அத்தியாயம்: 44, பாடம்: 38, ஹதீஸ் எண்: 4536

حَدَّثَنَا أَبُو عَامِرٍ الأَشْعَرِيُّ، وَأَبُو كُرَيْبٍ جَمِيعًا عَنْ أَبِي أُسَامَةَ، قَالَ أَبُو عَامِرٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا بُرَيْدٌ، عَنْ جَدِّهِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى قَالَ :‏

كُنْتُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ نَازِلٌ بِالْجِعْرَانَةِ بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ وَمَعَهُ بِلاَلٌ فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلٌ أَعْرَابِيٌّ فَقَالَ أَلاَ تُنْجِزُ لِي يَا مُحَمَّدُ مَا وَعَدْتَنِي فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ أَبْشِرْ ‏”‏ ‏.‏ فَقَالَ لَهُ الأَعْرَابِيُّ أَكْثَرْتَ عَلَىَّ مِنْ ‏”‏ أَبْشِرْ ‏”‏ ‏.‏ فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى أَبِي مُوسَى وَبِلاَلٍ كَهَيْئَةِ الْغَضْبَانِ فَقَالَ ‏”‏ إِنَّ هَذَا قَدْ رَدَّ الْبُشْرَى فَاقْبَلاَ أَنْتُمَا ‏”‏ ‏.‏ فَقَالاَ قَبِلْنَا يَا رَسُولَ اللَّهِ ‏.‏ ثُمَّ دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِقَدَحٍ فِيهِ مَاءٌ فَغَسَلَ يَدَيْهِ وَوَجْهَهُ فِيهِ وَمَجَّ فِيهِ ثُمَّ قَالَ ‏”‏ اشْرَبَا مِنْهُ وَأَفْرِغَا عَلَى وُجُوهِكُمَا وَنُحُورِكُمَا وَأَبْشِرَا ‏”‏ ‏.‏ فَأَخَذَا الْقَدَحَ فَفَعَلاَ مَا أَمَرَهُمَا بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَنَادَتْهُمَا أُمُّ سَلَمَةَ مِنْ وَرَاءِ السِّتْرِ أَفْضِلاَ لأُمِّكُمَا مِمَّا فِي إِنَائِكُمَا ‏.‏ فَأَفْضَلاَ لَهَا مِنْهُ طَائِفَةً

நபி (ஸல்) மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையில் ‘ஜிஅரானா’ எனுமிடத்தில் தங்கியிருந்தபோது அவர்களுடன் நானும் இருந்தேன்; அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் கிராமவாசியொருவர் வந்து, “முஹம்மதே! நீங்கள் எனக்கு வாக்களித்ததைக் கொடுக்கமாட்டீர்களா?” என்று கேட்டார்.

நபி (ஸல்), “நற்செய்தியைப் பெற்றுக்கொள்!” என்று சொன்னார்கள். அதற்கு அவர் “நற்செய்தியைப் பெற்றுக்கொள் என்று என்னிடம் பலமுறை சொல்லிவிட்டீர்களே!” என்று கேட்டார். உடனே நபி (ஸல்) என்னையும் பிலால் (ரலி) அவர்களையும் நோக்கி கோபத்திலுள்ள ஒருவரைப் போன்று திரும்பி, “இவர் (எனது) நற்செய்தியை ஏற்க மறுத்துவிட்டார். நீங்கள் இருவரும் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.

நாங்கள் இருவரும் “நாங்கள் ஏற்றுக் கொண்டோம், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னோம். பிறகு நபி (ஸல்), நீருள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி, அதில் தம் கைகளையும் முகத்தையும் கழுவி, அந்தப் பாத்திரத்திற்குள் உமிழ்ந்தார்கள். பிறகு “நீங்கள் இருவரும் இதில் சிறிது அருந்திவிட்டு, உங்கள் முகங்களிலும் மார்புகளிலும் ஊற்றிக்கொள்ளுங்கள்; நற்செய்தியைப் பெற்றுக்கொள்ளுங்கள்!” என்று சொன்னார்கள். நாங்கள் அந்தப் பாத்திரத்தை எடுத்து நபியவர்கள் கூறியதைப் போன்றே செய்தோம்.

அப்போது இறைநம்பிக்கையாளர்களின் அன்னை உம்மு ஸலமா (ரலி) திரைக்குப் பின்னாலிருந்து எங்கள் இருவரையும் அழைத்து, “உங்கள் அன்னைக்காகவும் (அதாவது எனக்காகவும்) அதிலிருந்து சிறிது நீரை மீதி வையுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் இருவரும் அதில் சிறிது நீரை மீதி வைத்தோம்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

Share this Hadith: