அத்தியாயம்: 44, பாடம்: 13, ஹதீஸ் எண்: 4452

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ وَجَدْتُ فِي كِتَابِي عَنْ أَبِي أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامٌ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏ ‏

قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ إِنِّي لأَعْلَمُ إِذَا كُنْتِ عَنِّي رَاضِيَةً وَإِذَا كُنْتِ عَلَىَّ غَضْبَى ‏”‏ ‏.‏ قَالَتْ فَقُلْتُ وَمِنْ أَيْنَ تَعْرِفُ ذَلِكَ قَالَ ‏”‏ أَمَّا إِذَا كُنْتِ عَنِّي رَاضِيَةً فَإِنَّكِ تَقُولِينَ لاَ وَرَبِّ مُحَمَّدٍ وَإِذَا كُنْتِ غَضْبَى قُلْتِ لاَ وَرَبِّ إِبْرَاهِيمَ ‏”‏ ‏.‏ قَالَتْ قُلْتُ أَجَلْ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ مَا أَهْجُرُ إِلاَّ اسْمَكَ ‏


وَحَدَّثَنَاهُ ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، بِهَذَا الإِسْنَادِ إِلَى قَوْلِهِ لاَ وَرَبِّ إِبْرَاهِيمَ ‏.‏ وَلَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ ‏

என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “எப்போது நீ என்மீது திருப்தியுடன் இருக்கிறாய்; எப்போது நீ என்மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று நான் நன்றாக அறிந்துவைத்துள்ளேன்” என்று சொன்னார்கள்.

அதற்கு நான், “எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “என்மீது நீ திருப்தியுடன் இருக்கும் போது (எதையேனும் நீ மறுத்தால்), “முஹம்மதின் அதிபதிமீது சத்தியமாக, இல்லை!’ என்று கூறுவாய். என்மீது கோபமாய் இருந்தால், “இப்ராஹீம் (அலை) அவர்களுடைய அதிபதிமீது சத்தியமாக, இல்லை! என்று கூறுவாய்” என்று சொன்னார்கள்.

நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! ஆம் (உண்மைதான்), அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களது பெயரைத்தான் கோபித்துக்கொள்வேன் (உங்களையன்று)” என்று கூறினேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

அப்தத்து (ரஹ்) வழி அறிவிப்பில் “இப்ராஹீம் (அலை) அவர்களின் அதிபதிமீது சத்தியமாக, இல்லை!” என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ளவை இடம்பெறவில்லை.

Share this Hadith: