அத்தியாயம்: 44, பாடம்: 23, ஹதீஸ் எண்: 4494

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأُبَىِّ بْنِ كَعْبٍ ‏”‏ إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ ‏{‏ لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا‏}‏ ‏”‏ ‏.‏ قَالَ وَسَمَّانِي قَالَ ‏”‏ نَعَمْ ‏”‏ ‏.‏ قَالَ فَبَكَى ‏


حَدَّثَنِيهِ يَحْيَى بْنُ حَبِيبٍ، حَدَّثَنَا خَالِدٌ، – يَعْنِي ابْنَ الْحَارِثِ – حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأُبَىٍّ بِمِثْلِهِ ‏‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் “அல்லாஹ், உங்களுக்கு “லம் யகுனில்லதீன…” (எனத் தொடங்கும் 98ஆவது) அத்தியாயத்தை ஓதிக்காட்டுமாறு எனக்குக் கட்டளையிட்டான்” என்று கூறினார்கள்.

அதற்கு உபை (ரலி), “என் பெயரைக் குறிப்பிட்டா (அப்படிச்) சொன்னான்?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “ஆம்“ என்று பதிலளித்தார்கள். அதைக் கேட்டு உபை பின் கஅப் (ரலி) (ஆனந்த மேலீட்டால்) அழுதார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 23, ஹதீஸ் எண்: 4493

حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لأُبَىٍّ ‏”‏ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ ‏”‏ ‏.‏ قَالَ آللَّهُ سَمَّانِي لَكَ قَالَ ‏”‏ اللَّهُ سَمَّاكَ لِي ‏”‏ ‏.‏ قَالَ فَجَعَلَ أُبَىٌّ يَبْكِي ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், “வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் உங்களுக்கு (குர்ஆனின் 98ஆவது அத்தியாயத்தை) ஓதிக்காட்டும்படி எனக்குக் கட்டளையிட்டான்” என்று சொன்னார்கள்.

அதற்கு உபை பின் கஅப் (ரலி), “அல்லாஹ், என் பெயரை உங்களிடம் குறிப்பிட்டானா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(ஆம்;) அல்லாஹ்தான் உங்கள் பெயரை என்னிடம் குறிப்பிட்டான்” என்று பதிலளித்தார்கள். அதைக் கேட்டு உபை பின் கஅப் (ரலி) (மகிழ்ச்சியால்) அழத் தொடங்கினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 23, ஹதீஸ் எண்: 4492

حَدَّثَنِي أَبُو دَاوُدَ، سُلَيْمَانُ بْنُ مَعْبَدٍ حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ :‏

قُلْتُ لأَنَسِ بْنِ مَالِكٍ مَنْ جَمَعَ الْقُرْآنَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ أَرْبَعَةٌ كُلُّهُمْ مِنَ الأَنْصَارِ أُبَىُّ بْنُ كَعْبٍ وَمُعَاذُ بْنُ جَبَلٍ وَزَيْدُ بْنُ ثَابِتٍ وَرَجُلٌ مِنَ الأَنْصَارِ يُكْنَى أَبَا زَيْدٍ ‏

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் குர்ஆனை (மனனம் செய்து) திரட்டியவர்கள் யாவர்?” என்று கேட்டேன்.

“அவர்கள் நால்வர்: 1. உபை பின் கஅப். 2. முஆத் பின் ஜபல். 3. ஸைத் பின் ஸாபித். 4. அன்ஸாரிகளில் ஸைத் எனப்படும் ஒருவர்” என்று அனஸ் (ரலி) பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக கத்தாதா (ரஹ்)

அத்தியாயம்: 44, பாடம்: 23, ஹதீஸ் எண்: 4491

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ قَالَ :‏

سَمِعْتُ أَنَسًا يَقُولُ جَمَعَ الْقُرْآنَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَرْبَعَةٌ كُلُّهُمْ مِنَ الأَنْصَارِ مُعَاذُ بْنُ جَبَلٍ وَأُبَىُّ بْنُ كَعْبٍ وَزَيْدُ بْنُ ثَابِتٍ وَأَبُو زَيْدٍ ‏.‏ قَالَ قَتَادَةُ قُلْتُ لأَنَسٍ مَنْ أَبُو زَيْدٍ قَالَ أَحَدُ عُمُومَتِي ‏

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் நான்கு பேர் (கொண்ட குழுவினர்) குர்ஆனை (மனனம் செய்து) திரட்டினார்கள். அவர்கள் அனைவருமே அன்ஸாரிகள் ஆவர். 1. முஆத் பின் ஜபல் 2. உபை பின் கஅப் 3. ஸைத் பின் ஸாபித் 4. அபூஸைத் (ரலி) ஆகியோர்தான் அவர்கள்” என்று அனஸ் (ரலி) கூறினார்கள்.

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “அபூஸைத் என்பவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு, “என் தந்தையின் சகோதரர்களுள் ஒருவர்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக கத்தாதா (ரஹ்)