حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :
قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” رَغِمَ أَنْفُهُ ثُمَّ رَغِمَ أَنْفُهُ ثُمَّ رَغِمَ أَنْفُهُ ” . قِيلَ مَنْ يَا رَسُولَ اللَّهِ قَالَ ” مَنْ أَدْرَكَ وَالِدَيْهِ عِنْدَ الْكِبَرِ أَحَدَهُمَا أَوْ كِلَيْهِمَا ثُمَّ لَمْ يَدْخُلِ الْجَنَّةَ ”
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ، حَدَّثَنِي سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ رَغِمَ أَنْفُهُ ” . ثَلاَثًا ثُمَّ ذَكَرَ مِثْلَهُ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவனது மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகு அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்” என்று சொன்னார்கள். “அல்லாஹ்வின் தூதரே! யார்?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கள், “தம் தாய் தந்தையரில் ஒருவரையோ அவ்விருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்த பிறகும் (அவர்களுக்கு ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவன்தான்” என்றார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
குறிப்புகள் :
ஸுலைமான் பின் பிலால் (ரஹ்) வழி அறிவிப்பு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்’ என்று மூன்று தடவை சொன்னார்கள் …” என்று ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
*எதையும் கவ்வுகின்ற உறுப்பு, வாயே அன்றி மூக்கு அல்ல. எனவே, ‘மூக்கு மண்ணைக் கவ்வட்டும்’ என்பது குறியீட்டுச் சொல்தான். எனவே, அதை நேரடிப் பொருளில் தமிழ்ப் படுத்துவது சரியல்ல. ஒருவரது செயல்/பேச்சு வெறுப்பூட்டுவதாக இருப்பதைக் குறிப்பதற்கு அரபியரின் மொழி வழக்கில், ’அவரது மூக்கு மண்ணைக் கவ்வட்டும்’ என்பர். அதற்கு, “அவரது செயல்/பேச்சு எனக்கு வெறுப்பூட்டுகின்றது” என்பது பொருளாம்.