حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ، – يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيَّ – عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ يَوْمَ خَيْبَرَ ” لأُعْطِيَنَّ هَذِهِ الرَّايَةَ رَجُلاً يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ يَفْتَحُ اللَّهُ عَلَى يَدَيْهِ ” . قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ مَا أَحْبَبْتُ الإِمَارَةَ إِلاَّ يَوْمَئِذٍ – قَالَ – فَتَسَاوَرْتُ لَهَا رَجَاءَ أَنْ أُدْعَى لَهَا – قَالَ – فَدَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ فَأَعْطَاهُ إِيَّاهَا وَقَالَ ” امْشِ وَلاَ تَلْتَفِتْ حَتَّى يَفْتَحَ اللَّهُ عَلَيْكَ ” . قَالَ فَسَارَ عَلِيٌّ شَيْئًا ثُمَّ وَقَفَ وَلَمْ يَلْتَفِتْ فَصَرَخَ يَا رَسُولَ اللَّهِ عَلَى مَاذَا أُقَاتِلُ النَّاسَ قَالَ ” قَاتِلْهُمْ حَتَّى يَشْهَدُوا أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ فَإِذَا فَعَلُوا ذَلِكَ فَقَدْ مَنَعُوا مِنْكَ دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلاَّ بِحَقِّهَا وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ ”
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கைபர் போர் நாளில், “நான் (இஸ்லாமியப் படையின்) இந்தக் கொடியை ஒருவரிடம் தரப்போகிறேன். அவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்றார். அவருடைய கரங்களில் அல்லாஹ் (இந்தப் போரில்) வெற்றியை அளிப்பான்!” என்று சொன்னார்கள்.
உமர் பின் அல்கத்தாப் (ரலி) கூறினார்கள்: அன்றைய நாளைத் தவிர வேறெப்போதும் நான் தலைமைப் பொறுப்பை விரும்பியதில்லை. அதற்காக நான் அழைக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்த்து, நான் தலையை உயர்த்திக்காட்டினேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை அழைத்து, அவர்களிடம் அந்தக் கொடியைக் கொடுத்தார்கள்.
மேலும், “திரும்பிப் பார்க்காமல் செல்லுங்கள் அல்லாஹ் உங்கள் மூலம் வெற்றியளிப்பான்!” என்று சொன்னார்கள்.
உடனே அலீ (ரலி) சிறிது தூரம் சென்று நின்றுகொண்டு திரும்பிப் பார்க்காமலேயே, “அல்லாஹ்வின் தூதரே! எந்த அடிப்படையில் நான் மக்களுடன் போரிட வேண்டும்?” என்று உரத்த குரலில் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும் முஹம்மது (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் அவர்கள் உறுதியளிக்கும்வரை அவர்களுடன் போரிடுவீராக!. அதற்கு அவர்கள் இணங்கிவிட்டால், உரிய காரணம் இருந்தால் தவிர அவர்கள் உங்களிடமிருந்து தம் உயிர்களையும் உடைமைகளையும் காத்துக்கொள்வார்கள். (மனத்தைப் பொருத்தவரை) அவர்களது விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)