அத்தியாயம்: 44, பாடம்: 13, ஹதீஸ் எண்: 4459

حَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، حَدَّثَنِي عُقَيْلُ بْنُ خَالِدٍ، قَالَ قَالَ ابْنُ شِهَابٍ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، وَعُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، فِي رِجَالٍ مِنْ أَهْلِ الْعِلْمِ أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ :‏ ‏

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ وَهُوَ صَحِيحٌ ‏”‏ إِنَّهُ لَمْ يُقْبَضْ نَبِيٌّ قَطُّ حَتَّى يَرَى مَقْعَدَهُ فِي الْجَنَّةِ ثُمَّ يُخَيَّرُ ‏”‏ ‏.‏ قَالَتْ عَائِشَةُ فَلَمَّا نَزَلَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَرَأْسُهُ عَلَى فَخِذِي غُشِيَ عَلَيْهِ سَاعَةً ثُمَّ أَفَاقَ فَأَشْخَصَ بَصَرَهُ إِلَى السَّقْفِ ثُمَّ قَالَ ‏”‏ اللَّهُمَّ الرَّفِيقَ الأَعْلَى ‏”‏ ‏.‏ قَالَتْ عَائِشَةُ قُلْتُ إِذًا لاَ يَخْتَارُنَا ‏.‏ قَالَتْ عَائِشَةُ وَعَرَفْتُ الْحَدِيثَ الَّذِي كَانَ يُحَدِّثُنَا بِهِ وَهُوَ صَحِيحٌ فِي قَوْلِهِ ‏”‏ إِنَّهُ لَمْ يُقْبَضْ نَبِيٌّ قَطُّ حَتَّى يَرَى مَقْعَدَهُ مِنَ الْجَنَّةِ ثُمَّ يُخَيَّرُ ‏”‏ ‏.‏ قَالَتْ عَائِشَةُ فَكَانَتْ تِلْكَ آخِرُ كَلِمَةٍ تَكَلَّمَ بِهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَوْلَهُ ‏”‏ اللَّهُمَّ الرَّفِيقَ الأَعْلَى ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உடல் நலத்துடன் இருந்தபோது, “சொர்க்கத்தில் தமது இருப்பிடம் காட்டப்பட்டு, பிறகு (மேலும் சில காலம் உயிர்வாழ்வதற்கு) வாய்ப்பளிக்கப்படாத வரை எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப்படவில்லை” என்று கூறுவார்கள்.

பிறகு அவர்களுக்கு நோய் கண்டு, தமது தலையை எனது மடிமீது வைத்திருந்த நிலையில் சிறிது நேரம் மயக்கமுற்றார்கள். பிறகு அவர்களுக்கு மயக்கம் தெளிந்தபோது வீட்டின் கூரையை நோக்கி அவர்களின் பார்வை நிலைகுத்தி நின்றது. பிறகு, “இறைவா! (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்!)” என்று வேண்டினார்கள். அப்போது நான், “அவர்கள் (இப்போது) நம்முடன் சேர்ந்திருப்பதை தேர்ந்துகொள்ளவில்லை” என்று (மனத்திற்குள்) கூறிக்கொண்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உடல் நலத்துடன் இருந்தபோது, “சொர்க்கத்தில் தமது இருப்பிடம் காட்டப்பட்டு, பிறகு (மேலும் சில காலம் உயிர் வாழ்வதற்கு) வாய்ப்பளிக்கப்படாத வரை எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப்படவில்லை” என்று அவர்களின் கூற்று இதுதான் என நான் புரிந்துகொண்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பேசிய இறுதி வார்த்தை “அல்லாஹும்மர் ரஃபீக்கல் அஃலா’ (இறைவா! உயர்ந்த தோழர்களுடன் என்னையும் சேர்த்தருள்!) என்பதாகவே இருந்தது.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸை, அறிஞர்கள் பலர் கூடியிருந்த அவையில் ஸயீத் பின் அல்முஸய்யப், உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) ஆகியோர் அறிவித்தனர்.