்டுகள் மக்காவில் (சில வேளை எதிரிகளைப் பற்றிய) பயமின்றியும் (சில வேளை) பயத்துடனும் இருந்தார்கள். மதீனாவிற்குப் புலம்பெயர்ந்ததிலிருந்து பத்தாண்டுகள் தங்கியிருந்தார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக, ஹாஷிம் குலப் பணியாளராக இருந்த அம்மார் (ரஹ்).


குறிப்பு :

நபி (ஸல்) அவர்களின் வயது, இறப்பு ஆகியவை குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அறிவிப்புகளுள் 4321 இலக்கமிட்ட அறிவிப்பே சரியானதாகும்.

Share this Hadith:

Leave a Comment