அத்தியாயம்: 44, பாடம்: 15, ஹதீஸ் எண்: 4471

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ زَكَرِيَّاءَ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ فِرَاسٍ، عَنْ عَامِرٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ قَالَتِ :‏

اجْتَمَعَ نِسَاءُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمْ يُغَادِرْ مِنْهُنَّ امْرَأَةً فَجَاءَتْ فَاطِمَةُ تَمْشِي كَأَنَّ مِشْيَتَهَا مِشْيَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏”‏ مَرْحَبًا بِابْنَتِي ‏”‏ ‏.‏ فَأَجْلَسَهَا عَنْ يَمِينِهِ أَوْ عَنْ شِمَالِهِ ثُمَّ إِنَّهُ أَسَرَّ إِلَيْهَا حَدِيثًا فَبَكَتْ فَاطِمَةُ ثُمَّ إِنَّهُ سَارَّهَا فَضَحِكَتْ أَيْضًا فَقُلْتُ لَهَا مَا يُبْكِيكِ فَقَالَتْ مَا كُنْتُ لأُفْشِيَ سِرَّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَقُلْتُ مَا رَأَيْتُ كَالْيَوْمِ فَرَحًا أَقْرَبَ مِنْ حُزْنٍ ‏.‏ فَقُلْتُ لَهَا حِينَ بَكَتْ أَخَصَّكِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِحَدِيثِهِ دُونَنَا ثُمَّ تَبْكِينَ وَسَأَلْتُهَا عَمَّا قَالَ فَقَالَتْ مَا كُنْتُ لأُفْشِيَ سِرَّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ حَتَّى إِذَا قُبِضَ سَأَلْتُهَا فَقَالَتْ إِنَّهُ كَانَ حَدَّثَنِي ‏”‏ أَنَّ جِبْرِيلَ كَانَ يُعَارِضُهُ بِالْقُرْآنِ كُلَّ عَامٍ مَرَّةً وَإِنَّهُ عَارَضَهُ بِهِ فِي الْعَامِ مَرَّتَيْنِ وَلاَ أُرَانِي إِلاَّ قَدْ حَضَرَ أَجَلِي وَإِنَّكِ أَوَّلُ أَهْلِي لُحُوقًا بِي وَنِعْمَ السَّلَفُ أَنَا لَكِ ‏”‏ ‏.‏ فَبَكَيْتُ لِذَلِكِ ثُمَّ إِنَّهُ سَارَّنِي فَقَالَ ‏”‏ أَلاَ تَرْضَيْنَ أَنْ تَكُونِي سَيِّدَةَ نِسَاءِ الْمُؤْمِنِينَ أَوْ سَيِّدَةَ نِسَاءِ هَذِهِ الأُمَّةِ ‏”‏ ‏.‏ فَضَحِكْتُ لِذَلِكِ ‏.‏

நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர்கூட விடுபடாமல் (நாங்கள்) அனைவரும் அவர்களுக்கு இறப்பு நெருங்கிக்கொண்டிருந்தபோது) அருகில் இருந்தோம்.

அப்போது ஃபாத்திமா (ரலி) (தம் தந்தையை நோக்கி) நடந்துவந்தார். அவரது நடை அப்படியே நபி (ஸல்) அவர்களின் நடையின் சாயலில் இருந்தது. அப்போது நபி (ஸல்), “வருக! என் மகளே!” என்று அழைத்து, தமக்கு வலப்பக்கத்திலோ இடப்பக்கத்திலோ அமர்த்திக்கொண்டார்கள்.

பிறகு ஃபாத்திமாவிடம் இரகசியமாக ஏதோ சொன்னார்கள். அதைக் கேட்டதும் ஃபாத்திமா அழுதார். பிறகு அவரிடம் இரகசியமாக ஏதோ (இன்னொரு செய்தியைச்) சொன்னார்கள். அதைக் கேட்டதும் அவர் சிரித்தார்.

பிறகு நான் அவரிடம், “ஏன் அழுதீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்ன இரகசியத்தை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை” என்று கூறினார்.

அப்போது நான், “இன்றைய தினத்தைப் போன்று துக்கமும் மகிழ்ச்சியும் அடுத்தடுத்து (உங்களிடம்) நான் பார்த்ததே இல்லை” என்று சொல்லிவிட்டு, அழுதுகொண்டிருந்த அவரிடம், “எங்களை விட்டு உங்களிடம் மட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஏதோ சொன்னார்கள். (அதைக் கேட்டு) பிறகு நீங்கள் அழுதீர்களே! (அப்படி) என்ன சொன்னார்கள்?” என்று (மீண்டும்) கேட்டேன்.

அப்போதும் அவர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இரசியமாகச் சொன்னதை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை” என்று கூறிவிட்டார்.

நபி (ஸல்) இறந்தபின் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் அது குறித்துக் கேட்டேன். அப்போது அவர் கூறினார்: # நபி (ஸல்) என்னிடம், “(வானவர்) ஜிப்ரீல் என்னை ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை குர்ஆனை ஓதச் செய்வது வழக்கம். இந்த ஆண்டு மட்டும் என்னை இரு முறை ஓதச் செய்தார். என் வாழ்நாள் முடிவடையும் நேரம் வந்துவிட்ட(தைக் குறிப்ப)தாகவே அதை நான் கருதுகிறேன். என் குடும்பத்தாரில் என்னை முதலில் வந்தடையப்போவது நீதான். நான் உனக்கு முன்னர் நல்லபடியாக (இவ்வுலகை விட்டுச்) சென்றுவிடுவேன்” என்று கூறினார்கள். ஆகவே, நான் அழுதேன்.

பிறகு என்னிடம் “இறைநம்பிக்கையுள்ள பெண்களுக்கு / இந்தச் சமுதாயத்தின் பெண்களுக்குத் தலைவியாக இருக்க நீ விரும்பவில்லையா?“ என்று இரகசியமாகக் கேட்டார்கள். அதற்காக நான் சிரித்தேன்.# இவ்வாறு ஃபாத்திமா கூறினார்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

Share this Hadith: