அத்தியாயம்: 47, பாடம்: 5, ஹதீஸ் எண்: 4806

حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ يَتَقَارَبُ الزَّمَانُ وَيُقْبَضُ الْعِلْمُ وَتَظْهَرُ الْفِتَنُ وَيُلْقَى الشُّحُّ وَيَكْثُرُ الْهَرْجُ ‏”‏ ‏.‏ قَالُوا وَمَا الْهَرْجُ قَالَ ‏”‏ الْقَتْلُ ‏”‏ ‏.‏

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الزُّهْرِيُّ، أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ يَتَقَارَبُ الزَّمَانُ وَيُقْبَضُ الْعِلْمُ ‏”‏ ‏.‏ ثُمَّ ذَكَرَ مِثْلَهُ ‏.‏

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ يَتَقَارَبُ الزَّمَانُ وَيَنْقُصُ الْعِلْمُ ‏”‏ ‏.‏ ثُمَّ ذَكَرَ مِثْلَ حَدِيثِهِمَا ‏.‏

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، – يَعْنُونَ ابْنَ جَعْفَرٍ – عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، ح

وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، وَأَبُو كُرَيْبٍ وَعَمْرٌو النَّاقِدُ قَالُوا حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سُلَيْمَانَ، عَنْ حَنْظَلَةَ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، ح

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، ح

وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ أَبِي يُونُسَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، كُلُّهُمْ قَالَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ بِمِثْلِ حَدِيثِ الزُّهْرِيِّ عَنْ حُمَيْدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ غَيْرَ أَنَّهُمْ لَمْ يَذْكُرُوا ‏ “‏ وَيُلْقَى الشُّحُّ ‏”‏ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(இறுதிக் காலத்தில்) காலம் சுருங்கிவிடும்; மார்க்கக் கல்வியறிவு கைப்பற்றப்பட்டுவிடும்; குழப்பங்கள் வெளிப்படும்; (மக்களின் மனங்களில்) கருமித்தனம் உருவாக்கப்படும்; ‘ஹர்ஜு’ பெருகிவிடும்” என்று சொன்னார்கள்.

“மக்கள், ‘ஹர்ஜு’ என்றால் என்ன?” என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘கொலை’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்புகள் :

ஷுஐப் (ரஹ்) வழி அறிவிப்பு, “காலம் சுருங்கிவிடும்; கல்வி கைப்பற்றப்பட்டுவிடும் …” என்று ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

அப்துல் அஃலா (ரஹ்) வழி அறிவிப்பு,“காலம் சுருங்கிவிடும்; கல்வி குறைந்துவிடும் …” என்று ஆரம்பமாகி, மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே தொடருகிறது.

அபூயூனுஸ் (ரஹ்) போன்றோரின் அறிவிப்புகளில், “கருமித்தனம் உருவாக்கப்படும்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

Share this Hadith: