அத்தியாயம்: 44, பாடம்: 5, ஹதீஸ் எண்: 4412

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ، أَنَّ عَائِشَةَ قَالَتْ :‏ ‏

سَهِرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَقْدَمَهُ الْمَدِينَةَ لَيْلَةً فَقَالَ ‏”‏ لَيْتَ رَجُلاً صَالِحًا مِنْ أَصْحَابِي يَحْرُسُنِي اللَّيْلَةَ ‏”‏ ‏.‏ قَالَتْ فَبَيْنَا نَحْنُ كَذَلِكَ سَمِعْنَا خَشْخَشَةَ سِلاَحٍ فَقَالَ ‏”‏ مَنْ هَذَا ‏”‏ ‏.‏ قَالَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ مَا جَاءَ بِكَ ‏”‏ ‏.‏ قَالَ وَقَعَ فِي نَفْسِي خَوْفٌ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَجِئْتُ أَحْرُسُهُ ‏.‏ فَدَعَا لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ نَامَ ‏.‏ وَفِي رِوَايَةِ ابْنِ رُمْحٍ فَقُلْنَا مَنْ هَذَا


حَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ، يَقُولُ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَامِرِ بْنِ رَبِيعَةَ، يَقُولُ قَالَتْ عَائِشَةُ أَرِقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ لَيْلَةٍ ‏.‏ بِمِثْلِ حَدِيثِ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனாவுக்கு வந்த புதிதில் ஓர் இரவில் கண் விழித்திருந்தார்கள். பின்னர் (ஒரு நாள்), “இரவில் எனக்குக் காவல் இருப்பதற்கு என் தோழர்களில் தகுதியான ஒருவர் இருக்க வேண்டுமே!” என்று கூறினார்கள்.

அப்போது ஆயுதத்தின் ஓசையை நாங்கள் கேட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “யார்?” என்று கேட்டார்கள். வந்தவர், “(நான்) ஸஅத் பின் அபீவக்காஸ்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “எதற்காக வந்தீர்?” என்று கேட்டார்கள்.

அதற்கு ஸஅத் (ரலி), “அல்லாஹ்வின்  தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏதும் (ஆபத்து) நேர்ந்துவிடக்கூடும் என்று நான் அஞ்சினேன். அவர்களைக் காவல் காப்பதற்காக வந்தேன்” என்று பதிலளித்தார்கள். அவருக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பிரார்த்தித்தார்கள். பிறகு (நிம்மதியாக) உறங்கினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

முஹம்மது பின் ரும்ஹு (ரஹ்) வழி அறிவிப்பில், “யார்? என்று நாங்கள் கேட்டோம்” எனக் காணப்படுகிறது.

அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) வழி அறிவிப்பு, “ஓர் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (உறங்காமல்) கண் விழித்திருந்தார்கள் …” என்று ஆரம்பமாகிறது.

Share this Hadith:

Leave a Comment