அத்தியாயம்: 44, பாடம்: 59, ஹதீஸ் எண்: 4600

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، – يَعْنِي ابْنَ مُحَمَّدٍ – عَنْ ثَوْرٍ، عَنْ أَبِي الْغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ نَزَلَتْ عَلَيْهِ سُورَةُ الْجُمُعَةِ فَلَمَّا قَرَأَ ‏{‏ وَآخَرِينَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوا بِهِمْ‏}‏ قَالَ رَجُلٌ مَنْ هَؤُلاَءِ يَا رَسُولَ اللَّهِ فَلَمْ يُرَاجِعْهُ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى سَأَلَهُ مَرَّةً أَوْ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا – قَالَ – وَفِينَا سَلْمَانُ الْفَارِسِيُّ – قَالَ – فَوَضَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدَهُ عَلَى سَلْمَانَ ثُمَّ قَالَ ‏”‏ لَوْ كَانَ الإِيمَانُ عِنْدَ الثُّرَيَّا لَنَالَهُ رِجَالٌ مِنْ هَؤُلاَءِ ‏”‏

நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்தபோது அவர்களுக்கு ‘அல்ஜும்ஆ’ எனும் (62ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது. நபி (ஸல்) அ(ந்த அத்தியாயத்)தை ஓதிக்கொண்டு வந்து, “இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இத்தூதரை அவன் அனுப்பியுள்ளான்)” எனும் (62:3) வசனம் வந்தபோது, மக்களில் ஒருவர், “அந்த (ஏனைய) மக்கள் யார், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். ஒரு தடவை, அல்லது இரண்டு தடவை, அல்லது மூன்று தடவை அவர் கேட்கும்வரை அவருக்கு நபி (ஸல்) பதிலளிக்கவில்லை.

அப்போது எங்களிடையே ஸல்மான் அல்ஃபாரிஸீ (ரலி) இருந்தார்கள். நபி (ஸல்) ஸல்மான் (ரலி) மீது தமது கையை வைத்துவிட்டுப் பிறகு, “ஸுரையா நட்சத்திரக் குழுமத்தின் அருகில் இறைநம்பிக்கை (ஈமான்) இருந்தாலும், இவர்களில் சிலர் அதை அடைந்தே தீருவர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

Share this Hadith: