அத்தியாயம்: 45, பாடம்: 5, ஹதீஸ் எண்: 4613

حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، حَدَّثَنِي مُعَاوِيَةُ، – يَعْنِي ابْنَ صَالِحٍ – عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ نَوَّاسِ بْنِ سِمْعَانَ قَالَ :‏

أَقَمْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالْمَدِينَةِ سَنَةً مَا يَمْنَعُنِي مِنَ الْهِجْرَةِ إِلاَّ الْمَسْأَلَةُ كَانَ أَحَدُنَا إِذَا هَاجَرَ لَمْ يَسْأَلْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ شَىْءٍ – قَالَ – فَسَأَلْتُهُ عَنِ الْبِرِّ وَالإِثْمِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ الْبِرُّ حُسْنُ الْخُلُقِ وَالإِثْمُ مَا حَاكَ فِي نَفْسِكَ وَكَرِهْتَ أَنْ يَطَّلِعَ عَلَيْهِ النَّاسُ ‏”‏ ‏

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மதீனாவில் ஓராண்டுக் காலம் (மட்டும்) தங்கியிருந்தேன். அவர்களிடம் கேள்வி கேட்டு விளக்கம் தெரிந்துகொள்வ(து இயலாமல் போய் விடுமோ என்ப)தே ஹிஜ்ரத் செய்(து மதீனாவில் வந்து நிரந்தரமாகக் குடியேறு)வதற்கு எனக்குத் தடையாக இருந்தது. (நபியவர்கள் வெளியூரிலிருந்து வருபவர்களின் ஐயங்களுக்கு விளக்கம் சொல்வதற்கு முன்னுரிமை அளித்து வந்தார்கள்) எங்களில் ஒருவர் ஹிஜ்ரத் செய்து(மதீனாவுக்கு வந்து குடியேறி)விட்டால், அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எதைப் பற்றியும் கேட்பதில்லை. நான் நபியவர்களிடம் நன்மையைப் பற்றியும் தீமையைப் பற்றியும் கேட்டேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நன்மை என்பது, நற்பண்பாகும். தீமை என்பது, எந்தச் செயல் குறித்து உனது உள்ளத்தில் நெருடல் ஏற்படுவதுடன், அதைப் பற்றி மக்கள் அறிந்துகொள்வதை நீ வெறுப்பாயோ அதுவாகும்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி)

Share this Hadith: