அத்தியாயம்: 44, பாடம்: 50, ஹதீஸ் எண்: 4578

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، وَأَبُو أُسَامَةَ عَنْ زَكَرِيَّاءَ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لاَ حِلْفَ فِي الإِسْلاَمِ وَأَيُّمَا حِلْفٍ كَانَ فِي الْجَاهِلِيَّةِ لَمْ يَزِدْهُ الإِسْلاَمُ إِلاَّ شِدَّةً ‏”‏ ‏

இஸ்லாத்தில் (மனிதர்களாக ஏற்படுத்திக்கொள்கிற) ஒப்பந்த உறவு முறை இல்லை. அறியாமைக் காலத்தில் நடைபெற்ற ஒப்பந்த உறவுகள் இஸ்லாத்திற்குப் பிறகு இன்னும் பலத்தை அதிகரிக்கவே செய்யும். (காலாவதியாகிவிடாது) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 50, ஹதீஸ் எண்: 4577

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ عَاصِمٍ، عَنْ أَنَسٍ قَالَ :‏

حَالَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ قُرَيْشٍ وَالأَنْصَارِ فِي دَارِهِ الَّتِي بِالْمَدِينَةِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மதீனாவிலிருந்த எனது வீட்டில் வைத்து குறைஷி(முஹாஜிர்)களுக்கும் (மதீனா) அன்ஸாரிகளுக்கும் இடையே சகோதர உறவு முறையை ஏற்படுத்தினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 50, ஹதீஸ் எண்: 4576

حَدَّثَنِي أَبُو جَعْفَرٍمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، حَدَّثَنَا عَاصِمٌ الأَحْوَلُ، قَالَ :‏

قِيلَ لأَنَسِ بْنِ مَالِكٍ بَلَغَكَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لاَ حِلْفَ فِي الإِسْلاَمِ ‏”‏ ‏.‏ فَقَالَ أَنَسٌ قَدْ حَالَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ قُرَيْشٍ وَالأَنْصَارِ فِي دَارِهِ

“இஸ்லாத்தில் (மனிதர்களாக ஏற்படுத்திக் கொள்கிற ஒருவருக்கொருவர் வாரிசாகிக் கொள்ளும்) சகோதர உறவு முறை இல்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  கூறினார்கள் என்பதாக உங்களுக்குச் செய்தி கிடைத்ததா? என்று கேட்கப்பட்டது.

அதற்கு அனஸ் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனது வீட்டில் வைத்து குறைஷி (முஹாஜிர்)களுக்கும் (மதீனா) அன்ஸாரிகளுக்கும் இடையே சகோதர உறவு முறையை ஏற்படுத்தியிருந்தார்களே!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக ஆஸிம் பின் ஸுலைமான் அல்அஹ்வல் (ரஹ்)

அத்தியாயம்: 44, பாடம்: 50, ஹதீஸ் எண்: 4575

حَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا حَمَّادٌ، – يَعْنِي ابْنَ سَلَمَةَ – عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم آخَى بَيْنَ أَبِي عُبَيْدَةَ بْنِ الْجَرَّاحِ وَبَيْنَ أَبِي طَلْحَةَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (முஹாஜிரான) அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களையும் (அன்ஸாரியான) அபூதல்ஹா (ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)