حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ أَبَا إِسْحَاقَ، يُحَدِّثُ عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ :
إِنَّ مُحَمَّدًا صلى الله عليه وسلم قَالَ ” أَلاَ أُنَبِّئُكُمْ مَا الْعَضْهُ هِيَ النَّمِيمَةُ الْقَالَةُ بَيْنَ النَّاسِ ” . وَإِنَّ مُحَمَّدًا صلى الله عليه وسلم قَالَ ” إِنَّ الرَّجُلَ يَصْدُقُ حَتَّى يُكْتَبَ صِدِّيقًا وَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ كَذَّابًا ”
முஹம்மது (ஸல்),“அல்அள்ஹு’ (பொய், அவதூறு) என்றால் என்னவென்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று (எங்களிடம்) கேட்டுவிட்டு, “அது மக்களிடையே கோள் மூட்டுவதாகும்” என்று கூறினார்கள். மேலும், “ஒருவர் (பேசினால்) உண்மையே பேசுவார். இறுதியில், ‘ஸித்தீக்’ (வாய்மையாளர்) எனப் பதிவு செய்யப்படுவார். ஒருவர் பொய் பேசிக்கொண்டேயிருப்பார். இறுதியில் ‘பெரும் பொய்யர்’ எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்” என்றும் முஹம்மது (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)