அத்தியாயம்: 45, பாடம்: 16, ஹதீஸ் எண்: 4663

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَ ابْنُ رَافِعٍ حَدَّثَنَا وَقَالَ الآخَرَانِ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ :‏

كَسَعَ رَجُلٌ مِنَ الْمُهَاجِرِينَ رَجُلاً مِنَ الأَنْصَارِ فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَسَأَلَهُ الْقَوَدَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ “‏ دَعُوهَا فَإِنَّهَا مُنْتِنَةٌ ‏”‏ ‏


قَالَ ابْنُ مَنْصُورٍ فِي رِوَايَتِهِ عَمْرٌو قَالَ سَمِعْتُ جَابِرًا ‏

முஹாஜிர்களில் ஒருவர் அன்ஸாரி ஒருவரைப் புட்டத்தில் அடித்துவிட்டார். அந்த அன்ஸாரி நபி (ஸல்) அவர்களிடம் வந்து அவரைப் பழிக்குப் பழி வாங்க வேண்டுமெனக் கோரினார். அப்போது நபி (ஸல்), “இத்தகைய (இன மாச்சரியங்களைத் தூண்டும்) கூப்பாடுகளைக் கைவிடுங்கள். இவை துர்நாற்றம் வீசக்கூடியவை” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

குறிப்பு :

இபுனு மன்ஸூர் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்றேன்” என்று அம்ரு (ரஹ்) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: