حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، وَإِبْرَاهِيمُ بْنُ دِينَارِ، وَابْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ، وَأَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ جَمِيعًا عَنِ ابْنِ عُيَيْنَةَ، – وَاللَّفْظُ لاِبْنِ حَاتِمٍ وَابْنِ دِينَارٍ – قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَمْرٍو، عَنْ طَاوُسٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ :
قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” احْتَجَّ آدَمُ وَمُوسَى فَقَالَ مُوسَى يَا آدَمُ أَنْتَ أَبُونَا خَيَّبْتَنَا وَأَخْرَجْتَنَا مِنَ الْجَنَّةِ فَقَالَ لَهُ آدَمُ أَنْتَ مُوسَى اصْطَفَاكَ اللَّهُ بِكَلاَمِهِ وَخَطَّ لَكَ بِيَدِهِ أَتَلُومُنِي عَلَى أَمْرٍ قَدَّرَهُ اللَّهُ عَلَىَّ قَبْلَ أَنْ يَخْلُقَنِي بِأَرْبَعِينَ سَنَةً ” . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ” فَحَجَّ آدَمُ مُوسَى فَحَجَّ آدَمُ مُوسَى ” . وَفِي حَدِيثِ ابْنِ أَبِي عُمَرَ وَابْنِ عَبْدَةَ قَالَ أَحَدُهُمَا خَطَّ . وَقَالَ الآخَرُ كَتَبَ لَكَ التَّوْرَاةَ بِيَدِهِ
ஆதம் (அலை) அவர்களும் மூஸா (அலை) அவர்களும் தர்க்கம் செய்துகொண்டார்கள். மூஸா (அலை), “ஆதம் அவர்களே! எங்கள் தந்தையான நீங்கள் (உங்கள் பாவத்தின் காரணத்தால்) எங்களை இழப்புக்கு உள்ளாக்கிவிட்டீர்கள்; சொர்க்கத்திலிருந்து எங்களை வெளியேற்றிவிட்டீர்கள்” என்று சொன்னார்கள்.
அதற்கு மூஸாவிடம் ஆதம் (அலை), “அல்லாஹ், தன்னுடன் உரையாடுவதற்குத் தேர்ந்தெடுத்து, தனது கையால் உமக்காக (வேதத்தை) எழுதிய மூஸாவாகிய நீர், அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என்மீது அவன் விதித்துவிட்ட ஒரு செயலுக்காக என்னைப் பழிக்கின்றீரா?” என்று கேட்டார்கள்.
(இந்த பதில் மூலம்) மூஸா (அலை) அவர்களை ஆதம் (அலை) தோற்கடித்துவிட்டார்கள்; தோற்கடித்துவிட்டார்கள்” என (இரண்டு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
குறிப்புகள் :
இப்னு அபீஉமர் அல்மக்கீ (ரஹ்), அஹ்மது பின் அப்தா (ரஹ்) ஆகிய இருவரின் அறிவிப்புகளில் ஒன்றில், ‘தவ்ராத்தை வரைந்தான்’ என்றும் மற்றொன்றில் ‘அவன் தனது கரத்தால் உமக்காகத் தவ்ராத்தை எழுதினான்’ என்று ஆதம் (அலை) கூறியதாகக் காணப்படுகிறது.