அத்தியாயம்: 44, பாடம்: 13, ஹதீஸ் எண்: 4455

حَدَّثَنِي الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، وَأَبُو بَكْرِ بْنُ النَّضْرِ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ عَبْدٌ حَدَّثَنِي وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ :‏ ‏

أَرْسَلَ أَزْوَاجُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَاطِمَةَ بِنْتَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَاسْتَأْذَنَتْ عَلَيْهِ وَهُوَ مُضْطَجِعٌ مَعِي فِي مِرْطِي فَأَذِنَ لَهَا فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَزْوَاجَكَ أَرْسَلْنَنِي إِلَيْكَ يَسْأَلْنَكَ الْعَدْلَ فِي ابْنَةِ أَبِي قُحَافَةَ وَأَنَا سَاكِتَةٌ – قَالَتْ – فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ أَىْ بُنَيَّةُ أَلَسْتِ تُحِبِّينَ مَا أُحِبُّ ‏”‏ ‏.‏ فَقَالَتْ بَلَى ‏.‏ قَالَ ‏”‏ فَأَحِبِّي هَذِهِ ‏”‏ ‏.‏ قَالَتْ فَقَامَتْ فَاطِمَةُ حِينَ سَمِعَتْ ذَلِكَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَرَجَعَتْ إِلَى أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَخْبَرَتْهُنَّ بِالَّذِي قَالَتْ وَبِالَّذِي قَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْنَ لَهَا مَا نُرَاكِ أَغْنَيْتِ عَنَّا مِنْ شَىْءٍ فَارْجِعِي إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقُولِي لَهُ إِنَّ أَزْوَاجَكَ يَنْشُدْنَكَ الْعَدْلَ فِي ابْنَةِ أَبِي قُحَافَةَ ‏.‏ فَقَالَتْ فَاطِمَةُ وَاللَّهِ لاَ أُكَلِّمُهُ فِيهَا أَبَدًا ‏.‏ قَالَتْ عَائِشَةُ فَأَرْسَلَ أَزْوَاجُ النَّبِيِّ صلى الله عليه وسلم زَيْنَبَ بِنْتَ جَحْشٍ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهِيَ الَّتِي كَانَتْ تُسَامِينِي مِنْهُنَّ فِي الْمَنْزِلَةِ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلَمْ أَرَ امْرَأَةً قَطُّ خَيْرًا فِي الدِّينِ مِنْ زَيْنَبَ وَأَتْقَى لِلَّهِ وَأَصْدَقَ حَدِيثًا وَأَوْصَلَ لِلرَّحِمِ وَأَعْظَمَ صَدَقَةً وَأَشَدَّ ابْتِذَالاً لِنَفْسِهَا فِي الْعَمَلِ الَّذِي تَصَدَّقُ بِهِ وَتَقَرَّبُ بِهِ إِلَى اللَّهِ تَعَالَى مَا عَدَا سَوْرَةً مِنْ حَدٍّ كَانَتْ فِيهَا تُسْرِعُ مِنْهَا الْفَيْئَةَ قَالَتْ فَاسْتَأْذَنَتْ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَعَ عَائِشَةَ فِي مِرْطِهَا عَلَى الْحَالَةِ الَّتِي دَخَلَتْ فَاطِمَةُ عَلَيْهَا وَهُوَ بِهَا فَأَذِنَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَزْوَاجَكَ أَرْسَلْنَنِي إِلَيْكَ يَسْأَلْنَكَ الْعَدْلَ فِي ابْنَةِ أَبِي قُحَافَةَ ‏.‏ قَالَتْ ثُمَّ وَقَعَتْ بِي فَاسْتَطَالَتْ عَلَىَّ وَأَنَا أَرْقُبُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَأَرْقُبُ طَرْفَهُ هَلْ يَأْذَنُ لِي فِيهَا – قَالَتْ – فَلَمْ تَبْرَحْ زَيْنَبُ حَتَّى عَرَفْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لاَ يَكْرَهُ أَنْ أَنْتَصِرَ – قَالَتْ – فَلَمَّا وَقَعْتُ بِهَا لَمْ أَنْشَبْهَا حِينَ أَنْحَيْتُ عَلَيْهَا – قَالَتْ – فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَتَبَسَّمَ ‏”‏ إِنَّهَا ابْنَةُ أَبِي بَكْرٍ ‏”‏ ‏


حَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قُهْزَاذَ، قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ حَدَّثَنِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ مِثْلَهُ فِي الْمَعْنَى غَيْرَ أَنَّهُ قَالَ فَلَمَّا وَقَعْتُ بِهَا لَمْ أَنْشَبْهَا أَنْ أَثْخَنْتُهَا غَلَبَةً ‏‏

நபி (ஸல்) அவர்களின் மனைவியர், நபியவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை (ஒரு முறை) நபியவர்களிடம் அனுப்பிவைத்தார்கள். ஃபாத்திமா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து, உள்ளே வர அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) என்னுடன் எனது போர்வைக்குள் படுத்திருந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு உள்ளே வர அனுமதியளித்தார்கள்.

ஃபாத்திமா (ரலி) (உள்ளே வந்து), “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மனைவியர் அபூகுஹாஃபாவின் (மகன் அபூபக்ரு உடைய) மகள் (ஆயிஷா) விஷயத்தில் (நீங்கள் காட்டுவதைப் போன்றே பிற மனைவியரிடமும் வாஞ்சை காட்டி) சமநீதியுடன் நடந்துகொள்ளும்படி கேட்குமாறு என்னை உங்களிடம் அனுப்பிவைத்துள்ளார்கள்” என்று கூறினார்.

நான் அமைதியாக இருந்தேன்.

நபி (ஸல்), “என் அன்பு மகளே! நான் நேசம் கொள்வதை / கொள்பவரை நீயும் நேசிப்பாய் அல்லவா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “ஆம்!” என்று கூறினார்கள். நபி (ஸல்) (என்னைக் காட்டி) “அப்படியானால், இவரை நேசிப்பாயாக!” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) இவ்வாறு கூறியதைக் கேட்டவுடன் ஃபாத்திமா (ரலி) எழுந்து, நபி (ஸல்) அவர்களின் மனைவியரிடம் திரும்பிச் சென்று, தாம் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னதையும் அதற்கு நபி (ஸல்) அளித்த பதிலையும் தெரிவித்தார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்களின் மனைவியர், எங்களுக்கு நீங்கள் (இப்போது) எந்த நன்மையும் செய்துவிடவில்லை என்று கருதுகின்றோம். ஆகவே, (மீண்டும்) நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்று, “உங்கள் மனைவி அபூகுஹாஃபாவின் (மகன் அபூபக்ரு உடைய) மகள் (ஆயிஷா) விஷயத்தில் (நீங்கள் காட்டுவதைப் போன்றே பிற மனைவியரிடமும் வாஞ்சை காட்டி) சமநீதியுடன் நடந்துகொள்ளும்படி கேட்குமாறு என்னை உங்களிடம் அனுப்பிவைத்துள்ளார்கள்” என்று கூறுமாறு வேண்டினார்கள்.

அதற்கு ஃபாத்திமா (ரலி), “அல்லாஹ்வின் மீதாணையாக! (இனி) ஆயிஷா (ரலி) தொடர்பாக நான் நபியவர்களிடம் ஒருபோதும் பேசமுடியாது” என்று கூறி (மறுத்து) விட்டார்கள்.

ஆகவே, நபி (ஸல்) அவர்களின் மனைவியருள் ஒருவரான ஸைனப் பின்த்தி ஜஹ்ஷு (ரலி) அவர்களை அனுப்பிவைத்தார்கள். ஸைனப் அவர்கள் நபியவர்களின் மனைவியருள் நபியவர்களிடம் அந்தஸ்து பெற்றிருந்த விஷயத்தில் எனக்குப் போட்டியாக இருந்தவராவார். மார்க்க ஈடுபாட்டிலும் இறைவனை அஞ்சி நடப்பதிலும் உண்மை பேசுவதிலும் உறவுகளை அனுசரிப்பதிலும் தாராளமாகத் தானம் வழங்குவதிலும் இறைநெருக்கத்தையும் வாய்மையையும் தரும் நற்செயல்களில் தம்மைத் தீவிரமாக ஈடுபடுத்திக்கொள்வதிலும் ஸைனப் அவர்களைவிடச் சிறந்த ஒரு பெண்ணை நான் ஒருபோதும் கண்டதில்லை. ஆயினும், அவர் முன்கோபக்காரராக இருந்தார். அதே வேகத்தில் கோபம் தணியக்கூடியவராகவும் இருந்தார்.

அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து உள்ளே நுழைய அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) போர்வைக்குள் என்னுடன் இருந்தார்கள். ஃபாத்திமா (ரலி) தம்மிடம் வந்தபோது இருந்த நிலையிலேயே அப்போதும் நபியவர்கள் இருந்தார்கள். நபி (ஸல்) ஸைனப் (ரலி) அவர்களுக்கு உள்ளேவர அனுமதியளித்தார்கள்.

ஸைனப் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அபூகுஹாஃபாவின் (மகன் அபூபக்ரு உடைய) மகள் (ஆயிஷா) விஷயத்தில் (அவரிடம் அன்பு காட்டுவதைப் போன்றே பிற மனைவியரிடமும் அன்புகாட்டி) சமநீதியுடன் நடந்துகொள்ளுமாறு கேட்டு என்னை உங்களிடம் உங்களுடைய மனைவியர் அனுப்பியுள்ளார்கள்” என்று கூறினார்.

பிறகு ஸைனப் (என்ன நினைத்தாரோ), என்னை எல்லைமீறி ஏசத் தொடங்கினார். நான் (அவருக்குப் பதில் சொல்ல) நபி (ஸல்) எனக்கு அனுமதியளிப்பார்களா? கண் சாடையாவது காட்டுவார்களா? என்று எதிர்பார்த்தேன். ஆனால், ஸைனப் தொடர்ந்து ஏசிக்கொண்டேபோக, அவருக்கு நான் பதிலடி கொடுப்பதை நபி (ஸல்) வெறுக்கமாட்டார்கள் என நான் அறிந்து கொண்டேன்.

நான் அவருக்குப் பதில் சொல்ல ஆரம்பித்து, அவரை வாயடைக்கச் செய்ய எனக்கு நீண்ட நேரம் பிடிக்கவில்லை. அப்போது நபி (ஸல்) புன்னகைத்தபடியே “இவள் அபூபக்ரின் மகளாயிற்றே!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் அவருக்குப் பதில் சொல்ல ஆரம்பித்து, வெகுவிரைவிலேயே அவரை முற்றாக அடக்கிவிட்டேன்” என்று ஆயிஷா (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: