அத்தியாயம்: 46, பாடம்: 1, ஹதீஸ் எண்: 4770

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ عَنْ يَحْيَى بْنِ عُقَيْلٍ، عَنْ يَحْيَى بْنِ يَعْمُرَ، عَنْ أَبِي الأَسْوَدِ الدِّئَلِيِّ، قَالَ :‏

قَالَ لِي عِمْرَانُ بْنُ الْحُصَيْنِ أَرَأَيْتَ مَا يَعْمَلُ النَّاسُ الْيَوْمَ وَيَكْدَحُونَ فِيهِ أَشَىْءٌ قُضِيَ عَلَيْهِمْ وَمَضَى عَلَيْهِمْ مِنْ قَدَرِ مَا سَبَقَ أَوْ فِيمَا يُسْتَقْبَلُونَ بِهِ مِمَّا أَتَاهُمْ بِهِ نَبِيُّهُمْ وَثَبَتَتِ الْحُجَّةُ عَلَيْهِمْ فَقُلْتُ بَلْ شَىْءٌ قُضِيَ عَلَيْهِمْ وَمَضَى عَلَيْهِمْ قَالَ فَقَالَ أَفَلاَ يَكُونُ ظُلْمًا قَالَ فَفَزِعْتُ مِنْ ذَلِكَ فَزَعًا شَدِيدًا وَقُلْتُ كُلُّ شَىْءٍ خَلْقُ اللَّهِ وَمِلْكُ يَدِهِ فَلاَ يُسْأَلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْأَلُونَ ‏.‏ فَقَالَ لِي يَرْحَمُكَ اللَّهُ إِنِّي لَمْ أُرِدْ بِمَا سَأَلْتُكَ إِلاَّ لأَحْزُرَ عَقْلَكَ إِنَّ رَجُلَيْنِ مِنْ مُزَيْنَةَ أَتَيَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالاَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ مَا يَعْمَلُ النَّاسُ الْيَوْمَ وَيَكْدَحُونَ فِيهِ أَشَىْءٌ قُضِيَ عَلَيْهِمْ وَمَضَى فِيهِمْ مِنْ قَدَرٍ قَدْ سَبَقَ أَوْ فِيمَا يُسْتَقْبَلُونَ بِهِ مِمَّا أَتَاهُمْ بِهِ نَبِيُّهُمْ وَثَبَتَتِ الْحُجَّةُ عَلَيْهِمْ فَقَالَ ‏”‏ لاَ بَلْ شَىْءٌ قُضِيَ عَلَيْهِمْ وَمَضَى فِيهِمْ وَتَصْدِيقُ ذَلِكَ فِي كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ ‏{‏ وَنَفْسٍ وَمَا سَوَّاهَا * فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا‏}‏ ‏”‏

என்னிடம் இம்ரான் பின் அல்ஹுஸைன் (ரலி), “மனிதர்கள் இன்று நற்செயல் புரிவதும் அதற்காக முனைந்து செயலாற்றுவதும் ஏற்கெனவே அவர்கள்மீது தீர்மானிக்கப்பட்டுவிட்ட, முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்ட விதியின் அடிப்படையிலா? அல்லது அவர்களுக்கெதிரான ஆதாரத்தை நிலை நிறுத்தும் வகையில், அவர்களுடைய இறைத்தூதர்கள் அவர்களிடம் கொண்டுவந்துள்ளவற்றை ஏற்றுச் செயல்படுத்துவதைப் பொருத்தா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “இல்லை; ஏற்கெனவே அவர்கள்மீது தீர்மானிக்கப்பட்டுவிட்ட, நடந்துமுடிந்த (விதியின்) அடிப்படையில்தான்” என்று சொன்னேன்.

அதற்கு இம்ரான் (ரலி), “இது அநீதியாகாதா?” என்று கேட்டார்கள். அதைக் கேட்டு நான் கடுமையாக அதிர்ந்துவிட்டேன்! மேலும், “அனைத்தும் அல்லாஹ்வின் படைப்பே; அவனது அதிகாரத்துக்குட்பட்டவையே. அவனுடைய செயல் குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால், மனிதர்கள் (அவனால்) விசாரிக்கப்படுவார்கள்” என்று சொன்னேன்.

அப்போது இம்ரான் (ரலி), “அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும். உங்கள் அறிவைப் சோதிப்பதற்காகவே நான் கேள்வி கேட்டேனே தவிர, வேறெதற்கும் அல்ல” என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள்:

‘முஸைனா’ குலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! மனிதர்கள் இன்று நற்செயல் புரிவதும் அதற்காக முனைந்து செயல்படுவதும் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட, முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்ட விதியின் அடிப்படையிலா? அல்லது அவர்களுக்கெதிரான ஆதாரத்தை நிலைநிறுத்தும் வகையில், அவர்களுடைய இறைத்தூதர்கள் அவர்களிடம் கொண்டுவந்துள்ளவற்றை ஏற்றுச் செயல்படுத்துவதைப் பொருத்தா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இல்லை; ஏற்கெனவே அவர்கள் மீது தீர்மானிக்கப்பட்டுவிட்ட, அவர்கள் விஷயத்தில் முடிவாகிவிட்ட (விதியின்) அடிப்படையில்தான்” என்று கூறிவிட்டு, “இதை உண்மைப்படுத்தும் சான்று, வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளது” என்று கூறி, பின்வரும் (91:7-8) இறை வசனங்களை ஓதிக்காட்டினார்கள்:

ஆத்மாவின் மீதும் அதைச் சீரமைத்த ஆற்றலாளன் மீதும் ஆணையாக! அகத்தின் அழுக்கையும் தூய்மையையும் (தனித்தனியே பிரித்து, அல்லாஹ்) அதற்கு உணர்த்திக் காட்டிவிட்டான்“

அறிவிப்பாளர் : இம்ரான் பின் அல்ஹுஸைன் (ரலி) வழியாக அபுல்அஸ்வத் அத்திஅலீ (ரஹ்)

Share this Hadith: