அத்தியாயம்: 45, பாடம்: 16, ஹதீஸ் எண்: 4661

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ :‏

اقْتَتَلَ غُلاَمَانِ غُلاَمٌ مِنَ الْمُهَاجِرِينَ وَغُلاَمٌ مِنَ الأَنْصَارِ فَنَادَى الْمُهَاجِرُ أَوِ الْمُهَاجِرُونَ يَا لَلْمُهَاجِرِينَ ‏.‏ وَنَادَى الأَنْصَارِيُّ يَا لَلأَنْصَارِ ‏.‏ فَخَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏”‏ مَا هَذَا دَعْوَى أَهْلِ الْجَاهِلِيَّةِ ‏”‏ ‏.‏ قَالُوا لاَ يَا رَسُولَ اللَّهِ إِلاَّ أَنَّ غُلاَمَيْنِ اقْتَتَلاَ فَكَسَعَ أَحَدُهُمَا الآخَرَ قَالَ ‏”‏ فَلاَ بَأْسَ وَلْيَنْصُرِ الرَّجُلُ أَخَاهُ ظَالِمًا أَوْ مَظْلُومًا إِنْ كَانَ ظَالِمًا فَلْيَنْهَهُ فَإِنَّهُ لَهُ نَصْرٌ وَإِنْ كَانَ مَظْلُومًا فَلْيَنْصُرْهُ ‏”‏ ‏

முஹாஜிர்களில் ஓர் இளைஞரும் அன்ஸாரிகளில் ஓர் இளைஞரும் (ஒரு போரின்போது) சண்டையிட்டுக்கொண்டனர். அப்போது அந்த முஹாஜிர், “முஹாஜிர்களே (உதவிக்கு வாருங்கள்)” என்று அழைத்தார். அந்த அன்ஸாரி, அன்ஸாரிகளே! (உதவிக்கு வாருங்கள்)!” என்று அழைத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அங்கு வந்து, “என்ன இது, அறியாமைக் காலத்தவரின் கூப்பாடு?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “இல்லை; அல்லாஹ்வின் தூதரே! இளைஞர்கள் இருவர் சண்டையிட்டுக்கொண்டனர். அவர்களில் ஒருவர் மற்றவரின் புட்டத்தில் அடித்துவிட்டார்” என்று கூறினர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “பரவாயில்லை! ஒருவர் தம் சகோதரர் அநீதியிழைப்பவராக இருந்தாலும் அநீதிக்குள்ளானவராக இருந்தாலும் அவருக்கு உதவட்டும். (எவ்வாறெனில்) அவர் அநீதியிழைப்பவராக இருந்தால், (அநீதியிழைக்கவிடாமல்) அவரைத் தடுக்கட்டும்! அதுவே அவருக்குச் செய்யும் உதவியாகும். அவர் அநீதியிழைக்கப்பட்டவராக இருந்தால், அவருக்கு உதவி செய்யட்டும்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

Share this Hadith: