அத்தியாயம்: 45, பாடம்: 50, ஹதீஸ் எண்: 4757

حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، – يَعْنِي ابْنَ زَيْدٍ – حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :‏

جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَتَى السَّاعَةُ قَالَ ‏”‏ وَمَا أَعْدَدْتَ لِلسَّاعَةِ ‏”‏ ‏.‏ قَالَ حُبَّ اللَّهِ وَرَسُولِهِ قَالَ ‏”‏ فَإِنَّكَ مَعَ مَنْ أَحْبَبْتَ ‏”‏ ‏.‏ قَالَ أَنَسٌ فَمَا فَرِحْنَا بَعْدَ الإِسْلاَمِ فَرَحًا أَشَدَّ مِنْ قَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏”‏ فَإِنَّكَ مَعَ مَنْ أَحْبَبْتَ ‏”‏ ‏.‏ قَالَ أَنَسٌ فَأَنَا أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ فَأَرْجُو أَنْ أَكُونَ مَعَهُمْ وَإِنْ لَمْ أَعْمَلْ بِأَعْمَالِهِمْ


حَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْغُبَرِيُّ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا ثَابِتٌ الْبُنَانِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلَمْ يَذْكُرْ قَوْلَ أَنَسٍ فَأَنَا أُحِبُّ ‏.‏ وَمَا بَعْدَهُ ‏‏

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாள் எப்போது வரும்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “மறுமைக்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கின்றாய்?” என்று கேட்டார்கள். அவர், “அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் கொண்ட அன்பை” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அப்படியானால், நீ அன்புகொண்டோர்களுடன் (மறுமையில்) இருப்பாய்” என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அப்படியானால், நீ அன்புகொண்டோர்களுடன் (மறுமையில்) நீ இருப்பாய்” என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம்! அதைப் போன்று நாங்கள் இஸ்லாத்தைத் தழுவியபின் வேறு எதற்காகவும் மகிழ்ச்சியடைந்ததில்லை.

ஆகவே, நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அபூபக்ரு (ரலி) அவர்களையும் உமர் (ரலி) அவர்களையும் நேசிக்கின்றேன். மேலும், அவர்களுடைய நற்செயல்கள் அளவுக்கு நான் நற்செயல்கள் செய்யாவிட்டாலும் அவர்களை நேசித்த காரணத்தால் (மறுமையில்) அவர்களுடன் நான் இருப்பேன் என்று நம்புகின்றேன்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


குறிப்பு :

ஜஅஃபர் பின் ஸுலைமான் (ரஹ்) வழி அறிவிப்பில், “ … ஆகவே, நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும்… நேசிக்கின்றேன்” என்பதும் அதற்குப் பின்னுள்ளதும் இடம் பெறவில்லை.

Share this Hadith: