அத்தியாயம்: 44, பாடம்: 2, ஹதீஸ் எண்: 4395

حَدَّثَنَا مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ يَعْنِي ابْنَ سَعْدٍ، ح وَحَدَّثَنَا حَسَنٌ الْحُلْوَانِيُّ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ عَبْدٌ أَخْبَرَنِي وَقَالَ حَسَنٌ حَدَّثَنَا يَعْقُوبُ، – وَهُوَ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ – حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عَبْدُ الْحَمِيدِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدٍ أَنَّ مُحَمَّدَ بْنَ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، أَخْبَرَهُ أَنَّ أَبَاهُ سَعْدًا قَالَ :‏

اسْتَأْذَنَ عُمَرُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَعِنْدَهُ نِسَاءٌ مِنْ قُرَيْشٍ يُكَلِّمْنَهُ وَيَسْتَكْثِرْنَهُ عَالِيَةً أَصْوَاتُهُنَّ فَلَمَّا اسْتَأْذَنَ عُمَرُ قُمْنَ يَبْتَدِرْنَ الْحِجَابَ فَأَذِنَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَضْحَكُ فَقَالَ عُمَرُ أَضْحَكَ اللَّهُ سِنَّكَ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ عَجِبْتُ مِنْ هَؤُلاَءِ اللاَّتِي كُنَّ عِنْدِي فَلَمَّا سَمِعْنَ صَوْتَكَ ابْتَدَرْنَ الْحِجَابَ ‏”‏ ‏.‏ قَالَ عُمَرُ فَأَنْتَ يَا رَسُولَ اللَّهِ أَحَقُّ أَنْ يَهَبْنَ ‏.‏ ثُمَّ قَالَ عُمَرُ أَىْ عَدُوَّاتِ أَنْفُسِهِنَّ أَتَهَبْنَنِي وَلاَ تَهَبْنَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قُلْنَ نَعَمْ أَنْتَ أَغْلَظُ وَأَفَظُّ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا لَقِيَكَ الشَّيْطَانُ قَطُّ سَالِكًا فَجًّا إِلاَّ سَلَكَ فَجًّا غَيْرَ فَجِّكَ ‏”‏


حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا بِهِ عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنِي سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَعِنْدَهُ نِسْوَةٌ قَدْ رَفَعْنَ أَصْوَاتَهُنَّ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا اسْتَأْذَنَ عُمَرُ ابْتَدَرْنَ الْحِجَابَ ‏.‏ فَذَكَرَ نَحْوَ حَدِيثِ الزُّهْرِيِّ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி(ன் வீட்டுக்குள் செல்ல அவர்களி)டம் (ஒரு முறை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அனுமதி கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின்  தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களுடைய) குறைஷி மனைவியர், உரத்த குரலில் (குடும்பச் செலவுத் தொகையை உயர்த்தித் தரும்படி கேட்டுப்) பேச்சை வளர்த்துக்கொண்டிருந்தனர்.

உமர் (ரலி) அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவசர அவசரமாகத் தம் பர்தாக்களை அணிந்துகொண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அனுமதி அளித்தவுடன் உமர் (ரலி) உள்ளே சென்றார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சிரித்துக்கொண்டிருந்தார்கள். உமர் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! உங்களை அல்லாஹ் (வாழ்நாள் முழுவதும்) சிரித்தபடி (மகிழ்ச்சியுடன்) இருக்கச் செய்வானாக!” என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(உமரே!) இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகின்றேன். என்னிடம்(இயல்பாக) இருந்துகொண்டிருந்தவர்கள், உங்கள் குரலைக் கேட்டதும் அவசர அவசரமாகப் பர்தா அணிந்துகொண்(டு உள்ளே சென்றுவிட்)டார்கள்” என்று சொன்னார்கள்.

அதற்கு உமர் (ரலி), “இவர்கள் (எனக்கு அஞ்சுவதைவிட) அதிகமாக அஞ்சுவதற்கு நீங்கள்தாம் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறிவிட்டுப் பிறகு, “தமக்குத் தாமே பகைவர்களாகிவிட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகின்றீர்கள்?” என்று உமர் (ரலி) கேட்டார்கள். அப்பெண்கள், “ஆம்; அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும்போது நீங்கள் கடின சித்தமுடையவராகவும் கடுமை காட்டக்கூடியவராகவும் இருக்கின்றீர்கள்” என்று பதிலளித்தனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “என் உயிர் கையிலுள்ளவன்மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஓர் அகன்ற பாதையில் சென்றுகொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் எதிர்கொண்டால், நீங்கள் வரும் பாதையல்லாத வேறு பாதையில் அவன் சென்றுவிடுவான்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)


குறிப்பு :

அபூஹுரைரா (ரலி) வழி அறிவிப்பு, “உமர் பின் அல்கத்தாப் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது, அவர்களுக்கு அருகில் அவர்களுடைய மனைவியர் அவர்களிடம் உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்தனர். உமர் (ரலி) அனுமதி கேட்டபோது அவர்கள் அவசர அவசரமாகப் பர்தா அணிந்து (எழுந்து)கொண்டார்கள் …” என்று ஆரம்பமாகிறது.

Share this Hadith:

Leave a Comment