அத்தியாயம்: 44, பாடம்: 52, ஹதீஸ் எண்: 4586

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ جَمِيعًا عَنْ غُنْدَرٍ، قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ أَبَا جَمْرَةَ، حَدَّثَنِي زَهْدَمُ بْنُ مُضَرِّبٍ سَمِعْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ يُحَدِّثُ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏”‏ إِنَّ خَيْرَكُمْ قَرْنِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ‏”‏ ‏.‏ قَالَ عِمْرَانُ فَلاَ أَدْرِي أَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدَ قَرْنِهِ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثَةً ‏”‏ ثُمَّ يَكُونُ بَعْدَهُمْ قَوْمٌ يَشْهَدُونَ وَلاَ يُسْتَشْهَدُونَ وَيَخُونُونَ وَلاَ يُتَّمَنُونَ وَيَنْذُرُونَ وَلاَ يُوفُونَ وَيَظْهَرُ فِيهِمُ السِّمَنُ ‏”‏


حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، ح وَحَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرٍ، الْعَبْدِيُّ حَدَّثَنَا بَهْزٌ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا شَبَابَةُ، كُلُّهُمْ عَنْ شُعْبَةَ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ وَفِي حَدِيثِهِمْ قَالَ لاَ أَدْرِي أَذَكَرَ بَعْدَ قَرْنِهِ قَرْنَيْنِ أَوْ ثَلاَثَةً ‏.‏ وَفِي حَدِيثِ شَبَابَةَ قَالَ سَمِعْتُ زَهْدَمَ بْنَ مُضَرِّبٍ وَجَاءَنِي فِي حَاجَةٍ عَلَى فَرَسٍ فَحَدَّثَنِي أَنَّهُ سَمِعَ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ ‏.‏ وَفِي حَدِيثِ يَحْيَى وَشَبَابَةَ ‏”‏ يَنْذُرُونَ وَلاَ يَفُونَ ‏”‏ ‏.‏ وَفِي حَدِيثِ بَهْزٍ ‏”‏ يُوفُونَ ‏”‏ ‏.‏ كَمَا قَالَ ابْنُ جَعْفَرٍ ‏

وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ الأُمَوِيُّ، قَالاَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا أَبِي كِلاَهُمَا، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا الْحَدِيثِ ‏”‏ خَيْرُ هَذِهِ الأُمَّةِ الْقَرْنُ الَّذِينَ بُعِثْتُ فِيهِمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ‏”‏ ‏.‏ زَادَ فِي حَدِيثِ أَبِي عَوَانَةَ قَالَ وَاللَّهُ أَعْلَمُ أَذَكَرَ الثَّالِثَ أَمْ لاَ ‏.‏ بِمِثْلِ حَدِيثِ زَهْدَمٍ عَنْ عِمْرَانَ وَزَادَ فِي حَدِيثِ هِشَامٍ عَنْ قَتَادَةَ ‏”‏ وَيَحْلِفُونَ وَلاَ يُسْتَحْلَفُونَ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையினர் ஆவர். பிறகு உங்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் தலைமுறையினருக்குப் பிறகு, “அவர்களை அடுத்து வருபவர்கள்“ என்று இரண்டு தடவை கூறினார்களா, மூன்று முறை கூறினார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.

பிறகு “அவர்களுக்குப்பின் ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கிறார்கள். அவர்கள் சாட்சியமளிக்கும்படி கோரப்படாமலேயே (தாமாக முன்வந்து) சாட்சியம் அளிப்பார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள்; அவர்களிடம் எதையும் நம்பி ஒப்படைக்கப்படமாட்டாது. அவர்கள் நேர்ச்சை செய்வார்கள்; ஆனால், அதை நிறைவேற்றமாட்டார்கள். அவர்களிடையே உண்டு கொழுக்கும் (தொந்தி பெருக்கும்) நிலை தோன்றும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)


குறிப்புகள் :

முஹம்மது பின் ராஃபிஉ (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் தலைமுறையினர் பற்றிக் குறிப்பிட்ட பிறகு இரண்டு தலைமுறையினரைக் கூறினார்களா, அல்லது மூன்று தலைமுறையினரைக் கூறினார்களா என்பது எனக்குத் தெரியவில்லை” என்று இடம்பெற்றுள்ளது.

ஷபாபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “ஸஹ்தம் பின் முளர்ரிப் (ரஹ்) ஒரு தேவைக்காகக் குதிரையில் என்னிடம் வந்திருந்தபோது, இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) கூறியதாக (மேற்கண்ட ஹதீஸை) அறிவித்தார்கள்” என்று காணப்படுகிறது.

யஹ்யா பின் ஸயீத், ஷபாபா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் “நிறைவேற்றமாட்டார்கள்“ என்பதைக் குறிக்க “வலா யூஃபூன“ என்பதற்குப் பதிலாக “வலா யஃபூன“ என்று இடம்பெற்றுள்ளது.

பஹ்ஸு பின் அஸத் (ரஹ்) வழி அறிவிப்பில், “யூஃபூன“ என்றே -முஹம்மது பின் ஜஅஃபர் (ரஹ்) வழி அறிவிப்பிலுள்ளதைப் போன்றே காணப்படுகிறது.

கத்தாதா (ரஹ்) வழி அறிவிப்பில், “இந்தச் சமுதாயத்தில் சிறந்தவர்கள், நான் அனுப்பப்பெற்றுள்ள  இந்தத் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

அபூஅவானா (ரஹ்) வழி அறிவிப்பில், “மூன்றாவது தடவையில் “பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள் என்று) கூறினார்களா, இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

கத்தாதா (ரஹ்) அவர்களிடமிருந்து ஹிஷாம் (ரஹ்) அறிவிக்கும் அறிவிப்பில், “சத்தியம் செய்யும்படி கேட்கப்படாமலேயே சத்தியப் பிரமாணம் செய்ய அவர்கள் தாமாகவே முன்வருவார்கள்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: